என் மலர்
விளையாட்டு
- இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது.
- இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையை இந்திய அணி பெற்றது.
12 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 7-3, 2-7, 7-5, 7-1 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ கா யிக்கு அதிர்ச்சி அளித்தார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங் 7-1, 7-4, 7-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் லாவை வீழ்த்தினார். 3-வது ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் 7-2, 7-2, 7-5 என்ற செட் கணக்கில் ஹோ டோமாட்டோ ஹோவை மடக்கினார். முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் கடைசி ஆட்டத்தில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் களம் இறங்க அவசியம் இல்லாமல் போய் விட்டது.
முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியா, இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையையும் பெற்றது. இந்த வெற்றி, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் ஸ்குவாஷ் போட்டியில் சாதிப்பதற்கு இந்தியாவுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அதில், உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, அபய்சிங், அனாஹத் சிங், வேலவன் செந்தில்குமார் ஆகியோர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அவர்களின் வெற்றி முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது. இந்திய ஸ்குவாஷ் அணியின் வெற்றி நமது நாட்டை பெருமைப்படுத்தி இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
- மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் இரு நாட்கள் நடந்தது.
- 7 வயதான மணிகா பவன் ராஜாஜி வித்யாஷரம் பள்ளியில் படித்து வருகிறார்.
சென்னை:
தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் இரு நாட்கள் நடந்தது.
இதில் 8 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரிவில் சென்னை மாணவி மணிகா தன்டோல், பீம் பிரிவில் தங்கப்பதக்கமும், புளோர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். 7 வயதான மணிகா பவன் ராஜாஜி வித்யாஷரம் பள்ளியில் படித்து வருகிறார்.
- நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இந்தாண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். குறிப்பாக இந்தாண்டு சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரின் இந்தாண்டு சராசரி 15 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், நேற்றை போட்டியின் வெற்றிக்கு பின்பு பேசிய சூர்யகுமார் யாதவ், "நெட் பயிற்சியின் போது நான் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறேன். என் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்தையும் நான் முயற்சி செய்கிறேன். நான் ரன்களை அடிக்க முயற்சித்து வருகிறேன். நான் ஃபார்ம் அவுட்டில் இல்லை. அவுட் ஆஃப் ரன்ஸ் தான். மீண்டும் ரன்கள் குவிப்பேன்" என்று தெரிவித்தார்.
- 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது
- இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டியில் வருண் சக்கரவர்த்தி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
32 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி இந்த மைல்கல்லை அதிவேகமாக தொட்ட 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த அரியானா 20 ஓவரில் 234 ரன்கள் குவித்தது.
புனே:
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று புனேயில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, அரியானாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த அரியானா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித்குமார் 89 ரன்னும், நிஷாந்த் சிந்து 63 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 235 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி 17.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் 50 பந்தில் ஒரு சிக்சர், 16 பவுண்டரி உள்பட 101 ரன்னும், சர்ப்ராஸ் கான் 64 ரன்னும் குவித்தனர்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரு அணி விரட்டிப் பிடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
மும்பை அணி தான் ஆடிய இரு போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு வெற்றி பெற்றுள்ளது.
- நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
- இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை:
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பாவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங்கும், 3-வது ஆட்டத்தில் இந்திய அணியின் அனாஹத் சிங்கும் வென்றனர். இறுதியில், இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தனது முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பாராட்டுகள். சொந்த நாட்டுப் பார்வையாளர்களின் முன்னிலையில், ஜோஸ்னா, அபய்சிங், செந்தில்குமார் மற்றும் அனாஹத் சிங் ஆகியோரின் நிதானமும், துணிச்சலும், தரமும் நிறைந்த ஆட்டத்தால் 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது.
இந்திய அணியின் நால்வரில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், இத்தகைய பன்னாட்டு தொடரை சென்னையில் நடத்தியதும் சேர்ந்து இச்சாதனை வெற்றியானது தமிழ்நாட்டின் விளையாட்டுச் சூழலின் ஆழத்தையும், நம்பிக்கையையும், சிறப்பையும் மீண்டுமொரு முறை நிலைநாட்டியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
- டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஜார்க்கண்ட் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது.
புனே:
சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், புனேவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜார்க்கண்ட் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான இஷான் கிஷன் 30 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்தார்.
மத்திய பிரதேச அணி சார்பில் வெங்கடேஷ் அய்யர் 3 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 182 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேச அணி களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்ஷ் கவாலி 61 ரன்னில் அவுட்டானார்.
ஹர்பிரீத் சிங் பாட்டியா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை வெற்றிக்கு போராடினார்.
இறுதியில், மத்திய பிரதேச அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணி திரில் வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் அணி தான் ஆடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
தர்மசாலா:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் மார்க்ரம் 61 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா இதுவரை வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இவர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,939 ரன்களும் அடித்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற உலக சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
இதற்கு முன் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
- ஆண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் வென்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், இந்தோனேசியாவின் முகமது யூசுப் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே பொறுப்பாக ஆடிய கிரண் ஜார்ஜ் முதல் செட்டை 21-14 என வென்றார். இதற்கு பதிலடியாக முகமது யூசுப் 2வது செட்டை 21-13 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரண் ஜார்ஜ் 21-16 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தர்மசாலா:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது டி போட்டி இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் இன்று இரவு நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் மார்கிரம் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 18 பந்தில் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா- சுப்மன் கில் ஜோடி 60 ரன்கள் சேர்த்தது.
அடுத்து இறங்கிய திலக் வர்மா நிதானமாக ஆடினார். சுப்மன் கில் 28 ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய அணி 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
- பெண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வென்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ஈஷாராணி பரூவா உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-17, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார்.
- கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மும்பை வான்கடே மைதானத்தில் சந்தித்து உரையாடிக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதலில் கொல்கத்தா சென்ற மெஸ்ஸி, அங்கு தன்னுடைய 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து ரசிகர்களை சால்ட் லேக் மைதானத்தில் சந்தித்துவிட்டு சில நிமிடங்களில் வெளியேறினார். இதன்பின் ஹைதராபாத் வந்த மெஸ்ஸிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அணியுடன் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி ஆடினார். அதேபோல் மைதானம் முழுக்க வலம் வந்து ரசிகர்களுக்கு கைகளை காட்டினார். இந்த நிலையில் இன்று மும்பையில் மெஸ்ஸி ரசிகர்களை சந்தித்தார். வான்கடே மைதானத்தில் மெஸ்ஸி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது மெஸ்ஸியும், சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துக் கொண்டனர். மெஸ்ஸியுடன் சில நிமிடங்கள் உரையாடிய சச்சின் தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார். அதனை உற்சாகத்துடன் பெற்றுக் கொண்ட மெஸ்ஸி, சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி கூறினார். இதன்பின் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 10 ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர் அணிந்து விளையாடினார். அதேபோல் கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்.
இதனால் ஜெர்சி 10ஐ சச்சின் பரிசாக அளித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






