என் மலர்
விளையாட்டு
- இடது கை வேகப்பந்து வீச்சாளரான மஹிகா கவுர் தனது முதல் சர்வதேச விக்கெட்டையும் இந்த போட்டியின் மூலம் கைப்பற்றினார்.
- இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
12 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமான கிரிக்கெட் வீராங்கனை மஹிகா கவுர். இவர் 12-வது வயதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக முதல் முறையாக அறிமுகமானார். அவர் அந்த அணிக்காக 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது முறையாக அறிமுகமாகி உள்ளார். ஆனால் இந்த முறை இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகியுள்ளார். நேற்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் மஹிகா கவுர் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 186 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 6 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 55 எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் மீண்டும் தொடங்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான மஹிகா கவுர் தனது முதல் சர்வதேச விக்கெட்டையும் இந்த போட்டியின் மூலம் கைப்பற்றினார்.
- இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது.
- பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.
லண்டன்:
தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தேர்வானார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசினார்.
இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அதைத்தொடர்ந்து தியோதார் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு மண்டல அணியின் வெற்றியிலும் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றிய அவர் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கிறார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. சர்ரே அணிக்காக விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்ரே அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர்கள் சிலர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட உள்ளனர்.
இதன் காரணமாக சர்ரே அணிக்காக நடைபெற்று வரும் கவுண்ட்டி தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். ஆனால் இளம் வீரரான சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக தேர்வாகியுள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.
- பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.
இதில் மெட்வெடேவ் 6-2 6-2 6-7 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல இன்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர். இதில் பெகுலா 6-3 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்காஹே கடந்த 2020-ல் அந்த நாட்டிலிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்தார்.
- 2021-ல் தனது பாலினத்தை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றிக் கொண்டார்.
கனடாவின் தேசிய மகளிர் அணியில் இடம் பெற்றுள்ள டேனியல் மெக்காஹே சர்வதேச கிரிக்கெட்டில் முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் இம்மாதம் 4 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியில் இவர் களமிறங்க உள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்காஹே கடந்த 2020-ல் அந்த நாட்டிலிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்தார். 2021-ல் தனது பாலினத்தை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றிக் கொண்டார்.
- சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய காசி வாரியர்ஸ் அணி 16 ரன்கள் எடுத்தது.
- சூப்பர் ஓவரின் முதல் பந்தில் ரிங்கு சிங் ரன் எடுக்கவில்லை.
லக்னோ:
தமிழகத்தில் டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதை போன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 20 ஓவர் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உ.பி.டி20 லீக் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் மீரட் மவ்ரிக்ஸ் மற்றும் காசி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மீரட் அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் அடித்தது. இதையடுத்து 182 ரன் இலக்கை நோக்கி ஆடிய காசி வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களே எடுத்தது.
இதன் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய காசி வாரியர்ஸ் அணி 16 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 17 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மீரட் அணி தரப்பில் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் களம் இறங்கினார்.
சூப்பர் ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காத ரிங்கு சிங் அடுத்த மூன்று பந்தில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி அணியை வெற்றி பெறச்செயதார். முதலில் பேட்டிங் செய்த போது வெறும் 15 (22) ரன்கள் மட்டுமே ஏமாற்றத்தை கொடுத்த ரிங்கு சிங் சூப்பர் ஓவரில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் செய்ததை போன்றே அடுத்தடுத்து சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார்.
ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்திய அயர்லாந்து டி20 தொடரில் அறிமுகமான அவர் 2-வது போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி சூப்பர் பினிஷிங் கொடுத்து தான் முதல் முறையாக பேட்டிங் செய்த போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று அனைவரும் பாராட்டுகளை அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயில்வே அணி இந்தப் போட்டி தொடரில் தோல்வி அடையவில்லை.
- மற்றொரு ஆட்டத்தில் ராணுவம்- கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
சென்னை:
94-வது எம்.சி.சி- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. ஒரு போட்டியில் நடப்பு சாம்பியன் ஐ.ஓ.சி. (இந்தியன் ஆயில் நிறுவனம்) 2-6 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமை செயலகத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படையை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த ரெயில்வே- பி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த பஞ்சாப் நேஷனல் வங்கி ( பி.என்.பி.) அணிகள் மோதுகின்றன.
ரெயில்வே அணி இந்தப் போட்டி தொடரில் தோல்வி அடையவில்லை. இதனால் அந்த அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ளது. இறுதிப்போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும்.
நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில். பி பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்திய ராணுவம்-ஏ பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்று இருந்தன.
- சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
- இந்திய செஸ் தரவரிசையில் முதல் 3 இடங்களில் தமிழக வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக அதிகாரப்பூர்வமாக ஆனார். கடந்த மாதம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்து விஸ்வநாதன் ஆனந்தை (2754 புள்ளி) முந்தினார்.
இதன் மூலம் செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்படும் தர வரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து குகேஷ் முந்தி இருந்தால் இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் சமீபத்தில் உலக கோப்பை செஸ் போட்டியில் கால்இறுதி வரை முன்னேறிய குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தார். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளர்.
இதன் மூலம் குகேஷ் 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தை முந்தி அந்த இடத்தை அதிகாரப்பூர்வமாக பிடித்தார்.
உலக கோப்பை செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த தமிழகத்தின் பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் 19-வது இடத்தில் உள்ளார். இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளார்.
இந்திய செஸ் தரவரிசையில் முதல் 3 இடங்களில் தமிழக வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரில் நகரில் நேற்று தொடங்கியது.
- இறுதி முயற்சியில் நீரஜ், 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடத்திற்கு முன்னேறினார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் கடைசி நாளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிசுற்று நடந்தது.
இதில், எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதைதொடர்ந்து, நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற கையோடு டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்றுள்ளார்.
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரில் நகரில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் கலந்துக் கொண்ட நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 80.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். அடுத்த 2 முறை தவறுதல் ஏற்பட்ட நிலையில் 4வது முயற்சியில் 85.22 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். 5வது முயற்சியிலும் தவறு ஏற்பட்டதால் நீரஜ் சோப்ரா பின்னடைவை அடைந்தார்.
பின்னர், இறுதி முயற்சியில் நீரஜ், 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடத்திற்கு முன்னேறினார்.
போட்டி முடியும் வரை நீரஜ் சோப்ரா தனது 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
- முதல் பாதியில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
- 2வது பாதியில் மலேசியா அணி 2 கோல்களும், இந்திய அணி 4 கோல்களும் அடித்தது.
2024ம் ஆண்டு முதலாவது 5 பேர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியது.
இதில் பங்கேற்ற இந்திய அணி வங்காளதேத்திற்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதேபோல், ஓமன் அணிகளுக்கு எதிராக வெற்றியும், மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியும் சந்தித்தது.
இந்நிலையில், இந்திய அணி தனது 4வது ஆட்டத்தில் இன்று மலேசியாவுடன் மோதியது. இதில், முதல் பாதியில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
பின்னர் 2வது பாதியில் மலேசியா அணி 2 கோல்களும், இந்திய அணி 4 கோல்களும் அடித்தது.
இதனால், இந்த போட்டியின் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 7-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது.
- வங்காளதேச அணியின் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார்.
- இலங்கை அணியில் சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார்.
ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்காளதேச அணியின் துவக்க வீரர்கள் முகமது நைம் மற்றும் தம்சித் ஹாசன் முறையே 16 ரன்கள் மற்றும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 42.4 ஓவர்களில் வெறும் 164 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் துவக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணரத்னே முறையே 14 மற்றும் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 5 ரன்களுக்கு அவுட் ஆனார். சதீரா சமரவிக்ரமா 54 ரன்களை குவித்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
- 7-வது வரிசையில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
- 11-வது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடி யரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜபாட்டா மிராலிசை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 9-வது வரிசையில் இருக்கும் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெரு நாட்டை சேர்ந்த வாரிலாசை தோற்கடித்தார்.
பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவரும், 5-வது வரிசையில் உள்ள வருமான கேஸ்பர் ரூட் (நார்வே) மற்றும் 7-வது வரிசையில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
சீனாவை சேர்ந்த ஜாங் 6-4, 5-7, 6-2, 0-6, 6-2 என்ற கணக்கில் கேஸ்பர் ரூட்டையும், சுவிட்சர்லாந்து வீரர் டொமினிக் ஸ்டிக்கர் 7-5, 6-7 (2-7), 6-7 (5-7), 7-6 (8-6), 6-3 என்ற கணக்கில் சிட்சிபாசையும் போராடி வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டாரியா சேவிலியை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற 2-வது சுற்று போட்டிகளில் 4-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்), 6-வது வரி சையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா), 11-வது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடி யரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- இந்திய ராணுவ அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 9 புள்ளியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
- ‘டிரா’ வில் முடிந்தால் அந்த அணியும், சி.ஏ.ஜி.யும் 7 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.
சென்னை:
94-வது எம்.சி.சி-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த 7-வது நாள் போட்டிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி 2-0 என்ற கோல் கணக்கில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியையும், கர்நாடகா 2-1 என்ற கணக்கில் இந்திய கடற்படையையும் தோற்கடித்தன. நடப்பு சாம்பியன் ஐ.ஓ.சி. (இந்தியன் ஆயில் நிறுவனம்)-ரெயில்வே அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
இன்றுடன் 'லீக்' போட்டிகள் முடிகிறது. முதல் ஆட் டத்தில் இந்திய ராணுவம் - இந்திய விமானப்படை அணிகளும் ('பி' பிரிவு), 2-வது போட்டியில் ஐ.ஓ.சி- மத்திய தலைமை செயலகம் அணிகளும் ('ஏ' பிரிவு) மோதுகின்றன. 'பி' பிரிவில் பஞ்சாப் நேஷனல் வங்கி 9 புள்ளிகளுடன் அரைஇறுதிக்கு முன்னேறிவிட்டது. இந்திய ராணுவ அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 9 புள்ளியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
'டிரா' வில் முடிந்தால் அந்த அணியும், சி.ஏ.ஜி.யும் 7 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். கோல்கள் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும். ஒருவேளை ராணுவ அணி தோற்றால் வெளியேறும். சி.ஏ.ஜி. தகுதி பெறும்.
'ஏ' பிரிவில் ரெயில்வே 8 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்றைய போட்டியில் டிரா செய்தாலே இந்தியன் ஆயில் நிறுவனம் தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தோல்வியை தழுவினால் கர்நாடகா முன்னேறும்.
இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும் தண்ணீரை பெற்று தருவதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும், கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சம்பா சாகுபடியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகை தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.






