என் மலர்
விளையாட்டு
- பந்தய தூரம் 306.587 கிலோமீட்டர் ஆகும்.
- 14-வது சுற்று போட்டி இத்தாலியில் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.
ஜான்ட்வூர்ட்:
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்று பந்தயமான நெதர்லாந்து கிராண்ட்பிரி அங்குள்ள ஜான்ட்வூர்ட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.587 கிலோமீட்டர் ஆகும். இதில் வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். சிறிது நேரத்தில் மழை பெய்ததால் அந்த சவாலை சமாளிக்க வீரர்கள் பெரும் சிரமப்பட்டனர். இதனால் 45 நிமிடங்கள் பந்தயம் நிறுத்தப்பட்டு பிறகு தொடர்ந்து நடந்தது.
தகுதி சுற்றில் முதலிடம் பிடித்து முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2 மணி 24 நிமிடம் 04.411 வினாடிகளில் இலக்கை கடந்து ஒரு வழியாக முதலிடம் பிடித்து உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. இந்த சீசனில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 9-வது வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் 2013-ம் ஆண்டில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டலின் சாதனையை வெர்ஸ்டப்பென் சமன் செய்தார். அவரை விட 3.744 வினாடி மட்டுமே பின்தங்கிய ஸ்பெயினின் பெர்னாண்டோ அலோன்சா 2-வதாக வந்து 19 புள்ளிகளை பெற்றார். பியாரே கேஸ்லி (பிரான்ஸ்) 3-வது இடத்தை பெற்றார். 7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதுவரை நடந்துள்ள 13 சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் வெர்ஸ்டப்பென் மொத்தம் 339 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் தொடர்ந்து 3-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) 201 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அலோன்சா 168 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
14-வது சுற்று போட்டி இத்தாலியில் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.
- 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றார்
- உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர்
ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அவர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.
அவருக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் "நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமை அடைந்துள்ளது. அவருக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர்கள் என்று, இந்திய விளையாட்டு சாதனைப் பக்கத்தில் மேலும் தங்க பக்கத்தை இணைத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தில் ''உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல் விளையட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையாளமாக ஆக்கியுள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார்.
- 9.23 நிமிடங்களில் இலக்கை கடந்ததால் அடுத்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடுாபெஸ்டில் 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார்.
பந்தய தூரத்தை 9.15.31 நிமிடங்களில் கடந்து புதிய தேசிய சாதனையை படைத்தார் பாருல் சவுத்ரி.
9.23 நிமிடங்களில் இலக்கை கடந்ததால் அடுத்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
- உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் தொடர் ஓட்டப்பிரிவு வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- உலக தடகள சாம்பியன்ஷிப் 4*400 தொடர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடுாபெஸ்டில் 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்ட பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், ஆண்கள் தொடர் ஓட்ட தகுதிச்சுற்று போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன்மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் தொடர் ஓட்டப்பிரிவு வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் 4*400 தொடர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் 4*400 தொடர் ஓட்டத்தில் இந்தியா 5ம் இடம் பிடித்தது.
4*400 தூரத்தை 2<59.92 வினாடிகளில் கடந்து இந்திய வீரர்கள் 5ம் இடம் பிடித்துள்ளனர்.
- பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2ம் இடம் பிடித்தார்.
- இந்திய வீரர் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5ம் இடம் பிடித்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
2வது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து அபாரமாக வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.
இந்திய வீரர் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5ம் இடம் பிடித்தார்.
மற்றொரு இந்திய வீரர் டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6ம் இடம் பிடித்தார்.
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2ம் இடம் பிடித்தார்.
- ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளன.
- இந்திய மகளிர் கால்பந்து அணியில் மூன்று தமிழக விராங்கனைகள் இடம்பிடித்தனர்.
1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ம் தேதி துவங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 850 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.

இந்த பட்டியலில் இருந்து 38 விளையாட்டுகளை சேர்ந்த 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை இந்திய மகளிர் கால்பந்து அணியில் தமிழகத்தை சேர்ந்த சௌமியா, இந்துமதி மற்றும் சந்தியா என மூன்று வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள்: ஸ்ரேயா ஹூடா, சௌமியா நாராயணசாமி, பந்தோய் சானு, அஷ்தலதா தேவி, ஸ்வீடி தேவி, ரிது ராணி, டால்மியா சிபீர், ஆஸ்டம் ஒரான், சஞ்சு, ரஞ்சனா சானு, சங்கீதா பாஸ்ஃபோர், பிரியண்கா தேவி, இந்துமதி கதிரேசன், அஞ்சு தமங், சௌமியா குகுலோத், தங்மேய் கிரேஸ், பியாரி சாசா, ஜோதி, ரேனு, பாலா தேவி, மனிஷா மற்றும் சந்தியா ரங்கநாதன்.
- ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்து உள்ளார்.
- யசுவேந்திர சாஹல் ஏற்கனவே ஆசிய கோப்பை அணியில் இடம்பெறவில்லை.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணி எது? அரைஇறுதிக்கு முன்னேறு வது யார்? என்று முன்னாள் வீரர்கள் பலர் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறப்போவது யார் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்து உள்ளார்.
அவர் தேர்வு செய்த அணியில் குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹலுக்கு இடமில்லை.
மேத்யூ ஹைடன் தேர்வு செய்த உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:-
ரோகித்சர்மா (கேப்டன்), சுப்மன்கில், வீராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன்.
யசுவேந்திர சாஹல் ஏற்கனவே ஆசிய கோப்பை அணியில் இடம்பெற வில்லை.
இதேபோல இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்த அணியில் யசுவேந்திர சாஹல் இடம் பெறவில்லை. மேலும், திலக் வர்மாவுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை.
- உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
- ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோபன்ஹேகன்:
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், 3-ம் நிலை வீரரான குன்லாவுத் விதித்சரணை (தாய்லாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல்செட்டை தன்வசப்படுத்தி பிரமாதமான தொடக்கம் கண்ட பிரனாய் அடுத்த 2 செட்களில் எதிராளிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.
1 மணி 16 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் குன்லாவுத் விதித்சரணிடம் வீழ்ந்த பிரனாய் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். அவர் முந்தைய நாளில் நடந்த கால் இறுதியில் நடப்பு ஒலிம்பிக், உலக சாம்பியனான விக்டர் ஆக்சல்சென்னுக்கு(டென்மார்க்) அதிர்ச்சி அளித்து இருந்தார். உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 23-21, 21-13 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் 'நம்பர் ஒன்' வீரர் அன் சே யங் (தென்கொரியா) 21-19, 21-15 என்ற நேர்செட்டில் 3-ம் நிலை வீரரான சென் யு பெய்யை (சீனா) விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
- கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
- லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்தது.
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து அவர் பதவி விலகியதாக செய்திகள் வந்தன. இதையடுத்து அந்த செய்தி பொய் எனவும் ராஜினாமா செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்து இருந்தது. இந்த சம்பவம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு 90 நாட்களுக்கு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
- சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- செஸ் புகைப்பட கலைஞர் மரியா பிரக்ஞானந்தாவின் தாயாருக்கு சமூக வலைதள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகு:
அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்செனிடம் (நார்வே) தோல்வியை தழுவினார். இதன் டைபிரேக்கரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற கார்ல்சென் அடுத்த ஆட்டத்தில் 'டிரா' செய்து உலக் கோப்பையில் மகுடம் சூடினார்.
தோல்வி அடைந்தாலும் சர்வதேச செஸ் அரங்கில் ஜாம்பவனாக திகழும் கார்ல்செனுக்கு எதிராக பிரக்ஞானந்தா தைரியமாக போராடிய விதம் ரசிகர்களின் இதயங்களை தொட்டது. பாராட்டுகளும் குவிந்தன. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இந்த போட்டியில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அவரது தாயார் நாகலட்சுமியும் உடன் சென்றுள்ளார். தந்தை மாற்றுத்திறனாளி என்பதால் பிரக்ஞானந்தாவை போட்டி நடக்கும் எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்வது அவரது தாயார் தான். அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு நாகலட்சுமியின் பங்களிப்பு அளப்பரியது.

இந்நிலையில் செஸ் புகைப்பட கலைஞர் மரியா பிரக்ஞானந்தாவின் தாயாருக்கு சமூக வலைதள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த பதிவில் லெஜண்ட் மற்றும் அவரது மகனுடன் செல்பி எடுத்துக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.
செஸ் விளையாடிய பிரக்ஞானந்தாவை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் அவரது அம்மாவுக்கு புகழாரம் சூட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அவர் பதவி விலகியதாக நேற்று செய்திகள் பரவின.
- மன்னிப்பு கேட்ட போதிலும் பதவி விலக மாட்டேன் என அவர் தெரிவித்திருந்தார்.
மகளிர் உலக கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது.
லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.
இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறும்போது, நான் கண்டிப்பாக தவறு செய்து விட்டேன். இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து அவர் பதவி விலகியதாக செய்திகள் வந்தன. இதனையடுத்து அந்த செய்தி பொய் எனவும் ராஜினாமா செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்துள்ளது.
- இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது.
- இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
2022-ம் ஆண்டு முதன் முறையாக குஜராத அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 16-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் குஜராத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.
இதன்மூலம் சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இதனை சிஎஸ்கே வீரர்கள் டோனிக்கு அர்பணிப்பதாக தெரிவித்தனர். இந்த போட்டி முடிந்த பிறகு டோனி குறித்து சில சுவாரஸ்மான வீடியோக்கள் அவ்வபோது வைரலாகி வந்தது.
இந்நிலையில் 5-வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில், ராஞ்சியில் உள்ள JSCA ஜிம்மில், தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






