search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 over cricket"

    • துபாயில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.
    • இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.

    துபாய்:

    டிம் சவுத்தி தலைமையி லான நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளது.

    இரு அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து 19 ரன்னில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் துபாயில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னே எடுக்க முடிந்தது. மார்க் ஷேப்மேன் அதிகபட்சமாக 46 பந்தில் 63 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்), எடுத்தார். அயன் அப்சல்கான் 3 விக்கெட்டும், முகமது ஜவாதுல்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் முகமது வாசிம் 29 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), ஆசிப்கான் 29 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்தது. 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.

    • டிகாக்- ஹென்ரிக்ஸ் ஜோடி 'பவர்-பிளே'யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் திரட்டியது.
    • கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது.

    தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    பின்னர் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டான் டி காக்கும், ரீஜா ஹென்ரிக்சும் பதிலடி கொடுத்தனர். இது நேரடி போட்டியா அல்லது ஹைலெட்சா என்ற சந்தேகப்படும் அளவுக்கு அவர்கள் பவுண்டரியும், சிக்சருமாக பந்தை இடைவிடாது தெறிக்கவிட்டனர். குறிப்பாக டி காக் எதிரணியின் பந்து வீச்சாளர்களை விழிபிதுங்க வைத்தார்.

    டிகாக்- ஹென்ரிக்ஸ் ஜோடி 'பவர்-பிளே'யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் திரட்டியது. 20 ஓவர் போட்டியில் 'பவர்-பிளே'யில் 100 ரன்னுக்கு மேல் எடுத்த முதல் அணி தென்ஆப்பிரிக்கா தான். இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 244 ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடித்ததே அதிகபட்ச சேசிங்காக இருந்தது. அதை முறியடித்து தென்ஆப்பிரிக்கா சரித்திரம் படைத்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 515 ரன்கள் எடுத்ததும் சாதனையாகும். இதில் 81 பவுண்டரியும், 35 சிக்சரும் அடங்கும்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது. கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது. #AUSvIND

    விசாகப்பட்டினம்:

    இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது.

    இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது டெஸ்ட் தொடரையும், ஒரு நாள் தொடரையும் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.

    தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்தும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    நியூசிலாந்து தொடரில் பாதியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இதே போல வேகப்பந்து வீரர் பும்ராவும் மீண்டும் களம் திரும்பி உள்ளார். ஆல்ரவுண்டர் ஹார்த்திக் பாண்ட்யா காயத்தால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகி உள்ளார். அவரது இடத்தில் ஜடேஜா தேர்வாகி இருக்கிறார்.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, தவான், டோனி, அம்பதி ராயுடு ஆகியோரும் பந்து வீச்சில் பும்ரா, யசுவேந்திரசஹால், கர்ணல் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ் ஹோம் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது. 19-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 11-ல் ஆஸ்திரேலியா 6-ல் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலி வி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், டோனி, விஜய் சங்கர், தினேஷ் கார்த் திக், ரி‌ஷப்பன்ட், கர்ணல் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், பும்ரா, மான்யக் மார்க்கன்டே, சித்தார்த் கவூல், யசுவேந்திர சஹால்.

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம், பெகரன்டர்ஸ், அலெக்ஸ் கேர்ரே, நாதன் கோல்ட்டர், நாதன் லயன், கும்மின்ஸ், கானே ரிச்சர்சன், டி ஆர்சி ஷார்ட், ஸ்டோன்ஸ், டர்னா, ஆடம் ஜம்பா, ஹைரிச்சர்ட்சன். #viratkohli #AUSvIND

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. #indvsaus #t20cricket
    சிட்னி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    முதலாவது ஆட்டத்தில் ரன்களை அள்ளி கொடுத்த இந்திய பவுலர்கள் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை (19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்) வெகுவாக கட்டுப்படுத்தினர். ஆனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை கெடுத்து விட்டது. இனி தொடரை வெல்வதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்வதற்கு இந்திய வீரர்கள் தீவிர முனைப்பு காட்டுவார்கள். இதில் கிடைக்கும் வெற்றி மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது டெஸ்ட் தொடரை எதிர்கொள்வதற்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும். பொதுவாக சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக்கூடியது. இதனால் 3-வது சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹலை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

    இந்த ஆண்டில் நிறைய சறுக்கலை சந்தித்து இருக்கும் ஆஸ்திரேலிய அணியினர், அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த தொடரை வசப்படுத்த வரிந்து கட்டுவார்கள். பயிற்சியின் போது கணுக்காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டான்லேக்குக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் அழைக்கப்பட்டு உள்ளார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடாத ஸ்டார்க் இன்று களம் காணுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த போட்டிக்கு மழையால் ஆபத்து இருக்காது என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    சிட்னியில் இதுவரை ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் 4-ல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒன்றில் வீழ்ந்தது. அந்த தோல்வி இந்தியாவுக்கு எதிராக (2016-ம் ஆண்டு) அடைந்தது ஆகும். இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை இந்திய அணி கடைசி பந்தில் எட்டி சாதனை படைத்தது நினைவிருக்கலாம்.

    இந்திய அணி கடைசியாக ஆடிய ஒன்பது 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை இந்திய அணி தக்கவைக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், ரிஷாப் பான்ட், குருணல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது அல்லது யுஸ்வேந்திர சாஹல்.

    ஆஸ்திரேலியா: டார்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, பென் மெக்டெர்மோட், ஜாசன் பெரென்டோர்ப், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் அல்லது நாதன் கவுல்டர்-நிலே ஆண்ட்ரூ டை.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #indvsaus #t20cricket
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. #INDvWI #rohitsharma

    சென்னை:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்திலும் 71 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.


    இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் அணி திகழ்கிறது.

    கடந்த போட்டியில் ரோகித் சர்மா அதிரடியான சதத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்தார். இதேபோல நாளையும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களை மகிழ்விப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஒவரில் 4 செஞ்சூரி அடித்து சாதனை படைத்த ரோகித் சர்மா அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை சேப்பாக்கத்தில் படைப்பாரா? என்று எதிர் நோக்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 69 ரன்னே தேவை.

    ரோகித்சர்மா 2271 ரன் (73 இன்னிங்ஸ்) எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் குப்தில் 2203 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    இதேபோல பேட்டிங்கில் தவான், ராகுல், தினேஷ் கார்த்திக், கர்னல் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    வேகப்பந்து வீரர்கள் உமேஷ்யாதவ், பும்ரா மற்றும் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு நாளைய போட்டியில் ஓய்வு கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக சித்தார்த் கஜல் மட்டும் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுவரை நடந்த 2 போட்டியிலும் ஆடாத வீரர்களுக்கு சென்னையில் வாய்ப்பு கிடைக்கலாம்.

    பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி ஆட்டத்திலாவது வென்று ஆறுதல் அடையும் வேட்கையில் உள்ளது. இதனால் அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.

    பிராத்வெயிட், ஹெட் மயர், பிராவோ போல்லார்ட் போன்ற சிறந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி மேம்பாடு அடைவது அவசியமாகும்.

    இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்சனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #INDvWI #rohitsharma

    ×