என் மலர்
உண்மை எது
ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்ற சூழலில், அந்நாட்டில் எடுக்கப்பட்டதாக கூறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியது முதல் அந்நாட்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து உடனடியாக வெளியேற துவங்கிவிட்டனர். முடிந்தவரை அங்கிருந்து தப்பிக்கும் எண்ணத்தில் பலர் விமான நிலையம் நோக்கி படையெடுத்தனர். இதோடு விமானத்தில் ஏறவும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிலர் விமானத்தில் தொங்கிய படி பயணம் செய்ய முற்பட்டு கீழே விழுந்தும் உயிரிழந்தனர். அந்த வரிசையில், பலர் அமெரிக்க விமான படையை சேர்ந்த சரக்கு விமானத்தில் ஏற முயற்சித்தனர்.
அமெரிக்க விமான படை விமானத்தின் புகைப்படம் ஒன்று காபூலில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருப்பது உண்மையான விமானம் இல்லை என வலைதள பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் பதிவுகளில், இரண்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டு ஒன்று உண்மையான விமானம் என்றும், மற்றொன்று அசல் விமானம் போன்று காட்சியளிக்கும் காற்றடைக்கப்பட்ட போலி விமானம் என்றும் கூறப்பட்டுள்ளது.
புகைப்படங்களை இணையத்தில் தேடிய போது, ஆப்கனில் எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் கிடைத்தன. அதில் பெரும்பாலான வீடியோக்களில், வைரல் புகைப்படத்தில் இருந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து கிளம்பும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
வீடியோவில் விமானத்தின் என்ஜின் சத்தம் தெளிவாக கேட்கிறது. அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ளது போன்று ஆப்கனில் காற்றடைக்கப்பட்ட போலி விமானம் நிறுத்தப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தை சமீபத்தில் நிறைவேற்றியது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 100-வது நாளில் இந்த திட்டத்தின் கீழ் வெவ்வேறு சாதியை சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அனைத்து சாதியினரும் ஆர்ச்சகர் ஆகும் திட்டத்திற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதோடு இந்த திட்டத்திற்கு எதிரான கருத்துக்களும் வலைதளங்களில் தொடர்ந்து வலம்வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், "கார் பைக் கழுவுறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்குனா கடைசில இதான் நடக்கும்...!!!" எனும் தலைப்புடன் அர்ச்சகர் ஒருவர் கோவிலை பைப் தண்ணீரால் சுத்தம் செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவுகளிடையே பலர், இந்தியாவின் பிற மாநில கோவில்களின் அர்ச்சகர்கள் சிலைகள், கொடி மரத்தின் மீது தண்ணீரை அடித்து சுத்தம் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு எதிர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, அது ஜூலை 3 ஆம் தேதி தினத்தந்தி செய்தியில் வெளியாகி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த புகைப்படம் "தண்டுமாரியம்மன் கோவிலில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது எடுத்த படம்" என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டம் நிறைவேற்றுவதற்கு முன்னரே கோயில் சுத்தம் செய்யப்பட்ட போது எடுத்தப் படம் அது. அந்த வகையில் வைரல் புகைப்படம், தமிழகத்தில் நிறைவேறி இருக்கும் புது திட்டத்திற்குப் பின் பரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்கள் இந்திய விமான படை விமானத்தில் பத்திரமாக மீட்கப்படும் போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.
விமானம் ஒன்றினுள் பலர் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படம் தலிபான்கள் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து 800 பேரை இந்திய விமான படை விமானம் இந்தியா அழைத்து வரும் போது எடுக்கப்பட்டதாக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஐ.ஏ.எப். சி-17 விமானத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்கள் காபூலில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்டனர். பதற்ற சூழல் காரணமாக காபூலில் உள்ள இந்திய தூதர் மற்றும் இந்திய அதிகாரிகள் உடனடியாக இந்தியா திரும்புவர் என இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
இதையொட்டி ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திரா தன்டன் மற்றும் அலுவலக அதிகாரிகள், குடிமக்கள் என 120 பேர் முதற்கட்டமாக காபூலில் இருந்து இந்தியா வந்தடைந்தனர். இந்திய விமான படை ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்களை அங்கிருந்து இந்தியா கொண்டுவந்தது.

எனினும், தற்போது வைரலாகும் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது இல்லை. மேலும் அது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்படவே இல்லை. உண்மையில் இந்த புகைப்படம் 2013 ஆம் ஆண்டு பிலிப்பைன்சில் எடுக்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படம் அமெரிக்க விமான படை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது எடுக்கப்பட்டது ஆகும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி சென்றார்.
தலிபான்கள் காபூலை நுழைந்ததும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் இதர அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பி சென்றனர். அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து தஜிகிஸ்தான் சென்று அங்கிருந்து ஓமன் சென்றிருக்கிறார். அஷ்ரப் கனி தப்பி ஓடியதற்கு பலத்தரப்பட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அஷ்ரப் கனி விமானத்தில் ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காபூலை தலிபான்கள் கைப்பற்றிய போது அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி செல்லும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி செல்லும் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த வீடியோ அஷ்ரப் கனி இரண்டு நாட்கள் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்ற போது எடுக்கப்பட்டது ஆகும். இதுபற்றிய செய்தி குறிப்பிகள் கடந்த மாதம் வெளியாகி இருக்கின்றன.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றும் போது எடுக்கப்பட்டது என கூறி வீடியோ வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்களை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது. வீதிகளில் சடலங்கள், மக்கள் அந்நாட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை மற்றும் பாராளுமன்றத்தை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி அங்கிருந்து தப்பிவிட்டார்.
இந்த நிலையில், அல்லாஹூ அக்பர் என கூறியப்படி ஆண்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றும் போது எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது காபூலில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ ஆறு ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் எடுக்கப்பட்டது ஆகும். வீடியோவில் சிரியா கொடி இடம்பெற்று இருக்கிறது. இதுகுறித்த இணைய தேடல்களில், வீடியோ மார்ச் 2015 ஆம் ஆண்டு பதிவிடப்பட்டது என தெரியவந்துள்ளது.
மேலும் வீடியோ சிரியாவின் வடமேற்கு பகுதியில் எடுக்கப்பட்டது என கூறும் செய்தி தொகுப்பும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. உண்மையில், காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றி இருந்தாலும், வைரல் வீடியோ அங்கு எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்றதை ஒட்டி வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்க பதக்கம் வென்றது. ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இவரது வெற்றி நாடு முழுக்க கொண்டாடப்பட்டது. அரசு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் என பலத்தரப்பட்டோர் நீரஜ் சோப்ராவின் வெற்றியை கொண்டாடினர்.
இந்த நிலையில், 'டோக்கியோவில் தங்கம் வென்றதை கொண்டாடும் வகையில் மத்திய அரசு ரூ. 2,399 மதிப்பில் ஒரு ஆண்டுக்கு இலவச இண்டர்நெட் சேவையை மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு ரீசார்ஜ் செய்ய கீழே உள்ள முகவரியை க்ளிக் செய்யவும்' எனும் தகவல் வைரலாகி வருகிறது.

இதுகுறித்த இணைய தேடல்களில், வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. மேலும் மத்திய அரசு மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட் வழங்குவதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ தெரிவித்து இருக்கிறது. இலவச இண்டர்நெட் வழங்குவதாக கூறும் தகவலை யாரும் நம்ப வேண்டாம்.
முன்னதாக இதேபோன்ற தகவல் இணையத்தில் வைரலானது. அதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவன பயனர்களுக்கு மூன்று மாதம் இலவச இண்டர்நெட் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. பின் இதுவும் பொய் தகவல் என பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ தெரிவித்தது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் கிளை நாட்டின் மூன்று நகரங்களில் துவங்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
உச்ச நீதிமன்றத்தை விரிவுப்படுத்தி நாட்டின் முக்கிய நகரங்களில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதன் மூலம் நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும் என மாநிலங்கள் சார்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், "சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தை விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் அமைய உள்ளது. இந்த முடிவை எடுத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்" என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மத்திய அரசு இதுபோன்ற முடிவை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறான நிகழ்வு அரங்கேறி இருப்பின், அதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியாவதோடு, நாடு முழுக்க விவாத பொருளாகவும் மாறி இருக்கும். எனினும், இந்த விவகாரத்தில் இதுபோன்று எதுவும் நடைபெறவில்லை. மேலும் மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ நிறுவனமும் இந்த தகவலில் உண்மையில்லை என தெரிவித்து இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பதிவிட்டதாக கூறி சர்ச்சை தகவல் அடங்கிய ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
விவசாய குடும்பத்தை சேர்ந்த நீரஜ் சோப்ரா மற்றும் ரவி தாஹியா டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்தினர். இதைத் தொடர்ந்து #FarmersShineInOlympics எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது. இத்துடன் விவசாயிகள் போராட்டத்தை குறிக்கும் #FarmersProtest இணைக்கப்பட்டது.
இதனிடையே டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பதிவிட்டது போன்று காட்சியளிக்கும் ட்விட்டர் பதிவு வைரலாக துவங்கியது. “அரசின் அட்டூழியத்தால் நாட்டின் விவசாயிகள் பாதிக்கப்படும் போது, பதக்கம் வெல்வதில் எந்த பெருமையும் இல்லை.” எனும் தகவல் ட்விட்டர் பதிவில் இடம்பெற்று இருக்கிறது. ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட்டை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்த இணைய தேடல்களில், வைரல் பதிவு இடம்பெற்று இருக்கும் “@neeraj_chopra_” எனும் ட்விட்டர் கணக்கை நீரஜ் சோப்ரா பெயரில் வேறொரு நபர் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. உண்மையில் நீரஜ் சோப்ராவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு “@Neeraj_chopra1” ஆகும். அந்த வகையில் சர்ச்சை தகவலை நீரஜ் சோப்ரா பதிவிடவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற பின் முதல்வர் பதவியை ஏற்று இருப்பவர்கள் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை மம்தா பானர்ஜி ஏற்று இருக்கிறார். முதல்வர் பதவியேற்று சில மாதங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றும் முதல்வர் பதவியை ஏற்க முடியுமா என்பதை அறிந்துகொள்ள சமூக வலைதளவாசிகள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற போதும், முதல்வர் பதவியை ஏற்று இருப்பது மம்தா பானர்ஜி மட்டும் தான் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிலர், "மம்தா பானர்ஜிக்கு முன்பாக, மொரார்ஜி தேசாய் (1952, மகாராஷ்டிரா), திரிபுவன் சிங் (1970, உத்தரபிரதேசம்) மற்றும் சிபு சோரன் (2009, ஜார்கண்ட்) உள்ளிட்டோர் தங்களின் தொகுதியில் தோல்வியுற்ற போதும், முதல்வர் பதவியை ஏற்று இருக்கின்றனர்" என பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மொரார்ஜி தேசாய் 1952-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை ஏற்றார். திரிபுவன் சிங், சிபு சோரன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவே இல்லை என தெரியவந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றும் முதல்வர் பதவியை ஏற்று இருப்பது மம்தா பானர்ஜி மட்டும் தானா என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. எனினும், மொரார்ஜி தேசாய், திரிபுவன் சிங், சிபு சோரன் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, முதல்வர் பதவியை ஏற்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
உலகின் முன்னணி சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்க இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
'எலான் மஸ்க் பேஸ்புக்கை வாங்கி, அதனை அழிக்க இருக்கிறார்,' எனும் தலைப்புடன் செய்தி குறிப்பின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வைரல் தகவலுடன் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் புகைப்படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் மற்றும் எலான் மஸ்க் இடையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வதில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. எனினும், எலான் மஸ்க் பேஸ்புக்கை வாங்க இருப்பதாக அறிவித்தது இல்லை. மேலும் பேஸ்புக்கில் தனது அக்கவுண்ட்டை எலான் மஸ்க் ஏற்கனவே அழித்துவிட்டார்.

வைரல் தகவல், 2018 ஆம் ஆண்டு கேலி செய்திகளை வெளியிடும் வலைதளம் ஒன்றில் வெளியான தொகுப்பை மையமாக கொண்டு பரவி வருகிறது. கேலி செய்திகளை வெளியிடும் வலைதளத்தில், 'எலான் மஸ்க் முதலீட்டாளர்களிடம் மனித குலத்திற்கு நன்மை பயக்க சமூக வலைதள நிறுவனத்தை வாங்க விரும்புவதாக தெரிவித்தார்,' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக பேஸ்புக் மற்றும் மார்க் ஜூக்கர்பர்க்-ஐ வன்மையாக கண்டித்த எலான் மஸ்க், 2018 வாக்கில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அக்கவுண்ட்களையும் பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். அப்போது இந்த நடவடிக்கையை கேலி செய்யும் வகையில் அந்த செய்தி தொகுப்பு வெளியானது. தற்போது சில ஆண்டுகளுக்கு முன் வெளியான கேலி செய்தியே வைரல் தகவலாக பகிரப்பட்டு வருகிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா முதல் முறையாக தலைமை பொறுப்பை ஏற்று இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று இருக்கிறது. இதையொட்டி ஐக்கிய நாடுகள் கவுன்சிலில் இப்போது தான் இந்தியா முதல் முறையாக தலைமை பொறுப்பை ஏற்று இருக்கிறது என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா எட்டாவது முறையாக இடம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த கவுன்சிலின் தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் மாற்றப்பட்டு வருகிறது.
ஐத்திய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றன. ஐ.நா. பொதுக்குழு சர்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் பத்து தற்காலிக உறுப்பினர்கள் கவுன்சிலில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2021-22 ஆண்டுகளுக்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இந்தியா சேர்க்கப்பட்டது.

முன்னதாக 1950-51, 1967-68, 1977-78, 1984-85, 1991-92 மற்றும் 2011-12 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பு ஒவ்வொரு மாதத்திற்கும் அதன் உறுப்பினர்களால் ஏற்கப்பட்டு வருகிறது.
தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமை பொறுப்பை பிரான்சிடம் இருந்து இந்தியா ஏற்று இருக்கிறது. செப்டம்பர் மாதத்திற்கான தலைமை பொறுப்பை ஐயர்லாந்து ஏற்க இருக்கிறது. மீண்டும் டிசம்பர் 2022 மாதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் நீட்டா அம்பானி இடம்பெற்று இருக்கும் புகைப்படம் தவறான தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் பவுன்டேஷன் தலைவர் நீட்டா அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தரேயா ஹோசபலே ராமர் கோயில் புகைப்படத்துடன் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தின் கீழ் “Rashtriya Swayamsevak Sangh ke Mahasachiv Uttar Pradesh Dattatreya Hosabale” என எழுதப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெற இருக்கும் உத்திர பிரதேச மாநில தேர்தலையொட்டி நீட்டா அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "ராமர் பெயரில் மோசமான அரசியல்," எனும் வாசகங்களுடன் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், வெவ்வேறு புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. நீட்டா அம்பானி தத்தரேயா ஹோசபலேவை சந்தித்ததே இல்லை என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.






