என் மலர்
விளையாட்டு
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று போட்டி நடந்தது.
- இதில் அமெரிக்கா வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே கோகோ காப் சிறப்பாக ஆடினார். இறுதியில், கோகோ காப் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு185 ரன்கள் எடுத்தது.
டப்ளின்:
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்கள் எடுத்து அசத்தினார். சாம்சன் 40 ரன்னும், ரிங்கு சிங் 38 ரன்னும் எடுத்தனர். ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால்பிரின் மட்டும் போராடினார். அவர் அரை சதமடித்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்க் அடைர்23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், அயர்லாந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்தியா சார்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- அதிகபட்சமாக ருதுராஜ் 58 ரன்கள் எடுத்து அசத்தினார்.
- 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டப்ளினில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதைதொடர்ந்து, இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இதில், அதிகபட்சமாக ருதுராஜ் 58 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து, சாம்சன் 40 ரன்களும், ரங்கு சிங் 38 ரன்களும் எடுத்தனர். ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 ரன்களும், திலக் வர்மா ஒரு ரன்னும் எடுத்தனர்.
வாஷிங்டன் சுந்தர் ரன் எடுக்காமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.
இதைதொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.
- அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2-வது டி20 போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டப்ளினில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.
- இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது அபார பந்துவீச்சு காரணமாக உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை தனது பந்துவீச்சால் திணறடித்தவர் என்பதும் கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்ததே.
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த பவுலர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
- ஸ்பெயின் அணி வீராங்கனை கார்மோனா ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
- இதன் மூலம் ஸ்பெயின் அணி முதல்முறையாக கோப்பையை உச்சி முகர்வதுடன் புதிய சாதனையையும் படைத்துள்ளது.
சிட்னி:
32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. பிரிஸ்பேனில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை பெற்றது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல்முறையாக நுழைந்துள்ள இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதியது. 32 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இறுதிப்போட்டியை எட்டியிராத இரு அணிகள் இறுதியுத்தத்தில் சந்திப்பது இது முதல் தடவையாகும்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி வீராங்கனை கார்மோனா ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதன் மூலம் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து நடந்த 2-வது பாதியில் இரு அணிகளும் கோல் போட முடியாமல் திணறினர். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் மூலம் ஸ்பெயின் அணி முதல்முறையாக கோப்பையை உச்சி முகர்வதுடன் புதிய சாதனையையும் படைத்துள்ளது. அதாவது வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. ஸ்பெயின் அணி 2010-ம் ஆண்டு ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மகுடம் சூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- லயனல் மெஸ்ஸி சமீபத்தில்தான் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்
- இறுதி ஆட்டம் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்காவில் நடைபெற்றது
அமெரிக்க கால்பந்தாட்டத்தில் பிரபலமானது லீக்ஸ் கோப்பை போட்டிகள்.
இந்த கோப்பைக்கான இறுதி ஆட்டம் அமெரிக்காவின் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், நாஷ்வில் எஸ்சி (Nashville SC) அணி, இன்டர் மியாமி அணியோடு மோதியது.
உலகப்புகழ் பெற்ற அர்ஜென்டினாவின் வீரரான லயனல் மெஸ்ஸி, சமீபத்தில் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
எனவே இந்த போட்டிகளை உலகெங்குமிலுள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கண்டு வந்தனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மெஸ்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டித்தொடரில் மெஸ்ஸி 10 கோல்களை போட்டார்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 1-1 என்ற செட் கணக்கில் கோல் அடித்து சமன் செய்தன.
எனவே போட்டியின் வெற்றி பெனால்டியை வைத்து முடிவு செய்யப்பட்டது.
பெனால்டிகளில் 10க்கு 9 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
- ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன்.
- டோனி ரெய்னா மட்டும் இடையே வரலனா அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.
ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தடுத்து நடக்கவுள்ளது. இதில் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இருதரப்பு தொடரில் இஷாந்த் சர்மா மோசமான கெட்ட வார்த்தையால் தம்மை திட்டியதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். குறிப்பாக ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன். இங்கே நான் உண்மையாக பேசுகிறேன். அந்தப் போட்டியை தொடர்ந்து அகமதாபாத் நகரில் அடுத்த நாள் நடைபெற இருந்த டி20 போட்டிக்காக நாங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டோம். அப்போது நான் விராட் கோலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்குமிடையே உண்மையாக என்ன நடந்தது என சிலர் கேட்டனர்.
அப்போது அங்கிருந்த இஷாந்த் சர்மா என்னிடம் கெட்ட வார்த்தை பேசியதாக அவர்களிடம் சொன்னார். அதற்கு நீங்கள் திரும்ப வாங்கிக்கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கு தகுதியானவர் தான் என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தளவுக்கு அது மோசமான தருணமாக அமைந்தது. இருப்பினும் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இடையே வந்தனர். அவர்களுக்கு யார் மீது தவறு இருந்தது என்று தெரிந்த காரணத்தால் உடனடியாக நிலைமையை சமாளித்தனர். இல்லையெனில் அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.
குறிப்பாக எனக்கு 2 போட்டிகள் தடையுடன் 5 போட்டிகளுக்கான சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு அந்த தருணம் மோசமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ருதுராஜ் வருங்காலங்களில் இந்தியாவின் கேப்டனாக செயல்படும் அளவுக்கு சிறந்த பொறுமையான குணத்தை கொண்டுள்ளார்.
- ருதுராஜ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவதற்காக நான் காத்திருக்கிறேன். ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே நல்ல திறமையை கொண்ட வீரர்கள்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் ரோகித், கோலி, பாண்ட்யா, ஜடேஜா, கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், ருதுராஜ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் வருங்கால கேப்டனாக செயல்பட இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் கிரண் மோர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ருதுராஜ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவதற்காக நான் காத்திருக்கிறேன். ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே நல்ல திறமையை கொண்ட வீரர்கள். அதில் ருதுராஜ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் தன்மையைக் கொண்டவர். ஏனெனில் அவருடைய அடிப்படை டெக்னிக் மிகவும் சரியாக இருக்கிறது.
அத்துடன் அவர் வருங்காலங்களில் இந்தியாவின் கேப்டனாக செயல்படும் அளவுக்கு சிறந்த பொறுமையான குணத்தை கொண்டுள்ளார். குறிப்பாக எம்எஸ் டோனி தலைமையில் விளையாடியுள்ள அவர் அணியை எவ்வாறு கட்டுப்படுத்துவது, கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது போன்ற கேப்டன்ஷிப் அம்சங்களை நிச்சயமாக கற்று கொண்டிருப்பார். எனவே நல்ல தரமான வீரரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர்.
- உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மெல்போர்ன்:
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 'பேபுலஸ் போர்' (மிகச்சிறந்த நால்வர்) என்ற வார்த்தை பிரபலமானது. வீராட்கோலி (இந்தியா), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது இந்த அடை மொழியில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் 5-வதாக இணைந்துள்ளார். அதனால் 'பேப் 5' என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த 5 வீரர்களில் உலக கோப்பை போட்டியில் வீராட்கோலியும், ஸ்டீவ் சுமித் தான் முத்திரை பதிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் இந்த 5 பேருமே ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட், 20 ஓவர் என 3 வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக இருப்பது வீராட்கோலி, ஸ்டீவ் சுமித் மட்டுமே.
இருவரும் இந்த உலக கோப்பை போட்டியில் தங்களது முத்திரையை பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆசிய அணிகள் இந்தியாவில் சிறப்பாக செயல்படும்.
ஆனால் சமீபகாலமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் அபாரமாக ஆடுகிறார்கள். இந்தியாவில் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிடு கிறார்கள். இதனால் உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.
34 வயதான வீராட்கோலி டெஸ்டில் 8676 ரன்னும் (111 போட்டி) ஒருநாள் போட்டியில் 12,898 ரன்னும் (275), 20 ஓவரில் 4008 ரன்னும் (115) எடுத்துள்ளார். அவரது சராசரி முறையே 49.29, 57.32 மற்றும் 52.73 ஆக இருக்கிறது.
34 வயதான ஸ்டீவ் சுமித் டெஸ்டில் 9320 ரன்னும் (102), ஒருநாள் போட்டியில் 4939 ரன்னும் (142) எடுத்து உள்ளார். அவரது சராசரி முறையே 58.61 மற்றும் 44.49 ஆக இருக்கிறது.
- பும்ராவுக்கும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
- திலக் வர்மா தேர்வு பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாட்டு அணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டன.
ஆசிய கோப்பை போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்கிறது.
பொதுவாக 15 வீரர்கள் தான் தேர்வு செய்யப்படுவார்கள். உலக கோப்பை போட்டிக்கான உத்தேச அணி அறிவிக்க வேண்டி இருப்பதால் அணி வீரர்களின் தேர்வு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பைக்கு முன்பு நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்த தேர்வு மிகவும் முக்கியமானது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.தாஸ் ஆகியோர் காணொலி மூலம் தேர்வுகுழு கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் முதல் முறையாக தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
காயத்துக்காக ஆபரேசன் செய்துகொண்ட லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா? என்று எதிர்பார்க்கப் படுகிறது. உடல் தகுதியை பொறுத்துதான் அவர்களது தேர்வு இருக்கும். திலக் வர்மா தேர்வு பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.
துணை கேப்டன் பதவி ஜஸ்பிரீத் பும்ராவுக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய வேகப் பந்து வீரரான அவர் தற்போது அயர்லாந்து 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
துணை கேப்டன் பதவி தொடர்பாக பும்ராவுக்கும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், வீராட் கோலி, லோகோஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்-உடல் தகுதியை பொறுத்து), ஸ்ரேயாஸ் அய்யர் (உடல் தகுதியை பொறுத்து), ஹர்த்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், இஷான் கிஷன் (2-வது விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, யசுவேந்திர சாஹல் அல்லது ஆர்.அஸ்வின்.
- துபாயில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.
- இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.
துபாய்:
டிம் சவுத்தி தலைமையி லான நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளது.
இரு அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து 19 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் துபாயில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னே எடுக்க முடிந்தது. மார்க் ஷேப்மேன் அதிகபட்சமாக 46 பந்தில் 63 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்), எடுத்தார். அயன் அப்சல்கான் 3 விக்கெட்டும், முகமது ஜவாதுல்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் முகமது வாசிம் 29 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), ஆசிப்கான் 29 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்தது. 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.






