என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    காபூலில் எடுக்கப்பட்டதாக கூறி இணையத்தில் வைரலாகும் வீடியோ

    காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றும் போது எடுக்கப்பட்டது என கூறி வீடியோ வைரலாகி வருகிறது.


    ஆப்கானிஸ்தானை தலிபான்களை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது. வீதிகளில் சடலங்கள், மக்கள் அந்நாட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

    ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை மற்றும் பாராளுமன்றத்தை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி அங்கிருந்து தப்பிவிட்டார்.

    இந்த நிலையில், அல்லாஹூ அக்பர் என கூறியப்படி ஆண்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றும் போது எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது காபூலில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ ஆறு ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் எடுக்கப்பட்டது ஆகும். வீடியோவில் சிரியா கொடி இடம்பெற்று இருக்கிறது. இதுகுறித்த இணைய தேடல்களில், வீடியோ மார்ச் 2015 ஆம் ஆண்டு பதிவிடப்பட்டது என தெரியவந்துள்ளது.

    மேலும் வீடியோ சிரியாவின் வடமேற்கு பகுதியில் எடுக்கப்பட்டது என கூறும் செய்தி தொகுப்பும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. உண்மையில், காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றி இருந்தாலும், வைரல் வீடியோ அங்கு எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×