என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அரைஇறுதி ஆர்வத்தில் இந்திய ராணுவம், ஐ.ஓ.சி.- விமானப்படை, மத்திய தலைமை செயலகம் அணிகளுடன் இன்று மோதல்
    X

    அரைஇறுதி ஆர்வத்தில் இந்திய ராணுவம், ஐ.ஓ.சி.- விமானப்படை, மத்திய தலைமை செயலகம் அணிகளுடன் இன்று மோதல்

    • இந்திய ராணுவ அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 9 புள்ளியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
    • ‘டிரா’ வில் முடிந்தால் அந்த அணியும், சி.ஏ.ஜி.யும் 7 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.

    சென்னை:

    94-வது எம்.சி.சி-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த 7-வது நாள் போட்டிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி 2-0 என்ற கோல் கணக்கில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியையும், கர்நாடகா 2-1 என்ற கணக்கில் இந்திய கடற்படையையும் தோற்கடித்தன. நடப்பு சாம்பியன் ஐ.ஓ.சி. (இந்தியன் ஆயில் நிறுவனம்)-ரெயில்வே அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    இன்றுடன் 'லீக்' போட்டிகள் முடிகிறது. முதல் ஆட் டத்தில் இந்திய ராணுவம் - இந்திய விமானப்படை அணிகளும் ('பி' பிரிவு), 2-வது போட்டியில் ஐ.ஓ.சி- மத்திய தலைமை செயலகம் அணிகளும் ('ஏ' பிரிவு) மோதுகின்றன. 'பி' பிரிவில் பஞ்சாப் நேஷனல் வங்கி 9 புள்ளிகளுடன் அரைஇறுதிக்கு முன்னேறிவிட்டது. இந்திய ராணுவ அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 9 புள்ளியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    'டிரா' வில் முடிந்தால் அந்த அணியும், சி.ஏ.ஜி.யும் 7 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். கோல்கள் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும். ஒருவேளை ராணுவ அணி தோற்றால் வெளியேறும். சி.ஏ.ஜி. தகுதி பெறும்.

    'ஏ' பிரிவில் ரெயில்வே 8 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்றைய போட்டியில் டிரா செய்தாலே இந்தியன் ஆயில் நிறுவனம் தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தோல்வியை தழுவினால் கர்நாடகா முன்னேறும்.

    இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும் தண்ணீரை பெற்று தருவதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும், கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    சம்பா சாகுபடியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகை தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×