என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • அந்த அணியின் அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற

    ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. பொறுப்புடன் ஆடிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 106 ரன்னும், கவாஜா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் ஸ்டார்க் 33 ரன்னும், நாதன் லயன் ரன் ஏதுமின்றியும் அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் டக்கெட் 29 ரன்னும் எடுத்து அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஹாரி புரூக் ஜோடி அணியைக் காப்பாற்ற போராடியது. 56 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஹாரி புரூக் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசியில் களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் கேப்டன் ஸ்டோக்சுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியதால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.

    இறுதியில், 2வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் 45 ரன்னும், ஆர்ச்சர் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து இன்னும் 158 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்

    உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன.

    சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அரியானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குமார் குஷாக்ரா 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 263 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அரியானா அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் அணி தனது முதல் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது.

    • சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது.
    • அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்

    உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன. இரு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன.

    சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அரியானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குமார் குஷாக்ரா 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது. இதையடுத்து 263 ரன்கள் என்ற இலக்குடன் அரியானா அணி களமிறங்கவுள்ளது.

    • அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.

    புஷ்பா 2 படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.

    இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ரூ.800 கோடி செலவில் பான் இந்தியா அளவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரோகித் சர்மாவுடன் அவரது சகோதரர் அல்லு சிரிஸ் நடித்துள்ள விளம்பர வீடியோவை அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்த இன்சூரன்ஸ் விளம்பர வீடியோவில் ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகாவுடன் அல்லு சிரிஸ் இணைந்து நடித்துள்ளார்.

    அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "என்ன ஒரு இன்ப அதிர்ச்சி.. வாவ்! சிரிஸ்... உன்னை நினைத்து ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. இதுக்கு எல்லாருக்கும் வாழ்த்துக்கள், ரோகித்திற்கு என் சிறப்பு மரியாதை" என்று தெரிவித்துள்ளார்.

    • கடும் பனியால் போட்டியை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் அவர்கள் போட்டியை ரத்து செய்தனர்.
    • போட்டி கைவிடப்பட்டதால் நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே லக்னோவில் நேற்று நடைபெற இருந்த 4-வது 20 ஓவர் போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    ஆடுகளத்தை நடுவர்கள் 6 முறை ஆய்வு செய்த பிறகே போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கைவிட்டனர். 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கவேண்டும். ஆனால் இரவு 9.25 மணி வரை நடுவர்கள் ஆட்டத்தை நடத்த முடியுமா? என்று ஆய்வு செய்தனர்.

    கடும் பனியால் போட்டியை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் அவர்கள் போட்டியை ரத்து செய்தனர்.

    போட்டி கைவிடப்பட்டதால் நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இந்த நேரத்தில் பனி இருக்கும் என்பதால் போட்டி அட்டவணையை அங்கு அமைத்தது தவறு என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

    காற்றின் தரக் குறியீடு மோசமாக இருந்து வரும் வட மாநிலங்களில் போட்டியை நடத்தியது தவறு என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று அவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே பனியால் போட்டியை ரத்து செய்ததற்கு நடுவர்கள் மீது முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நடுவர்களின் முடிவால் நான் உண்மையில் குழப்பம் அடைந்துள்ளேன். இந்த நிலைமை சீராகப்போவதில்லை. இதைவிட மோசமான சூழ்நிலைகளில் நான் முதல் தர போட்டியில் விளையாடி இருக்கிறேன். அதோடு ஒப்பிடும்போது இந்த சூழ்நிலை மிகவும் சிறந்தது.

    இவ்வாறு உத்தப்பா கூறியுள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
    • சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டார்.

    துபாய்:

    சிறந்த வீரர், வீராங்கனைகளை மாதந்தோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாக இந்திய பெண்கள் அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த மாதம் நவி மும்பையில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் 87 ரன் குவித்ததுடன் 2 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியில் ஷபாலி வர்மா முக்கிய பங்கு வகித்தார்.

    அவரது இந்த அபார ஆட்டத்தால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் சிறந்த வீரர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

    • முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 225 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 186 ரன்னில் சுருண்டது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    'பி' பிரி–வில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்கதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த வங்கதேச அணி 46.3 ஓவரில் 225 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 49.1 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்களதேசம் 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3 விக்கெட் வீழ்த்திய வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் இக்பால் ஹூசைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    நாளை நடைபெறும் முதலாவது அரை இறுதியில் இந்தியா- இலங்கை மோதுகின்றன. மற்றொரு அரை இறுதியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.

    • சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெறுகிறது.
    • இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட்- அரியானா அணிகள் மோதவுள்ளன.

    புனே:

    உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மத்திய பிரதேசம், பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான், ஆந்திரா, ஜார்க்கண்ட், ஐதராபாத், அரியானா ஆகிய 8 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. பிரிவு 1ல் மும்பை, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான் அணிகளும், பிரிவு 2ல் பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் அணிகளும் உள்ளன.

    இந்த அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின. அதன் முடிவில் ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன.

    இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட்- அரியானா அணிகள் மோதவுள்ளன.

    இரு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    சீனாவின் ஹாங்சு நகரில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' ஜோடி இதில் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

    இந்தியா சார்பில் ஆண்கள் இரட்டையரில் உலகத் தரவரிசையில் நம்பர்-3 ஆக உள்ள சாத்வித் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்கிறது.

    இந்நிலையில், பி பிரிவில் இடம்பெற்ற இந்திய ஜோடி நேற்று தனது முதல் போட்டியில் 6-வது இடத்திலுள்ள சீனாவின் லியாங் வெய் - வாங் சங் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 12-21 என இழந்தது. இரண்டாவது செட்டை நீண்ட போராட்டத்துக்கு பிறகு 22-20 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவுசெய்ய நடந்த 3-வது செட்டை இந்திய ஜோடி 21-14 என தன்வசப்படுத்தியது.

    • 2025-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா தேர்வு செய்யப்பட்டார்.
    • சபலென்கா 2025-ம் ஆண்டு முழுவதும் உலகத் தரவரிசையில் நம்பர்-1 வீராங்கனையாக நீடித்தவர்.

    பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யு.டி.ஏ.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு மீடியாக்கள் இணைந்து இவர்களைத் தேர்வு செய்கின்றன.

    இந்நிலையில், சிறப்பான வளர்ச்சி கண்ட வீராங்கனையாக அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா (24), தேர்வு செய்யப்பட்டார்.

    இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர்.

    2025-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா (27), தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், போலந்தின் இகா ஸ்வியாடெக்கிற்கு அடுத்து, தொடர்ந்து 2-வது ஆண்டாக இவ்விருது பெற்ற வீராங்கனை ஆனார் சபலென்கா.

    சபலென்கா 2025-ம் ஆண்டு முழுவதும் உலகத் தரவரிசையில் நம்பர்-1 வீராங்கனையாக நீடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    • 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கடும் பனி காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் 2-1 என்ற கணக்கில் முன்னிலை உள்ள இந்தியா அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் தொடரை இழக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 


    • இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
    • 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டியிலிருந்து காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சுப்மன் கில் விலகியுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    பனிமூட்டம் காரணமாக இப்போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×