என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிப்பு முயற்சி-2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் எம்.ரெட்டியப்பட்டி அருகே யுள்ள சிலுக்கப்பட்டி பகுதி யில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த அரசு பெண்கள் மேல்நி–லைப்பள்ளி விடுதி காப்பா ளர் சுப்புலட்சுமி (வயது 58) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கள் நகை பறிப்பு முயற்சி யில் ஈடுபட்டனர்.

    சுதாரித்துக்கொண்ட அவர் நகையுடன் தப்பினார். இதுகுறித்து எம். ரெட்டியப் பட்டி போலீசில் சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள ஒரு சி.சி.டி.வி. காட்சிப்பதிவு களை கொண்டு நகை பறிப்பு சம்பவத்தில் ஈடு பட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு வாலிபர் களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட தில் அவர்கள்தான் பெண் விடுதி காப்பாளர் சுப்பு லட்சுமியுடம் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ரெட்டையூரணி பகுதியை சேர்ந்த யுவஸ்ரீதர் (23), பரமக்குடி மணிநகர் பகுதி யைச் சேர்ந்த ஆதீஸ்வ ரன் (18) என்பதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
    • அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 58-வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. இதில் அரசு மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவ னங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் தங்கி பயிலும் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் 37 பள்ளி மாணவ-மாணவி களை சந்தித்து கலெக்டர் ஜெயசீலன் உரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கை யில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனு வங்களில் இருந்து கிடைக் கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.

    வாழ்க்கையில் சாதிக்க கூடுதல் முயற்சி செய்ய 12-ம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

    படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றம் அடைய செய்யும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு மிகவும் எளிய வழி என்றால் அது படிப்பு மட்டுமே.

    உயர்கல்வி எங்கு பயின் றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற் றிக்கு தேவையான விஷ யங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.

    மேலும், ஒவ்வொரு வருக்கும் என்று தனித் திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேதமடைந்த பெரிய கண்மாய் மதகுகள், மடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • சேதமடைந்த பெரிய கண்மாய் மதகுகள், மடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இருஞ்சிறை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய கண்மாய் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மடைகள் மற்றும் அதனை சார்ந்த கால்வாய்கள் அனைத்தும் சேதமடைந்தி ருப்ப தாகவும், தமிழக அரசு விரைவில் அதனை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இருஞ்சிறை கிராமப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுதொடர்பான செய்தி 'மாலை மலர்' நாளிதழிலும் வெளியானது. இதனைய டுத்து நேற்று இருஞ்சிறை பெரிய கண்மாய் பகுதிக்கு நேரில் வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் இருஞ் சிறை பெரிய கண்மாய் பகுதியிலுள்ள கலுங்கு மடைப்பகுதி, பெரியமடை, தாழிமடை, கருதாமடை, வெள்ளமடை உட்பட அனைத்து மடைகளையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் மடைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் சேதம டைந்த மடைகளையும், ஷட்டர் கதவுகள் இல்லாத மடை பகுதிகளையும் ஆய்வு கள் செய்து அளவீடு கள் மேற்கொண்டனர்.

    இதுகுறித்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மடைகளின் சேதம், கால்வாய்கள் ஆக்கி ரமிப்பு, உள்பட இருஞ்சிறை கண்மாய் மடைகள் குறித்த அனைத்து குறைகளையும் அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, அதன் மூலம் விவசாயிகளின் கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென தெரிவித் தனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த ஆய் வுப்பணியின் போது இருஞ் சிறை கிராமப்பகுதி விவசா யிகள் ஏராளமானோர் உட னிருந்தனர்.

    • காரை ஓட்டி வந்த மணிகண்டன், அவரது மனைவி, குழந்தைகள், தனம், பிச்சையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
    • விபத்து குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    கோவை மாவட்டம் திருப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது37). பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா பாரதி (32). இவர்களுக்கு விஸ்வாஸ்(8), மேகா ஸ்ரீ(6) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் தங்கள் உறவினர்கள் தனம்(60), பிச்சையம்மாள்(80), அருண் குமார்(45) ஆகியோருடன் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். நேற்று குற்றாலம் சென்றுள்ளனர்.

    இன்று அதிகாலை குற்றாலத்தில் இருந்து குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டனர். மணிகண்டன் காரை ஓட்டினார். தென்காசி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரை ஓட்டி வந்த மணிகண்டன், அவரது மனைவி, குழந்தைகள், தனம், பிச்சையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் காரில் இருந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த தனம், பிச்சையம்மாள் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கணவன்-மனைவி, குழந்தைகளுக்கு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
    • மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு அகஸ்தியர் உட்பட 18 சித்தர்களும் வாழ்ந்து வழிபட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

    சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கமும் இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக லிங்கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் சதுரகிரிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அதன்படி வருகிற 14-ந்தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு நாளை (12-ந்தேதி) முதல் வருகிற 15-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.

    மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்து உள்ளது.

    மகாளய அமாவாசைக்கு இம்முறை சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகமும், வனத் துறையினரும் அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். மேலும் மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கூடுதலாக சதுரகிரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    • சதுரகிரி செல்ல அனுமதிக்கக்கோரி வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த ஆண்டு இரவில் தங்கி வழிபாடு நடத்த வனத்துறை தடை விதித்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி கிருஷ்ணன் கோவில் அருகே சுந்தரபாண்டியம் அம்மனுக்கு ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா கொண்டா டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    கொரோனா ஊரடங்கு தளர்வு காலத்திலும் பக்தர்கள் இரவில் கோயிலில் தங்கி வழிபாடு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக நவராத்திரி திருவிழாவில் கடைசி மூன்று நாட்கள் மட்டுமே வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது. அதிலும் இந்த ஆண்டு இரவில் தங்கி வழிபாடு நடத்த வனத்துறை தடை விதித்துள்ளது. நவராத்திரி விழாவில் கோயிலில் இரவில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வனத்துறைக்கும் இந்து சமய அறநிலையத்து றைக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் நவராத்திரி விழா குறித்த அமைதி கூட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் முத்துமாரி வத்திராயிருப்பு வனச்சரகர் பிரபாகரன், சாப்டூர் வனச்சரகர் செல்லமணி, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் ஏழூர் சாலியர் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் நவராத்திரி திருவிழாவில் கடைசி 3 நாட்கள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான பக்தர்களை மலைக் கோயிலில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இரவில் தங்கி வழிபாடு நடத்துவதற்கு வனத்துறை அனுமதி மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சுந்தர பாண்டியம் ஏழூர் சாலியர் சமுதாய பொது மக்கள் வனத்துறையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
    • போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பாவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சித்தப்பா, பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். 10-ம் வகுப்பு தேர்வு சமயத்தில் சித்தப்பா இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாட்டி மற்றும் உறவினரிடம் சிறுமி கூறி உள்ளார். இதையடுத்து சிறுமிக்கு பாதுகாப்பு வேண்டும் என கருதி அவர்கள் திருமண ஏற்பாடு செய்தனர். ஆனால் திருமணத்திற்கு சிறுமி மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் பாட்டியும், உறவினரும், மாப்பிள்ளை பார்ப்பதில் தீவிரம் காட்டினர். இது குறித்து பள்ளி தலைமையாசிரி யரிடம் சிறுமி தெரிவித்தார். உடனடி யாக குழந்தைகள் நலத்துறையின் கவனத்திற்கு தலைமையாசிரியர் கொண்டு சென்றார். இதை யடுத்து அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்து சிறுமியை ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.

    மேலும் இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பாவை தேடி வருகின்றனர்.

    • அரசு விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    • சந்தேகத்தின் பேரில் இரு வரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மண்டபசாலை புதூர் பகு தியை சுப்புலட்சுமி (வயது 58). இவரது கணவர் சின் னத்தம்பி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் சுப்புலட்சுமி கோவிலாங்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள் ளியின் மாணவிகள் விடுதி யில் இரவு காவலராக பணி புரிந்து வருகிறார்.

    இதற்கிடையே சுப்புலட் சுமி தனது ஊரான எம்.புதூரில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் சுப்புலட்சுமி வழக்கம்போல் விடுதிக்கு இரவு காப்பாளர் வேலைக்கு சென்று விட்டு நேற்று காலை தனது சொந்த ஊரான எம்.புதூர் கிராமத் திற்கு செல்வதற்காக பேருந் தில் வந்தார்.

    ஒத்தக்கடை பஜார் பகு தியில் இறங்கிய அவர் அங்குள்ள காய்கறிக்கடை யில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு எம்.புதூருக்கு குறுக்கு வழியில் செல்ல எண்ணி நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது அவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    மேலும் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் அதிக முள்ள பஜார் பகுதியில் நேற் க்கு ஆள் நடமாட்ட மில்லாத நேரத்தை தங்க ளுக்கு சாதகமாக பயன்ப டுத்திகொண்ட அந்த வாலி பர்கள் சுப்புலட்சுமி யிடம் நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் சுதாரித்துக் கொண்ட சுப்புலட்சுமி நகை பறி கொடுக்காமல் தப்பி னார். இதுகுறித்து எம்.ரெட்டியாபட்டி போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் அளித்தார். இதனை யடுத்து சம்பவம் நடந்த பகுதியான ஒத்தக்கடை பஜார் பகுதியில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிப்பதிவுகளை அடிப்படையாக வைத்து நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவந்தனர்.

    மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரு வரை பிடித்து போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • சசிகுமார் தினமும் இரவு, பகல் பாராமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
    • குடிப்பழகத்தை நிறுத்துமாறு தந்தை மற்றும் சகோதரர்கள் பலமுறை அறிவுரை கூறியும் அதனை சசிக்குமார் ஏற்கவில்லை.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவில் குடியிருந்து வருபவர் கணபதி. இவருக்கு கந்தசாமி என்ற சசிகுமார் (வயது 28), சரவணகுமார் (24), ராஜா (21) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

    இதில் மூத்த மகனான சரவணகுமார் திருமணம் முடித்து தந்தையின் வீட்டு அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இளைய மகன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

    அத்துடன் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது. இதனால் சசிகுமார் தினமும் இரவு, பகல் பாராமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். குடிப்பழகத்தை நிறுத்துமாறு அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் பலமுறை அறிவுரை கூறியும் அதனை சசிக்குமார் ஏற்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை சசிகுமார் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணபதி எழுந்து வந்து பார்த்தபோது சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் குடும்ப பிரச்சனை காரணமாக உடன்பிறந்த சகோதரரே இந்த கொலையை செய்தாரா அல்லது மது அருந்தும் தகராறில் வேறு யாராவது மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு உடலை வீட்டில் வீசிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகாசியில் மாநகராட்சி புதிய கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
    • துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தலைமையில் அமைச் சர்கள் நேரு, சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அப்போது அமைச்சர் கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்க ளுக்கு எளிதிலும், விரை வாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவி களை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரம மின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதித்திட்டங் களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதி களுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த புதிய கட்டிட பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் அரசு நிர்ண யம் செய்யப்பட்டுள்ள காலக்கட்டத்திற்குள் விரைந்து முடித்து, பயன் பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆய்வின்போது தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் அசோகன், சீனிவாசன், தங்கபாண்டி யன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சிவகாசி மாநக ராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் விவேகன் ராஜ், மாமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் கொடுத்தார்.
    • பாலமுரளி இதுவரை யார் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது சகோதரி ஜானகி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலம் கூட்டு பட்டாவாக இருப்பதால் தனது தம்பி பாலகிருஷ்ணனுக்கு பட்டா பிரித்து தர ஜானகி முடிவு செய்தார்.

    இதையடுத்து அந்த இடத்தின் பட்டாவை பிரித்து தர கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் இருவரும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அவரும், நில அளவையரும் அந்த இடத்திற்கு சென்று நிலத்தை அளந்துள்ளனர். பின்னர் பாலமுரளி தனிப்பட்டா வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட பாலமுரளி அதை சரிபார்த்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலமுரளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். பாலமுரளி இதுவரை யார் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • ஒவ்வொரு தொகுதி யிலும் ராகுல்காந்தி தான் வேட்பாளர் என்று நினைத்து நீங் கள் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசியில் காங்கிரஸ் கட்சியின் விருதுநகர், தென்காசி பாராளுமன்ற தொகுதிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு நடை பெற்றது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், எம்.பி. கலந்து கொண்டு பேசிய தாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கிய மானது. ஒவ்வொரு தொகுதி யிலும் ராகுல்காந்தி தான் வேட்பாளர் என்று நினைத்து நீங் கள் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்குசாவடி யிலும் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக வாக்கு பதிவாகி இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்.

    இந்த தேர்தல் இந்தியா கூட்டணிக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் நடக்கும் தேர்தல் ஆகும். பா.ஜ.க. மக்க ளிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் ராகுல் காந்தி பாதையாத்திரை மேற்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கருத்து கணிப்பில் 70 சதவீதம் மக்கள் ராகுல்காந்தி பிரத மராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள் ளனர். வருகிற ேதர்தலில் அதிக இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் விஜய் வசத்த் எம்.பி., தமிழ்நாடு சிறு பான்மை ஆணை யத்தின் தலைவர் பீட்டர் அல் போன்ஸ், முன்னாள் எம்.பி விஸ்வநாதன், அசோகன் எம்.எல்.ஏ.க்கள் ராதா கிருஷ்ணன், பழனி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், சிரஞ்சிவி, காமராஜர், ஸ்ரீராஜாசொக் கர், ரங்கசாமி, அம்மாபட்டி பாண்டியன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாணவர் காங்கிரஸ் தலை வர் சின்னதம்பி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×