என் மலர்
நீங்கள் தேடியது "studying under a tree"
- போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ-மாணவிகள் மரத்தடியில் கல்வி பயில்கின்றனர்.
- மாவட்ட கலெக்டக்கும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சித்தலக்குண்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளி கடந்த 2018-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை அதிக அளவில் மாணவ-மாணவிகள் சேர்ந்தனர். தற்போது இந்த பள்ளியில் திருச்சுழி, சித்தலக்குண்டு, பாறைக்குளம், கீழகண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி தரம் உயர்த்தப்பட்ட பின்னர் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக அதிகரித்து வந்தது. ஆனால் அதற்கேற்ப பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை. இதனால் வேறுவழியின்றி மாணவ-மாணவிகள் வளாகத்தில் பள்ளி மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
திருச்சுழி-அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இந்த பள்ளி அமைந்துள்ள தால் வளாகத்தில் அமர்ந்து கல்வி கற்பத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வரும் வாகனங்களின் சத்தம் உள்ளிட்ட இடையூறு காரணமாக கவன சிதறல்களும் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் ஒதுங்கக்கூட இடம் இல்லை. பெரும்பாலான மழை பெய்யும் நாட்களில் பள்ளிக்கு விடுமுறை விடப்படு கிறது.
இதனால் பெற்றோர்கள் மகன், மகள்களை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையும் குறையும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளியின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டமும் இருப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிட வசதி வேண்டி பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முன் வராதது தங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் வருத்தமுடன் தெரிவிக்கின்றனர். ஆகவே மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு தரம் உயர்த்தப்பட்ட சித்தலக்குண்டு அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கும், மாவட்ட கலெக்டக்கும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






