search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "open tennis"

    • 7-வது வரிசையில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
    • 11-வது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடி யரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜபாட்டா மிராலிசை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 9-வது வரிசையில் இருக்கும் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெரு நாட்டை சேர்ந்த வாரிலாசை தோற்கடித்தார்.

    பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவரும், 5-வது வரிசையில் உள்ள வருமான கேஸ்பர் ரூட் (நார்வே) மற்றும் 7-வது வரிசையில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    சீனாவை சேர்ந்த ஜாங் 6-4, 5-7, 6-2, 0-6, 6-2 என்ற கணக்கில் கேஸ்பர் ரூட்டையும், சுவிட்சர்லாந்து வீரர் டொமினிக் ஸ்டிக்கர் 7-5, 6-7 (2-7), 6-7 (5-7), 7-6 (8-6), 6-3 என்ற கணக்கில் சிட்சிபாசையும் போராடி வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டாரியா சேவிலியை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்ற 2-வது சுற்று போட்டிகளில் 4-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்), 6-வது வரி சையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா), 11-வது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடி யரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் மோதினார்.
    • மகுடம் சூடிய கிரெஜ்சிகோவா 900 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.3¾ கோடியை பரிசாக தட்டிச் சென்றார்.

    துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையும், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் மோதினார்.

    1 மணி 31 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கிரெஜ்சிகோவா 6-4, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    மகுடம் சூடிய கிரெஜ்சிகோவா 900 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.3¾ கோடியை பரிசாக தட்டிச் சென்றார். 2வது இடம் பெற்ற இகா ஸ்வியாடெக் ரூ.2¼ கோடியை பரிசாக பெற்றார்.

    • கார்சியா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • 5-வது வரிசையில் இருக்கும் ரூப்லெவ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் நெட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.

    உலகின் 4வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) இன்று காலை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த கேதரின் செபோவை எதிர்கொண்டார்.

    இதில் கார்சியா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    5-வது வரிசையில் இருக்கும் ஷபலென்கா (பெலாரஸ்) முதல் சுற்று ஆட்டத்தில் செக் குடியரசுவை சேர்ந்த டெரிசா மார்ட்டின்கோவை சந்தித்தார். இதில் ஷபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.

    மற்ற ஆட்டங்களில் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), பிளிஸ்கோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) வைல்டு கார்டு வீரரான டொமினிக் தீமை (ஆஸ்திரியா) சந்தித்தார்.

    இதில் 5-வது வரிசையில் இருக்கும் ரூப்லெவ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் நெட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ×