என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய நியூசிலாந்து 202 ரன்கள் குவித்தது.
- அந்த அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முதல் மற்றும் 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய பின் ஆலன் 53 பந்துகளில் 83 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 34 பந்துகளில் 69 ரன்னும் சேர்த்தனர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், இங்கிலாந்து அணி 18,3 ஓவரில் 128 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் நியூசிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் இஷ் சோதி, கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது பின் ஆலனுக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 334 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் ஆகியோர் சதமடித்தனர்.
லாகூர்:
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றன.
இந்நிலையில், லாகூரில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் 112 ரன்னும், நஜ்முல் ஹொசைன் 104 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இப்ராகிம் சட்ரன், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தனர். இப்ராகிம் சட்ரன் 75 ரன்னும், ஹஷ்மத்துல்லா ஷகிடி 51 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 44.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்காளதேச அணி 89 ரன்களில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு வழங்கப்பட்டது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 190 ரன்களை சேர்த்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 191 ரன்களை எடுத்து வென்றதுடன், டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. ஹென்ட்ரிக்ஸ் 42 ரன்களும், டோனோவன் பெரேரா 48 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மார்க்ரம் அதிரடியாக ஆடி 41 ரன்கள் சேர்த்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் அபாட் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 191 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டது. ஜோஷ் இங்கிலிஸ் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் நிலைத்து ஆடி 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டி 37 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 17.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஆஸ்திரலிய அணி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதும், மிட்செல் மார்ஷ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
- ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனாக ஹீத் ஸ்ட்ரீக் இருந்துள்ளார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் ஹீத் ஸ்ட்ரீக் இதுவரை 455 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்தார். 49 வயதான ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக ஹீத் ஸ்ட்ரீக் 65 டெஸ்ட் போட்டிகள், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
1993 முதல் 2005-ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடி இருக்கும் ஹீத் ஸ்ட்ரீக் 455 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கல்லீரல் புற்றுநோயால் நீண்ட காலம் போராடி வந்துள்ளார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
- போட்டி துவக்கத்தில் இந்திய அணி 15 ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது.
- ஷகீன் அஃப்ரிடி வீசிய பந்து, ரோகித் ஷர்மா கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப்களை பதம்பார்த்தது.
ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட போதிலும், முதல் பாதி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி 15 ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் ரோகித் ஷர்மா அவுட் ஆன விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷகீன் அஃப்ரிடி வீசிய பந்து, ரோகித் ஷர்மா கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப்களை பதம்பார்த்தது.
இவர் அவுட் ஆன புகைப்படம் இணையத்தில் வெளியானதும், கோலிவுட்டில் ரிலீசான சென்னை 600028 படத்தில் வெளியான காட்சியை போன்றே இருக்கிறது. இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக, அதனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்து இருக்கிறார்.
- உலகக் கோப்பை போட் டிக்கான 15 பேர் கொண்ட அணியை வருகிற 5-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருந்தது.
- இஷான் கிஷன் 2-வது விக்கெட் கீப்பராக உலகக் கோப்பைக்கு தேர்வாகிறார். சூர்யகுமார் யாதவும் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.
இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன், இங்கிலாந்து முன்னாள் சாம்பியன்கள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கா னிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
உலகக் கோப்பை போட் டிக்கான 15 பேர் கொண்ட அணியை வருகிற 5-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்திருந்தது.
மேலும் காயம் ஏதேனும் ஏற்பட்டால் செப்டம்பர் 28-ந் தேதிக்குள் கடைசி நேரத்தில் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை இறுதி செய்யும் பணி நேற்று நடந்தது. இது தொடர்பாக தேர்வுக் குழு தலைவர் அஜீத் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இலங்கையில் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட பிறகு இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உலகக் கோப்பை அணியில் இடம் பெறப்போகும் 15 வீரர்கள் இறுதி செய்யப்பட்டனர். அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் வெளியாகி உள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து முழு உடல் தகுதி சான்றிதழ் அளிக்கப்பட்டுவிட்டதால் கே.எல்.ராகுல் அணியில் இடம் பெறுகிறார். அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்.
இஷான் கிஷன் 2-வது விக்கெட் கீப்பராக உலகக் கோப்பைக்கு தேர்வாகிறார். சூர்யகுமார் யாதவும் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.
லோகேஷ் ராகுல் அணியில் இடம் பெறுவதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை. அவர் அணியில் இடம் பெறமாட்டார்.
இதே போல பேட்ஸ்மேன்களில் திலக் வர்மாவும் வேகப் பந்து வீரர்களில் பிரஷித் கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்படமாட்டார்கள்.
வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் சுழற்பந்து வீரர்களில் குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகியோரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அல்லது செவ்வாய்க் கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணி வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன்கில், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்ஷர் படேல், இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
நியூயார்க்:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 38-ம் நிலை வீரரான சக நாட்டை சேர்ந்த லாஸ்லோ ஜெரியை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களை இழந்த ஜோகோவிச், அதன்பிறகு தனது அனுபவ ஆட்டத்தின் துணையுடன் சரிவில் இருந்து அபாரமாக மீண்டதுடன் வெற்றியையும் தன்பக்கம் திருப்பினார்.
சுமார் 3 மணி 45 நிமிடம் நீடித்த இந்தப் போராட்டத்தில் ஜோகோவிச் 4-6, 4-6, 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் லாஸ்லோ ஜெரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டான் ஈவான்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி இறுதிப்போட்டி நடைபெற்றது.
- இதில் ஷூட் அவுட் முறையில் 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றது.
சலாலா:
அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கு தகுதிச்சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்தத் தொடரில் லீக் சுற்று முடிவில் 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி உடன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, 10-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதியது.
இந்தப் போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமன் ஆன நிலையில் ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, ரோமானியாவின் சொரானா சிர்ஸ்டியுடன் மோதினார்.
இதில் சிர்ஸ்டி முதல் செட்டை வென்றார். 2வது செட்டை ரிபாகினா போராடி கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சிர்ஸ்டி வென்றார்.
இறுதியில், சிர்ஸ்டி 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் எலீனா ரிபாகினா இத்தொடரில் இருந்து வெளியேறினார்.
- முதலில் ஆடிய இந்தியா 266 ரன்கள் சேர்த்தது.
- இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர்.
பல்லேகலே:
ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பான்டியா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இஷான் கிஷன் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ரன்னும், ஹர்திக் பான்டியா 87 ரன்னும் குவித்து அசத்தினர்.
பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 267 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
- ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 266 குவித்து ஆல் அவுட்.
ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. போட்டியின் முதல் பாதி இடைவேளையின் போது மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் போட்டியை நடத்துவதில் மூன்று ஆப்ஷன்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி போட்டியை நடத்துவதற்கு மீதமுள்ள நேரத்திற்கு ஏற்றார்போல் 40 ஓவர் விளையாடும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 239 ரன்களையும், 30 ஓவர்கள் ஆடும் பட்சத்தில் 203 ரன்களையும், 20 ஓவர்கள் விளையாட நேரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 155 ரன்களை குவித்தால் வெற்றி பெற முடியும்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 155 ரன்களாக மாற்றப்படும்.






