search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    எதிர்பார்ப்புகளை ஒதுக்கிவிட்டு களத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும் - பும்ரா பேட்டி
    X

    எதிர்பார்ப்புகளை ஒதுக்கிவிட்டு களத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும் - பும்ரா பேட்டி

    • அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • அத்துடன், டி20 தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது.

    டப்ளின்:

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்தியா 185 ரன்களை சேர்த்தது. ருத்ராஜ் கெய்க்வாட் அரை சதமடித்து 58 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

    அடுத்து ஆடிய அயர்லாந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ரிங்கு சிங்குக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் பும்ரா பேசியதாவது:

    வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய நாள் பிட்ச் கொஞ்சம் உலர்ந்திருந்தது. அதனால் இரண்டாம் பாதியில் பிட்ச் மித வேகத்தில் இருக்கும் என்று கருதினோம். அதன் காரணமாகவே முதலில் பேட்டிங் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.

    விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். ஏனென்றால் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

    ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் ஏற்றிக் கொண்டால் நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். எதிர்பார்ப்புகளை ஓரம்வைத்து சுதந்திரமாக களத்தில் விளையாட வேண்டும்.

    திரும்பி வந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

    Next Story
    ×