என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க.வினர் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்று, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். #aiadmkalliance
    பெரம்பலூர்:

    பா.ஜ.க.வின் திருச்சி பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், திருச்சி, கரூர், சிதம்பரம் (தனி) உள்ளிட்ட 10 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

    இதையடுத்து இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல், இரண்டொரு நாளில் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு மூலம் முறைப்படி அறிவிக்கப்படும். தமிழகத்தில் 5 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட்டாலும், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பா.ஜ.க தொண்டர்கள் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள்.

    இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைவரது நோக்கமும் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதே. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு கவலைக்குரிய பிரச்சினை தான் என்றாலும், பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரித்து, அத்தொகுதியில் மக்களிடம் வெற்றி வாய்ப்பைப் பெறுவோம். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு அதிகப்படியான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #aiadmkalliance
    தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #parliamentelection #dmkalliance
    சென்னை:

    அதிமுக, திமுக தலைமையில் தமிழகத்தில் இரு மெகா கூட்டணிகள் இந்த முறை அமைந்துள்ளது. இந்த கூட்டணி போக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் கட்சியும் தனியாக களமிறங்குகிறது. பிற இதர கட்சிகளும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத மிகவும் முக்கியமான தேர்தலாக இது உள்ளது. அரசியல் கட்சிகள் வெற்றியை பெற தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களையும் அதிமுக கூட்டணி 5 இடங்களையும் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 52.20 சதவித வாக்குகளையும், அதிமுக, பா.ஜனதா., பாமக, தேமுதிக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 37. 20 சதவித வாக்குகளையும், மற்ற கட்சிகள் 10.60 சதவித வாக்குகளை கைப்பற்றும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும் கம்யூனிஸ்ட் கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் 22 இடங்களையும் தெலுங்கு தேசம் 3 இடங்களையும் கைப்பற்றும். தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 13 தொகுதிகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு தொக்தியிலும், பா.ஜனதா கூட்டணி 2 தொகுதியிலும், மற்றவை ஒரு தொகுதியிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #parliamentelection #dmkalliance
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #makkalneedhimaiamparty #kamal
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. 24-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. கட்சியின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல், பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர் என தகவல் வெளியாகியது. இப்போது குமரவேல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிப்பதில்லை. வேட்பாளர்கள் நேர்காணல் முடியும் முன்னே தன்னை வேட்பாளராக அறிவித்தது கட்சிக்கு முரண்பாடான செயல் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கட்சியில் இருந்து விலகிய குமரவேல், செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி முரணாக உள்ளது. கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்தேன் என்றார். 

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதி உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கும் முன்னே நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். #makkalneedhimaiamparty #kamal
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளர் சி.கே.குமரவேல் ராஜினாமா தொடர்பாக அந்த கட்சியின் சார்பில் இன்று விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. #CKKumaravel #MNM #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமாக கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல் நியமிக்கப்பட்டார்.

    எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை நிறுத்தும் நேர்காணலும் பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.

    வரும் 24-ம் தேதி கோவை கொடிசியா திடலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு அவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

    சென்னை பிரஸ் கிளப்பில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சி.கே.குமரவேல் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்திக்க முடியவில்லை. புதியவர்களால் கட்சி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.



    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதே தன்னை கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் சமூக வலைத்தளங்களில் முன்னிறுத்திக் கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் கட்சி தலைமையிடம் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால் குமரவேலின் ராஜினாமா ஏற்கப்பட்டது என அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CKKumaravel #MNM #KamalHaasan
    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர், நாகை மாவட்ட பொறுப்பாளராக இருந்த சி.கே.குமரவேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #CKKumaravel #MNM #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமாக கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல் நியமிக்கப்பட்டார்.



    எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை நிறுத்தும் நேர்காணலும் பரிசீலனையும் நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதி கோவை கொடிசியா திடலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு அவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

    தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. #CKKumaravel #MNM #KamalHaasan
    ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் தொகுதிகளுக்கான 2-வது வேட்பாளர் பட்டியல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. #LSPolls #PMK
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    முதல் கட்டமாக தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    அன்புமணி ராமதாஸ் மீண்டும் தர்மபுரியில் போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளில் வடிவேல் ராவணன், கோவிந்தசாமி, ஏ.கே.மூர்த்தி, சாம்பால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.



    இன்று மீதம் உள்ள ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் தொகுதிகளுக்கான 2-வது வேட்பாளர் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக பா.ம.க. துணை தலைவர் அ.வைத்திலிங்கம், திண்டுக்கல் வேட்பாளராக பா.ம.க. துணை பொது செயலாளர் க.ஜோதிமுத்து ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார். #LSPolls #PMK
    தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் தனியார் வங்கி பணம் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அதில் ரூ.1 கோடியே 4 லட்சம் பணம் இருந்தது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஊழியர்கள் கூறும்போது, “அடையாறு ஆக்சிஸ் வங்கியில் இருந்து இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், காட்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக கூறினர்.

    மேலும் அதற்கான வங்கி ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்தனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சமயத்தில் வங்கி பணம் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் சிறப்பு அனுமதி கடிதம் இல்லாததால் வங்கி பணம் ரூ.1.04 கோடியை பறிமுதல் செய்தனர். பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் ஆவணங்களை ஆய்வு செய்து பணத்தை பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ஆக்சிஸ் வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி சார்பில் சிறப்பு அனுமதி பெற்று சான்றிதழ் கொடுத்ததும் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. #LSpolls

    சென்னை கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விதிமீறல் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #LSPoll #TNCEO
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்தார். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கல்லூரி மாணவிகளை வைத்து நிகழ்ச்சி நடத்தியதாக ராகுல் மீது பாஜக புகார் கூறியது.



    இதையடுத்து  ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படி இணை இயக்குனருக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார்.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தியதில் தேர்தல் விதிமீறல் இல்லை. கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையான அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை தந்துள்ளார்.

    தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 6.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LSPoll #TNCEO
    பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP

    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவா முதல்வரும் முன்னாள் ராணுவ மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரின் மறைவு நாட்டிற்கு பெரிய இழப்பு. அவரது மறைவு காரணமாக பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

    நாளைய தினம் நடைபெறும் பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். அதன்பின்பு வேட்பாளர்கள் பட்டியல் நாளைய தினமே வெளியிடப்படும்.

    காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி தோல்வி கூட்டணி. எங்கள் பிரச்சாரம் மக்களை நேரில் சந்திக்கும் பிரசாரமாக இருக்கும்.

    சவுகிதார் என்றால் மக்களின் காவலன் என்று அர்த்தம் . மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்காக இந்த பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே பிரதமர் மோடி மக்களின் காவலன், மக்களுக்கு சேவை செய்பவர்.

    தூத்துக்குடியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறீர்கள்.கட்சி எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு நிற்பேன். கட்சியின் விருப்பம் தான் என் விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP

    அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். #NRNatarajan #ThanjavurLSseat #TMCcandidate #Thanjavurcandidate
    தஞ்சாவூர்:

    பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி  அமைத்து சந்திக்கும்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

    இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.



    இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார். #NRNatarajan #ThanjavurLSseat  #TMCcandidate #Thanjavurcandidate 
    பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது என்று ஆம்ஸ்ட்ராங் கூறியுள்ளார். #BSP

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தலைமையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார்.

    அவரிடம் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும். 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துமாறும் மாயாவதி கேட்டுக் கொண்டார்.

     


    மேலும் தமிழகத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி தமிழகத்ல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் ஆம்ஸ்ட்ராங்கிடம் உறுதி அளித்தார்.

    இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், துணை தலைவர் மணிவண்ணன், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். #BSP

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கையாற்றின் வழியாக படகில் சென்று வாக்காளர்களை சந்திக்கும் கங்கா யாத்ரா பிரசாரத்தை பிரியங்கா காந்தி இன்று தொடங்கினார். #PriyankaGandhi #Gangayatra #LSpolls
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, பிரயாக்ராஜ் மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில் ‘கங்கா யாத்ரா’ என்ற பெயரில் படகில் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையை திரிவேணி சங்கமத்தில் இருந்து அவர் இன்று தொடங்கினார்.



    கங்கை நதியில் சுமார் 140 கிலோமீட்டர் தூரத்துக்கு படகில் செல்லும் அவர் நதிக்கரையில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். குறிப்பாக, கங்கை நதியை வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் மீனவ மக்கள் மற்றும் ராஜபுத்திர இன மக்களை அவர் சந்தித்துப்பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பின்னர், பிரதமர் மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நடைபெறும் மாபெரும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா உரையாற்றுகிறார்.

    இன்று தனது பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தியை திரிவேணி சங்கமம் பகுதியில் உள்ள மானியா காட் என்ற இடத்தில் ஏராளமான பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்களும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். #PriyankaGandhi #Gangayatra #LSpolls
    ×