search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை 2023 - மழை காரணமாக 2-வது இன்னிங்ஸ் துவங்குவதில் தாமதம்
    X

    ஆசிய கோப்பை 2023 - மழை காரணமாக 2-வது இன்னிங்ஸ் துவங்குவதில் தாமதம்

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
    • ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 266 குவித்து ஆல் அவுட்.

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. போட்டியின் முதல் பாதி இடைவேளையின் போது மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் போட்டியை நடத்துவதில் மூன்று ஆப்ஷன்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி போட்டியை நடத்துவதற்கு மீதமுள்ள நேரத்திற்கு ஏற்றார்போல் 40 ஓவர் விளையாடும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 239 ரன்களையும், 30 ஓவர்கள் ஆடும் பட்சத்தில் 203 ரன்களையும், 20 ஓவர்கள் விளையாட நேரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 155 ரன்களை குவித்தால் வெற்றி பெற முடியும்.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 155 ரன்களாக மாற்றப்படும்.

    Next Story
    ×