என் மலர்
விளையாட்டு
- இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது.
- இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
2022-ம் ஆண்டு முதன் முறையாக குஜராத அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 16-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் குஜராத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.
இதன்மூலம் சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இதனை சிஎஸ்கே வீரர்கள் டோனிக்கு அர்பணிப்பதாக தெரிவித்தனர். இந்த போட்டி முடிந்த பிறகு டோனி குறித்து சில சுவாரஸ்மான வீடியோக்கள் அவ்வபோது வைரலாகி வந்தது.
இந்நிலையில் 5-வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில், ராஞ்சியில் உள்ள JSCA ஜிம்மில், தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உலகக் கோப்பை 2023 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
- சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரையும் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யவில்லை.
உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் 5-ந்தேதி துவங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானி்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து என பத்து அணிகள் பங்கேற்கின்றன. ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரையும் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யவில்லை. அவர்களை ஆசிய கோப்பை 2023 இந்திய அணியில் தேர்வு செய்தார். இத்துடன் காயத்தால் அவதிப்பட்டு, அதில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பேட்ஸ்மேன் பட்டியலில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர். கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்துள்ளார்.
ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா, சமி, சிராஜ், தாகூர் இடம் பெற்றனர்.
இந்தியா தனது உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் விளையாடுகிறது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டி பரபரப்பாக இருந்தது. கடைசி ஓவரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும்.
ஐசிசி தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் 118 புள்ளிகளுடன் உள்ளனர். இந்தியா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
- சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடினார்.
- ஒரு வார்த்தையில் கேட்ட கேள்விக்கு இந்திய வீரர் பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரகானே. இவர் இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியின் இடம் பிடித்தார்.
இந்நிலையில் யூடிப்பர் மதன் கவுரியுடன் வீடியோ காலில் பேசிய ரகானே, தமிழ் நடிகரான விஜய் தனக்கு பிடித்த நடிகர் என தெரிவித்துள்ளார். மதன் கவுரி கேட்ட சில கேள்விகள் ரகனே தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.
ஒரு வார்த்தையில் மதன் கேட்ட கேள்விக்கு ரகானே பேசியது பின்வருமாறு:-
மதன்: வணக்கம் ப்ரோ நல்ல இருக்கீன்களா
ரகானே : நல்லா இருக்கேன். சாப்பிடீங்களா? (என தமிழில் பதில் அளித்தார்)
மதன்: சிஎஸ்கே
ரகானே: குடும்பம்
மதன்: டோனி
ரகானே: தல
மதன்: ஜடேஜா
ரகானே: நல்ல நண்பன் (என தமிழில் பதில் அளித்தார்)
மதன்: தோசை
ரகானே: ருசி
மதன்: தமிழ் நடிகர் பற்றி தெரியுமா?
ரகானே: ஆமா தெரியும்
மதன்: யார் உங்களுக்கு பிடித்த நடிகர்
ரகானே: விஜய்
இவ்வாறு அவர் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன்.
- விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம்.
புதுடெல்லி:
ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்க இன்னும் 41 தினங்களே உள்ளன.
ஆனால் இந்திய அணிக்கு இதுவரை 4-வது வரிசையில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.
இந்த நிலையில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அணிக்கு "நம்பர்-4" பேட்ஸ்மேன் யார்? என்று இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன். அதற்கு நான் மிகப்பெரிய ஆதரவை தெரிவிப்பேன்.
4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் தான் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும்.

ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா? என்று எனக்கு தெரிய வில்லை. விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம். அந்த வரிசையில் தான் அவர் தனது அனைத்து ரன்களையும் குவித்தார்.
அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்று கருதினாலும் நாம் அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 39 ஆட்டததில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.21 ஆகும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 7 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார்.
விராட் கோலி 3-வது வரிசயைில் 210 ஆட்டத்தில் 39 சதத்துடனும், 55 அரை சதத்துடனும், 10,777 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.20 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் அவர் 275 ஆட்டத்தில் 12,898 ரன் எடுத்துள்ளார். சராசரி 57.32 ஆகும். 46 சதமும், 65 அரை சதமும் அடங்கும். விராட் கோலியும், டி வில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி 4-வது வரிசையில் ஆடும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஆகியோரில் ஒருவர் 3-வது வீரராக ஆடலாம்.
காயத்துக்காக ஆபரேசன் செய்து கொண்ட இருவரும் அதில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் அணியின் நிலை பொறுத்தே உலக கோப்பைக்கு 4-வது வரிசை இறுதி செய்யப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கையில் இந்த போட்டி நடக்கிறது.
- உலகக் கோப்பை போட்டி 10 மைதானங்களில் நடக்கிறது.
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில்தான் அக்டோபர் 8-ந்தேதி நடக்கிறது.
சென்னை:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.
இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
உலகக் கோப்பை போட்டியின் 48 ஆட்டங்களும் அகமதபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பெங்களூர், புனே, லக்னோ, தர்மசாலா ஆகிய 10 மைதானங்களில் நடக்கிறது.
உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) குழு ஏற்கனவே பார்வையிட்டு ஆய்வு செய்து இருந்தது.
இதற்கிடையில் ஐ.சி.சி.யின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் மைதானங்களை தற்போது ஆய்வு செய்து வருகிறது.
அதன்படி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐ.சி.சி. தலைமை ஆடுகள பராமரிப்பாளர் ஆன்டி அட்கின்சன் நேற்று ஆய்வு செய்தார். முழு வீச்சில் தயாராகி வரும் ஆடுகள தன்மை, அவுட் பீல்டு உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி கூறும்போது, "மிகப்பெரிய போட்டிக்கு முன்பு நடத்தப்படும் வழக்கமான ஆய்வு இதுவாகும். அனைத்து வசதிகளையும், நாடுகள் செய்த பணியையும் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்" என்றார்.
உலகக் கோப்பை போட்டிக்காக ஐ.பி.எல். முடிந்த பிறகு சேப்பாக்கத்தில் எந்த போட்டியும் நடத்தப்படவில்லை.
உலக கோப்பை போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில்தான் அக்டோபர் 8-ந்தேதி நடக்கிறது.
நியூசிலாந்து-வங்காளதேசம் (அக்டோபர் 13), நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 18), பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 23), பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா (அக்டோபர் 27) போட்டிகளும் சேப்பாக்கத்தில் நடக்கிறது.
- லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார்.
- ஆசிய கோப்பையில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவதில் சந்தேகமாகியுள்ளது.
கொழும்பு:
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவதில் சந்தேகமாகியுள்ளது. சமீபத்தில் லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார். இதனால் அவர் ஆசிய போட்டியில் குறைந்தது முதல் 2 ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது.
இதே போல் தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் சமீரா ஆசிய போட்டியை முழுமையாக தவறவிட வாய்ப்புள்ளது. பேட்ஸ்மேன்கள் குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்கள் வேகமாக குணமடைவதை பொறுத்து அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரிய வரும். இது இலங்கைக்கு நிச்சயம் பின்னடைவு தான். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 31-ந்தேதி வங்காளதேசத்தை பல்லகெலேவில் சந்திக்கிறது.
- ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 65 பேர் இடம் பெற்றுள்ளனர்.
- ஹாக்கி அணியில் 36 வீரர், வீராங்கனைகளும், கிரிக்கெட் அணியில் 30 பேரும், துப்பாக்கி சுடுதல் அணியில் 30 பேரும், பாய்மரப்படகு அணியில் 33 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.
புதுடெல்லி:
1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 பந்தயங்கள் அரங்கேறுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 850 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது. இந்த பட்டியலில் இருந்து 38 விளையாட்டுகளை சேர்ந்த 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்தது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்தியா அனுப்பும் 'மெகா' எண்ணிக்கை கொண்ட அணி இதுதான். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஜகர்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் அதிகபட்சமாக 572 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டு 16 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று 8-வது இடத்தை பிடித்து இருந்தது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 65 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 34 வீரர்கள், 31 வீராங்கனைகள் அடங்குவர். இதற்கு அடுத்தபடியாக கால்பந்து அணியில் 44 வீரர், வீராங்கனைகளும், ஹாக்கி அணியில் 36 வீரர், வீராங்கனைகளும், கிரிக்கெட் அணியில் 30 பேரும், துப்பாக்கி சுடுதல் அணியில் 30 பேரும், பாய்மரப்படகு அணியில் 33 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.
பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ரக்பி ஆகிய விளையாட்டுகளில் வீரர்கள் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா (65 கிலோ) தகுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும், அவரது பெயரை மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்கும் ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்ததால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் இடம் பெற்று இருப்பவர்களில் நீரஜ் சோப்ரா, ஜோதி யர்ராஜி (தடகளம்), பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து (பேட்மிண்டன்), ஷிவதபா, நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை), பவானி தேவி (வாள்வீச்சு), பிரித்விராஜ் தொண்டைமான், மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), சரத்கமல், சத்யன், மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), மீராபாய் சானு (பளுதூக்குதல்), டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி (செஸ்), சவுரவ் கோஷல், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் (ஸ்குவாஷ்), ரோகன் போபண்ணா, ராம்குமார் (டென்னிஸ்) உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
- இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
- இந்தத் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டராக சிறந்து விளங்கியவர் யுவராஜ் சிங். கடந்த 2000-மாவது ஆண்டு முதல் 2017 வரையில் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். 2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர்.
யுவராஜ் சிங்கின் மனைவி ஹசில் கீச். 2016-ம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஒரியன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, யுவராஜ் சிங்கின் மனைவி ஹசில் கீச் மீண்டும் கர்ப்பமடைந்தார்.
இந்நிலையில், ஹசில் கீச்க்கு பெண் குழந்தை பிறந்தது. அதேவேளை பெண் குழந்தைக்கு ஆரா என பெயரிடப்பட்டுள்ளதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், உறக்கமில்லா இரவுகள் எங்கள் செல்ல மகளை வரவேற்றதால் மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிட்டது. இதோ எங்கள் இளவரசி ஆரா என பதிவிட்டுள்ளார். மேலும் அவர், அவரது மனைவி ஹேசல் கீச், மகன் மற்றும் மகளும் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள் ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.
கோபன்ஹேகன்:
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.
இதில் பிரனாய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.
- ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாம்.
- கேப்டன் ரோகித் ஷர்மா, அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆசிய கோப்பை 2023 தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவதற்காக இந்திய அணி வீரர்களுக்கு ஆறு நாட்கள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நேற்று தொடங்கியது.

கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். இன்றைய பயிற்சியில் கே.எல். ராகுல் கலந்து கொண்டார். முதலில் தான் கடந்த சில வாரங்களாக செய்துவரும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் கே.எல். ராகுல்.
அதன் பிறகு, நெட்ஸ்-இல் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இவருக்கு ஷர்துல் தாக்கூர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பந்து வீசினர். துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல், உடலில் எந்த இடையூறும் ஏற்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை. கே.எல். ராகுல் பயிற்சியில் ஈடுபடுவதை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்து வந்தனர்.
வேகப்பந்து வீச்சை தொடர்ந்து அக்சர் பட்டேல் மற்றும் மயான்க் மார்கன்டே ஜோடி கே.எல். ராகுலுக்கு பந்துவீசியது. இவர்களின் பந்துவீச்சில் கே.எல். ராகுல் பல்வேறு ஷாட்களை அடித்தார். இதில் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட்களும் அடங்கும்.
- உலகக் கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
- பிரக்ஞானந்தா 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்தை பிடித்துள்ளார்.
பாகு:
பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது.
இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியின் 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. டைபிரேக்கரின் முதல் ஆட்டத்தில் தோல்வியும் 2-வது ஆட்டத்தில் டிரா ஆனதால் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்நிலையில் செஸ் உலக தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு தமிழக வீரர்களான குகேஷ் 8-வது இடத்திலும், விஸ்வநாதன் ஆனந்த் 9-வது இடத்திலும் உள்ளனர்.






