என் மலர்
விளையாட்டு
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
- ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 266 குவித்து ஆல் அவுட்.
ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. போட்டியின் முதல் பாதி இடைவேளையின் போது மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் போட்டியை நடத்துவதில் மூன்று ஆப்ஷன்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி போட்டியை நடத்துவதற்கு மீதமுள்ள நேரத்திற்கு ஏற்றார்போல் 40 ஓவர் விளையாடும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 239 ரன்களையும், 30 ஓவர்கள் ஆடும் பட்சத்தில் 203 ரன்களையும், 20 ஓவர்கள் விளையாட நேரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 155 ரன்களை குவித்தால் வெற்றி பெற முடியும்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 155 ரன்களாக மாற்றப்படும்.
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
- பாகிஸ்தான் தரப்பில் விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சுமாரான துவக்கத்தையே கொடுத்து. அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்களை மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். இவருடன் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் சட்டென சரிந்த நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பான்டியா ஜோடி விக்கெட் விழுவதை தடுத்து நிறுத்தி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இஷான் கிஷன் 81 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஹர்திக் பான்டியா 87 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி ஸ்கோர் வேகமாக அதிகரித்தது.
இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 266 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இவர் தவிர அந்த அணியின் ஹாரிஸ் ரவுப் மூன்று விக்கெட்களையும், நசீம் ஷா மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். பாகிஸ்தான் அணி 267 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.
- ஆசிய கோப்பை 2023 தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.
- ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே ஒரு வெற்றியை பெற்று விட்டது.
ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்பதால், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இடைய இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.
ஆசிய கோப்பை 2023 தொடர் துவங்கும் முன்பு தான் பாகிஸ்தான் அணி, சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 198 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 103 ரன்கள் எடுத்து தோற்றது.
லண்டன்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அதிரடியாக ஆடி 198 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 60 பந்தில் 84 ரன்னும், ஹாரி புரூக் 36 பந்தில் 67 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது.
இறுதியில், நியூசிலாந்து அணி 103 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 4 விக்கெட் வீழ்த்தினார். பேர்ஸ்டோவ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டி நாளை நடைபெற இருக்கிறது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, ரஷியாவின் ரோமன் சபியுலின் - கஜகஸ்தானின் ஆண்ட்ரூ கொலுபேவ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. மார்க்ரம் 49 ரன்களில்ஆட்டமிழந்தார். பவுமா 35 ரன்களில் வெளியேறினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார்.
ஆஸ்திரேலியா சார்பில் அபாட், நாதன் எலீஸ் தலா 3 விக்கெட்டும், பெஹ்ரெண்டார்ப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் அவுட்டானார். மேத்யூ ஷார்ட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 30 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
மிட்செல் மார்ஷ் 39 பந்தில் 79 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. 3 விக்கெட் வீழ்த்திய அபாட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
- பாகிஸ்தான் அணி 2-வது போட்டியில் இந்தியாவிடம் நாளை மோதுகின்றன.
- இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், பாகிஸ்தானின் ஷதாப் கான் 4 விக்கெட் கைப்பற்றினார். ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி 2-வது போட்டியில் இந்தியாவிடம் நாளை மோதுகின்றன. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இது குறித்து சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானுக்கு மிகச் சிறந்த பந்துவீச்சு தாக்குதல் உள்ளது. நசீம் ஷா, அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவ்ஃப். இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். எனவே அவர்கள் ஒரு சிறந்த பந்துவீச்சு தாக்குதல் மற்றும் இந்தியா அவர்களுக்கு எதிராக நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
- முதல் 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார்.
- இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் கூட கேஎல் ராகுல் இடம் பெறவில்லை என்றால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது லீக் போட்டி நாளை பல்லேகலே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இலங்கையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல் 2 போட்டிகளில் (பாகிஸ்தான் மற்றும் நேபாளம்) கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்திருந்தார்.
அவருக்குப் பதிலாக இந்திய அணியில் இஷான் கிஷான் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்புகள் கிடையாது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருக்கிறார். அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால், யாராவது ஒருவரை அணியிலிருந்து நீக்க வேண்டும். அல்லது யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதோடு, அதற்கான சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தற்போது கேஎல் ராகுலை அணியிலிருந்து நீக்கினால் மட்டுமே சஞ்சு சாம்சனை அணியில் விளையாட வைக்க முடியும். ஆனால், கேஎல் ராகுல் தான் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்பதால், அவரை அணி நிர்வாகம் நீக்காது. இரண்டு போட்டிகள் வரையில் இஷான் கிஷான் தான் அணியில் இடம் பெற வாய்ப்புகள் இருக்கிறது. இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் கூட கேஎல் ராகுல் இடம் பெறவில்லை என்றால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இஷான் கிஷான் அணியில் இடம் பெற்றால், அவர் 3 ஆவது வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. சுப்மன் கில் 3-வது இடத்தில் களமிறங்கி சரியான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆதலால், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். இஷான் கிஷான் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் 5-வது இடத்திலும் களமிறங்குவார்கள்.
இவர்களைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.
- எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கின்றனர்.
கொழும்பு:
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கியது. இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
இது பற்றி விராட் கோலி கூறியதாவது:-
அவர்களுடைய பலம் பந்துவீச்சு என்று நான் கருதுகிறேன். குறிப்பாக போட்டியின் எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கின்றனர். எனவே நல்ல நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அவர்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளில் இருக்க வேண்டும்.
நான் என்னுடைய ஆட்டத்தை எப்படி முன்னேற்றலாம் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அது தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சியிலும் ஒவ்வொரு வருடமும் நீண்ட காலமாக என்னுடைய அணிக்கு சிறப்பாக செயல்பட உதவி வருகிறது. நீங்கள் ஒரு சிறந்த நிலையை அடைந்த பின் மேற்கொண்டு தொடுவதற்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட சாதனைகளும் கிடையாது.
அதனால் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சூழ்நிலையில் இருந்து எப்படி என்னுடைய அணியை வெற்றி பெற வைக்கலாம் என்பதே என்னுடைய மனநிலையாகும். அதற்காக ஒவ்வொரு நாளும் முன்னேறுவதற்கு நான் பயிற்சிகளை எடுத்து வருகிறேன்.
என்று கூறியுள்ளார்.
- இடது கை வேகப்பந்து வீச்சாளரான மஹிகா கவுர் தனது முதல் சர்வதேச விக்கெட்டையும் இந்த போட்டியின் மூலம் கைப்பற்றினார்.
- இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
12 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமான கிரிக்கெட் வீராங்கனை மஹிகா கவுர். இவர் 12-வது வயதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக முதல் முறையாக அறிமுகமானார். அவர் அந்த அணிக்காக 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது முறையாக அறிமுகமாகி உள்ளார். ஆனால் இந்த முறை இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகியுள்ளார். நேற்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் மஹிகா கவுர் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 186 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 6 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 55 எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் மீண்டும் தொடங்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான மஹிகா கவுர் தனது முதல் சர்வதேச விக்கெட்டையும் இந்த போட்டியின் மூலம் கைப்பற்றினார்.
- இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது.
- பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.
லண்டன்:
தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தேர்வானார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசினார்.
இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அதைத்தொடர்ந்து தியோதார் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு மண்டல அணியின் வெற்றியிலும் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றிய அவர் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கிறார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. சர்ரே அணிக்காக விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்ரே அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர்கள் சிலர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட உள்ளனர்.
இதன் காரணமாக சர்ரே அணிக்காக நடைபெற்று வரும் கவுண்ட்டி தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். ஆனால் இளம் வீரரான சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக தேர்வாகியுள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.
- பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.
இதில் மெட்வெடேவ் 6-2 6-2 6-7 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல இன்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர். இதில் பெகுலா 6-3 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.






