என் மலர்
விருதுநகர்
- நரிக்குடி ஒன்றியம் வேளானூரணி கிராமத்தில் தொடக்கப்பள்ளி இல்லாததால் 3 கி.மீ. தூரம் சென்று குழந்தைகள் கல்வி கற்கிறார்கள்.
- போராட்டத்தில் ஈடுபட போவதா கவும் வேளானூரணி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சுழிசு
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட வேளானூ ரணி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்ற னர். இந்த கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக்கல்வி பயின்று வருகின்றனர்.
ஆனாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேளானூரணி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியே இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலுப்பையூர் பகுதிக்கு சென்று தான் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவ லமான சூழ்நிலை ஏற்பட்டுள் ளது.
மேலும் இலுப்பையூர் பகுதியிலும் அரசுப்பள்ளி இல்லையென்பதால் அரசு உதவிபெறும் தனியார் பள் ளியிலேயே தங்களது குழந் தைகளை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதா கவும் வேளானூரணி கிராம மக்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.
மழைக்காலங்களின் போது தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற் றோர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் ஆதங்கத்து டன் தெரிவித்தனர். இந்த நிலையில் இலுப்பையூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு செல்வதற்காக வேளானூரணி கிராம மக் கள் தங்களது குழந்தைகளை பள்ளி வாகனத்திற்கென தனியாக பேருந்து கட்டணம் செலுத்தி பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கும் கஷ்டமான சூழ்நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகி றது.
மேலும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் வேன் கட்டணம் செலுத்த முடியாமல் தங்கள் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்ப இயலாமல் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும் சூழ் நிலையும் உருவாக்கியுள்ள தாக பெற்றோர்கள் வருத்த முடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வேளா ணூரணி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு உள்ளதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகத் திற்கு பலமுறை மனு அனுப் பியும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை யென புகார் எழுந்துள்ளது.
மேலும், தங்கள் கிராமத் தில் அரசு தொடக்கப்பள் ளியை உடனடியாக கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தொடர் போராட் டத்தில் ஈடுபட போவதா கவும் வேளானூரணி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
- ஒரு மாத சம்பளத்தை கல்விக்காக தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- 82- வது மாத ஊதியத்திலிருந்து (ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்) வழங்கினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் தனது 82- வது மாத ஊதியத்திலிருந்து (ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்) சேத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்த வித்யா, முத்துச்செல்வி, மஞ்சுளா, ராஜபாளை யத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, சரண்யா மற்றும் சொக்க நாதன்புத்தூர் ஊராட்சியைச்சேர்ந்த திவ்யா ஆகிய 6 மாணவிகளுக்கு மருத்துவம், வழக்கறிஞர், ஆசிரியர் படிப்பு போன்ற மேற் படிப்பை தொடர ஏதுவாக கல்வி உதவித்தொகையாக வழங்க முடிவு செய்தார்.
அதன்படி கல்வி உதவித் தொகையை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் மாணவ, மாணவி களுக்கு வழங்கினர். அப்போது அவர்கள் கல்வியை சிறப்பாக பயின்று எதிர்காலத்தில் ஏழை-எளிய பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டனர். மேலும் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மாணவிகள் இரு வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், தேவதானம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.63 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
- மறையூர் கண்மாய் கிழக்கு கலுங்கு பகுதியில் பாலம் கட்டும் பணியானது சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கலுங்கு பகுதியில் உள்ள தண்ணீர் வந்து மறுகால் பாயும் தரைப்பாலத்தை உயர் பாலமாக கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக இருஞ்சிறை விலக்கு-கட்டனூர் சாலை யில் அமைந்துள்ள மறையூர் கலுங்கு பகுதியில் ரூ.63 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக உயர்த்தி கட்டும் பணிகள் நடை பெற்று வருகிறது.
மேலும் இந்த பாலம் கட்டும் பணிகளால் இருஞ் சிறை வழியாக மதுரை, கமுதி, நரிக்குடி மற்றும் மானாமதுரை உட்பட பல் வேறு பகுதிகளுக்கு பொது மக்கள் வாகனங்க ளில் சென்று வருவதால் போக்கு வரத்து தடைபடாமல் இருக்க பாலத்தின் அருகே மாற்றுப்பாதையும் ஏற்படுத் தப்பட்டு உள்ளது.இந்த நிலையில் மறையூர் கண்மாய் கிழக்கு கலுங்கு பகுதியில் பாலம் கட்டும் பணியானது சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பருவ மழைகாலம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது போடப் பட்டுள்ள மாற்றுப் பாதை யானது மழையால் சேதம டைய வாய்ப்புள்ளதாகவும், விரைவில் பாலத்தை கட்டி முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கேட் டுக்கண்டுள்ளனர்.
இந்த உயர்மட்ட பாலம் கட்டும் பணி குறித்து நெடுஞ்சாலைத்துறையின் திருச்சுழி உதவி கோட்ட பொறியாளர் கணேசன் கூறுகையில், இன்னும் ஓரிரு மாதத்தில் பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்து, விரைவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
- சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் சரியான இட ஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பேட்டியளித்தார்.
- பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இந்தியா கூட்டணியை பலவீனப் படுத்த நினைக்கிறார்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறிய தாவது:-
நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சரியான இட ஒதுக்கீடு வழங்க முடியும். தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்களை அரசு கொள்ளையடித்து வருவதாக பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவில்கள் அரசின் கட்டுப் பாட்டில் தான் இருந்தன. இந்திய வரலாறு குறித்து மோடிக்கு சரியாக தெரியாது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இந்தியா கூட்டணியை பலவீனப் படுத்த நினைக்கிறார். பட்டாசு பிரச்சினை தொடர்பாக விரைவில் முதல்-அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தமிழகம், பாண்டிச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது. விருது நகர், கன்னியாகுமரி தொகு தியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் அந்த தொகுதி களை ஒதுக்குமாறு வலியு றுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. உதவி பேராசிரியை பரிதா பேகம் வரவேற்றார். ஆங்கிலத் துறை தலைவர் பெமினா தலைமை தாங்கி ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியை அர்ச்சனா தேவி ஆங்கிலத் துறையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது மகன், மகளின் படிப்பு குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். உதவி பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- பணியில் இருந்த பெண் காவலரை தாக்கிய கோவில் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
- இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரி யம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு முழு வதும் பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரு கின்றனர். இதனால் கோவி லில் பாதுகாப்பிற்காக இருக் கன்குடி மற்றும் அப்பயநா யக்கன்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து காவலர்கள் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் பணிபு ரியும் காளியம்மாள் என்ற பெண் காவலர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வந்துள்ளார். அப் போது இருக்கன்குடி மாரி யம்மன் கோவிலில் பணிபுரி யும் மணிசங்கர் என்பவர் பணியில் இருந்த பெண் காவலர் காளியம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார்.
வாக்குவாதம் முற்றியதை யடுத்து அவர் பெண் கா வலரை தாக்கியதாக தெரிகி றது. உடனடியாக இதைப் பார்த்த அருகில் உள்ள காவ லர்கள் காளியம்மாளை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பணியில் இருந்த பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பெண் என்றும் பாராமல் தாக்கிய குற்றத்திற்காக கோவில் பணியாளர் மணிசங்கரை கைது செய்து இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- எஸ்.பி.கே. கல்லூரி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
- 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் ஏ.என்.டி. கல்வி மருத்துவம் சமூகம் மேம்பாட்டு அறக்கட் டளை, வாசன் கண் மருத்து வமனை, மதுரை பாண்டி யன் மருத்துவமனை மற்றும் சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் இருதய நோய், காது மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட் டது.
இந்த முகமினை எஸ்.பி.கே. கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட அணியினர் ஏற்பாடு செய்தனர். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இலவச பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கு ஏ.என்.டி. கல்வி மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் பேராசிரியர் டாக்டர் தி.ஜெய ராஜசேகர் தலைமை தாங்கினார்
அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலை வர் பி.கே.காமராஜ் முகா மினை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.பி.கே. கல்விக் குழும தலைவர் எம்.ஜெயக்குமார் கலந்து கொண்டார். எஸ்.பி.கே. கல்லூரியின் முதல் வர் முனைவர் கே. செல்லத் தாய் வரவேற்றார். துணை முதல்வர் முனைவர் டி.ஜாக்குலின் பெரியநாயகம், கல்லூரி தலைவர் டி.வி.சங்கர், உதவி செயலாளர் முத்து தினகரன், உதவி தலைவர் எஸ்.சண்முகவேல், பொருளாளர் கே.சுந்தர், உதவி செயலாளர் எம்.பிரகதீஷ் பிரபு, பாண்டியன் மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியை ஒருங்கி ணைப்பாளர்கள் பேராசி ரியை எம்.அனிதா பொரு ளாளர் திருவேங்கடம் ராமா னுஜம் ஆகியோர் ஒருங்கி ணைத்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உடல் பரி சோதனை செய்து கொண் டனர்.
- 2 வீடுகளில் புகுந்து 19 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டங்குளம் ரோடு விழுப்பனூரில் உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 15½ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய விஜயகுமார் கதவு உடைக்கப்பட்டு நகை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு கொள்ளை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணா மலையை சேர்ந்தவர் மாரீஸ்வரி(36). சம்பவத் தன்று இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.
- அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவனத்தம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் மேற்பார்வையாளர் மாரீஸ்வரின், விற்ப னையாளர் செந்தில்குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கு வந்த கடம்பன் குளத்தை சேர்ந்த வசந்த குமார்(20) என்பவர் பணம் கொடுக்காமல் மது பாட்டில் களை கேட்டுள்ளார்.
ஆனால் ஊழியர்கள் அவரை கண்டித்து இங்கிருந்து செல்லுமாறு கூறினர். இதனால் ஆத்திர மடைந்த வசந்தகுமார், ஊழியர்களை தரக்குறைவாக பேசி விட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வசந்தகுமார் பெட்ரோல் குண்டை கடை மீது வீசினார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.
இதனால் ஊழியர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி யடைந்த டாஸ்மாக் ஊழி யர்கள் வசந்தகுமாரை பிடிக்க முயன்றனர். அப் போது அவர் கீழே கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து குத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.
- ராஜபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பயிலகம் தொடங்கியது
- முதல் நாளிலேயே 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலகத்தில் ஆர்வமுடன் பயில வந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சமந்தாபுரம் மேல பள்ளிவாசல் தெருவில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பயிலகம் தொடக்க விழா நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்க விருது நகர் மாவட்ட செயலாளர் பாலா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
பயிலக திறப்பு விழா ஏற்பாடுகளை நகர பொருளாளர் சமீர், திவான், நாகராஜ் உள்பட இயக்க நிர்வாகிகள் செய் திருந்தனர். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரு ஆசிரியர்கள் கொண்டு தொடங்கப்பட்டுள்ள விஜய் பயில கத்தில் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலகத்தில் ஆர்வமுடன் பயில வந்தனர். அவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா, புத்தகம் உட்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது.
- மருதுபாண்டியர்க ளுக்கு நினைவு அஞ்சலி செலுத்த நரிக்குடி முக்குளம் செல்வதற்கு அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.
விருதுநகர்
மருது பேரவை சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வா கத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:-
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பிறந்த ஊரான நரிக்குடி முக்குளத் தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்க வேண் டும். மருதுபாண்டி யர்கள் பிறந்த இடத்திற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வாழ்ந்த ஊர் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருதுபாண்டியர்க ளுக்கு நினைவு அஞ்சலி செலுத்த நரிக்குடி முக்குளம் செல்வதற்கு அனைவரையும் அனுமதிக்க வேண்டும். மருதுபாண்டியர் ஆலயத்தில் அமைந்துள்ள நரிக்குடி அரசு பள்ளிக்கு விடுமுறை வழங்க வேண்டும்.
திருப்பத்தூர் காளையார் கோவிலில் நடைபெறுவது போல் மருது பாண்டியர்கள் பிறந்த நரிக்குடி முக்குளத் தில் அரசு விழா நடத்த வேண்டும். நரிக்குடி முக்கு ளம் அரசு தொடக்கக் கல்வி பள்ளி வளாகத்தில் அமைந் துள்ள பெரிய மருதுபாண்டி யர் ஆலயம் மற்றும் ஐந்து ராணிகளின் ஆலயத்தை புதிதாக கட்டித்தர வேண் டும். மேற்கண்ட கோரிக்கை கள் குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- தென்னை விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னையில் அறிவியல் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து கருத்தரங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
வேளாண்மை இணை இயக்குனர் பத்மாவதி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் தனலட்சுமி வரவேற்றார். தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தென்னையில் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள், காப்பீடு, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் காப்பீடு, நலத்திட்டங்கள், குறித்து பேசினார்.
பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் வீரபத்திரன் தென்னை சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை குறித்து பேசினார். பேராசிரியர் தங்கபாண்டியன் தென்னை ரகங்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், வேளாண் விற்பனை துறை அலுவலர் மகாலட்சுமி, தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டல் செய்வது குறித்தும், ஒழுங்குமுறை விற்பனை குழு கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி, இ-நாம் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.






