என் மலர்
விருதுநகர்
- பட்டாசு தயாரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சமீப காலமாக பட்டாசு தொழிற் சாலைகளில் ஆங்காங்கே வெடிவிபத்துகள் ஏற்பட்டு அதிக எண்ணிக்கையில் உயிர்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் குறுகிய காலத்தில் உற்பத்தியை அதிகப்படுத்த பணியை விரைவாக மேற்கொள்வதாலும், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதாலும், பாது காப்பான செய்முறைகள் அறியாத புதிய நபர்களை பணிக்கமர்த்தி பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப் படுவதே காரணம் எனத் தெரிய வருகிறது.
சமீபகால உயிரிழப்பு களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாநில மற்றும் மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. விபத்துகளை ஆராய்ந்தும், இதர பாதுகாப்பு கூறுகளை மாநில, மாவட்ட அளவி லான பாதுகாப்பு குழுக்கள், முன்னெடுத்து அவ்வப் போது பரிந்துரைக்கும் விதிமுறைகளை பட்டாசு உற்பத்தி யாளர்கள், விற்பனை நிலையங்கள், குடோன் உரிமையாளர்கள் தவறாது பின்பற்றி செயல்படுத்த வேண்டும்.
அரசு வகுத்த சட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு தல்களை பின்பற்றாத நிறுவனங்கள் எதுவும் சிறப்புக்குழு அலுவலர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளின் போது அறியப்பட்டால் உற்பத்திக்கு தடை, நிறுவனங்களை மூடுதல் போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே தொழிற்சாலை நிர்வாகங்கள், விற்பனை மையங்கள் பாதுகாப்பு விதிமுறைகளையும், உரிய விதிகளின்படி அனும திக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே உற்பத்தி மேற்கொள்வதை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
- விழா ஏற்பாடுகளை மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சிவந்திப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திரு விழா கடந்த 1-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் புரட்டாசி திரு விழாவில் தினசரி இரவு பத்திரகாளியம்மன் பல் வேறு சிறப்பு அலங்காரங் களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ் வான காலை பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய பத்திரகாளி யம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். மஞ்சள் தீர்த்த வாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.
- ெந்திகுமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் விருதுநகர் கலெக்டர் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் செந்திகுமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில், மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
போதை பழக்கம் நண்பர்கள் மூலமும், சூழ்நி லையின் காரணமாகவும் உருவாகிறது. சரியான விழிப்புணர்வு இருந்தி ருந்தால் போதைக்கு அடிமையாவதை தவிர்க்கலாம். மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தும் மற்ற மாணவர்களிடமிருந்து வரும் பழக்கத்தை நிராகரிக்கும் போது எதிர்வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சாலை விபத்தில் ஓர் ஆண்டில் சுமார் 15,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நமது மாவட்டத்தில் சுமார் 500 பேர் உயிரிழக்கின்றனர். அதுபோக கை, கால் இழப்பு மற்றும் பெருங்காயங்கள் ஏற்பட்டு பாதிப்ப டைவோரும் உள்ளனர். பெரும்பாலும் இந்த விபத்துக்கள் மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவதால் ஏற்படுகிறது.
போதையால் ஒரு நொடியில் ஏற்படக்கூடிய இன்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாழாகிவிடும். படிப்பு, வேலை உள்ளிட்டவைகளால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை கட்டுப்ப டுத்துவதற்கு போதைப் பொருள் தீர்வு அல்ல.
மாணவர்கள் தங்கள் இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி காலங்களில் விளை யாட்டாக ஆரம்பிக்கும் போதை பழக்க வழக்கம் எதிர்கால வாழ்க்கையை அழித்து விடும். அவற்றை தவிர்க்க நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
- விருதுநகரில் விஜய் இலவச சட்ட மையம் தொடங்கப்பட்டது.
- நிர்வாகிகள் ரசிகர்கள் பொதுமக்கள் பலர கலந்து கொண்டனர்.
விருதுநகர்
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். ஏழை, எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறி ஞர்களை கொண்டு இலவச சட்ட மையம் என்ற புதிய திட்டத்தை நடிகர் விஜய் அறிவித்தார். இதையொட்டி பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து விரு துநகரில் இலவச சட்ட மையத்தை விருதுநகர் விஜய் மக்கள் இயக்கம் தொகுதி தலைவர் செல்வம், மாவட்டச் செயலாளர் சின்னப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த சட்ட மையத்தின் மூலம் குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை, விபத் தில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்வது,
கந்து வட்டியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி உதவி செய்ய வேண்டும், கந்து வட்டி கொடுமையை முற்றிலும் ஒழிக்க பாடுபட வேண்டும், பள்ளி, கல்லூரி களில் மாணவ, மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும், ஏழை-எளிய மக்களின் அடிப்படை பிரச் சினைகளை நிரந்த தீர்வு காணுவதற்கும் இம்மை யத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வழக்க றிஞர் அணி தமிழ்செல்வன், ரகு, ஒன்றிய செயலாளர் முத்து விஜய், விருதுநகர் நகர பொருளாளர் திவாகர், மாவட்ட தொண்டரணி துணைத் தலைவர் மூர்த்தி, ஒன்றிய தொண்டரணி சூர்யா, வார்டு தலவைர் ரஞ்சித், ஒன்றியத் தலைவர் மாரித்தங்கம் இளைஞர் அணி நிர்வாகி ஜோட் என்ற அஜித், மகராஜா, சுரேஷ், கார்த்திக், முனியசாமி, முரளி உள்பட பல்வேறு நிர்வாகிகள் ரசிகர்கள் பொதுமக்கள் பலர கலந்து கொண்டனர்.
- கேசா டி மிர் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
ராஜபாளையம்
ஆண்டுதோறும் அக்டோபர் 11-ந்தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பி ரண்டு பிரீத்தி அறிவுறுத்துதலின்படி ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி துவங்கி வைத்தார். காந்தி சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இப்பேரணியில் பெண் குழந் தைகளின் முக்கியத்துவம், கல்வி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பள்ளி தாளாளர் வைமா.திருப்பதி செல்வன் மற்றும் பள்ளி முதுநிலை முதல்வர் டி.அருணா தேவியின் வழி காட்டுதலின்படி நடைபெற்ற இப்பேரணி பள்ளி முதல்வர் அ.திருமலை ராஜன் விழா ஒருங்கிணைப்பாளர் ரா.ரேஷ்மா மற்றும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
- 2-ம் கட்ட அகழாய்வில் திமில் காளை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
- மாணவ மாணவிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழி தோண்டப் பட்டு தங்கத் தாலி, எடைகற்கள், கண்ணாடி மணிகள், ஏற்றுமதிக்கு பயன்படுத்த கூடிய முத்திரைகள், யானை தந்ததால் செய்யப் பட்ட ஆபரணங்கள், சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள், ஏராளமான மண்பானை கள், நாயக்கர் காலத்தில் பயன் படுத்தப்பட்ட செப்பு காசுகள், உட்பட 4,500 க்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சுடு மண்னால் செய்யப்பட்ட திமில் உருவம் கொண்ட காளையின் சிற்பம் சேத மடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட அகழாய்வில் திமிழுடைய காளை சிற்பம் கிடைத்தது. அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த முன் னர்கள் வீர விளை யாட்டுகளில் பயன்படுத்து வதற்காக இதனை சின்ன மாக பயன்படுத்தி இருக்க லாம் என அகழாய்வு துறையினர் தெரிவித்தனர்.
மேலும் அகழாய்வு பணிகள் இன்னும் ஒரு வாரம் மட்டுமே நடைபெற இருப்பதால் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருளை ஆவணப் படுத்தும் பணி விறு விறுப் பாக நடைபெற்று வருகிறது.
வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து அகழாய்வு மற்றும் முதலாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சி நடைபெறும் இடம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் புதிய தார் சாலை போடப்பட்டதால் கூடுதலாக கண்காட்சியும் அகழாய்வியும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நேரில் பார்வையிட்டு வருகின்ற னர்.
- போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ-மாணவிகள் மரத்தடியில் கல்வி பயில்கின்றனர்.
- மாவட்ட கலெக்டக்கும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சித்தலக்குண்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளி கடந்த 2018-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை அதிக அளவில் மாணவ-மாணவிகள் சேர்ந்தனர். தற்போது இந்த பள்ளியில் திருச்சுழி, சித்தலக்குண்டு, பாறைக்குளம், கீழகண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி தரம் உயர்த்தப்பட்ட பின்னர் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக அதிகரித்து வந்தது. ஆனால் அதற்கேற்ப பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை. இதனால் வேறுவழியின்றி மாணவ-மாணவிகள் வளாகத்தில் பள்ளி மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
திருச்சுழி-அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இந்த பள்ளி அமைந்துள்ள தால் வளாகத்தில் அமர்ந்து கல்வி கற்பத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வரும் வாகனங்களின் சத்தம் உள்ளிட்ட இடையூறு காரணமாக கவன சிதறல்களும் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் ஒதுங்கக்கூட இடம் இல்லை. பெரும்பாலான மழை பெய்யும் நாட்களில் பள்ளிக்கு விடுமுறை விடப்படு கிறது.
இதனால் பெற்றோர்கள் மகன், மகள்களை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையும் குறையும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளியின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டமும் இருப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிட வசதி வேண்டி பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முன் வராதது தங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் வருத்தமுடன் தெரிவிக்கின்றனர். ஆகவே மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு தரம் உயர்த்தப்பட்ட சித்தலக்குண்டு அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கும், மாவட்ட கலெக்டக்கும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜெயசீ லன் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.18 லட்சம் மதிப்பில் மந்தை ஊரணி வரத்துக் கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும், சமத்துவ புரத்தில் ரூ.23.40 லட்சம் மதிப்பில் வரத்துக் கால்வா யில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதை யும் கலெக்டர் பார்வை யிட்டார்.
தொடர்ந்து பந்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.25 லட்சம் வகுப்பறை புனரமைக்கப்பட்ட பணி களையும், ஜோகில்பட்டி ஊராட்சியில், முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.59.02 லட்சம் மதிப்பில் திருச்சி - தூத்துக்குடி சாலை முதல் கனக்கனேந்தல் - கரியனேந்தல் சாலை மேம்படுத்தும் பணிகளை யும் ஆய்வு செய்தார்.
வக்கனாங்குண்டு ஊராட்சியில் முதலமைச்ச ரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.157.30 லட்சம் மதிப்பில் கரியனேந்தல்- சித்துமூன்றடைப்பு சாலைப் பணிகள் நடைபெற்று வருதையும், டி.வேப்பங் குளம் ஊராட்சியில் ரூ.1.96 லட்சம் மதிப்பில் சிறிய சுகாதார வளாகம் கட்டப்பட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.45 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளையும் விரை வாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரனார் பிறந்தநாளையொட்டி மாற்று திறனாளிகளுக்கு சீருடைகள் வழங்கும் விழா நடந்தது.
- அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் தியாகி இமானுவேல் சேகரனார் 100-வது பிறந்தநாளையொட்டி, மாவீரன் சுந்தரலிங்கம் அமைப்புசாரா கட்டுமான மற்றும் ஆட்டோ தொழிலாளர் கள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு சீருடை வழங்கும் விழா இருளப்ப சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க செயலாளரும், புதிய தமிழகம் நகர துணை செயலாளருமான விங்கம் தலைமை தாங்கினார். மாற்றுதிறனாளிகள் நல ஆர்வலர் முத்துகிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் ராதாகிருஷ்ணராஜா வரவேற்றார்.
புதியதமிழகம் மாநில பொதுசெயலாளர் வி.கே.ஐயர் சிறப்புரையாற்றினார். தேவேந்திரர் குல வேளாளர் மகாசபை தலைவர் முத்துக்காளை, மாற்றுத்திற னாளிகளுக்கு சீருடைகளை வழங்கினார். செந்தட்டியாபு ரம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. முடிவில் வனராஜ் நன்றி கூறினார்.
- விருதுநகரில் புனித மண் சேகரிக்கப்பட்டது.
- இந்த மண் கலசம் ஆளுநர் ரவியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
விருதுநகர்
டெல்லியில் அமிர்த வனம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்படுகிறது. பா.ஜ.க. சார்பில் என் மண் என் தேசம் என்ற இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் விருதுநகர் காமராஜர் பிறந்த இடம், தியாகி சங்கரலிங்கனார் நினைவு மண்டபம், தியாகிகள் அதிகம் வாழ்ந்த மீசலூர், எரிச்சநத்தம் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவில், பாவாலி கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைப் போரின் போது வந்து சென்றதாக தாமிரபட்டயம் உள்ள இடம் ஆகிய பகுதிகளில் இருந்து கலசத்தில் புனித மண் சேகரிக்கப்பட்டது. இந்த மண் கலசம் ஆளுநர் ரவியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் மண் கலசம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கு பா.ஜ.க.வினர் தேச ஒற்றுமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. பார்வையாளர் வெற்றி வேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகர தலைவர் நாகராஜன், பட்டியலின தலைவர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மனைவி பிரிய காரணமாக இருந்த தம்பியை குத்திக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
- உடன்பிறந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவில் வசித்து வருப வர் கணபதி. இவருக்கு கந்த சாமி என்ற சசிகுமார் (வயது 18), சரவணகுமார் (24), ராஜா (21) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.
இதில் மூத்த மகனான சரவணகுமார் திருமணம் முடித்து தந்தையின் வீட்டு அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இளைய மகன் வேலைக்கு செல்லா மல் ஊர் சுற்றி வந்ததோடு, தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள் ளார்.
இந்நிலையில் நேற்று காலை கந்தசாமி வீட்டின் அறையில் கத்தியால் குத்தப் பட்டு குடல் சரிந்து இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து கந்தசாமியின் தந்தை கணபதி அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில அளித்த புகா ரின் பேரில் போலீசார் கொலையுண்ட கந்தசாமி உடலை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.
குடும்ப பிரச்சினை கார ணமாக உடன்பிறந்த சகோத ரரே இந்த கொலையை செய்தாரா என்ற கோணத் தில் விசாரணை நடத்தப் பட்டது. அதில் சரணக்குமார் தான், சகோதரர் கந்தசா மியை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தனது தம்பி கந்த சாமி அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறு செய்ததாக வும், அதனால் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றதா கவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த தான், நேற்று முன் தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கந்தசாமியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வும் கூறியுள்ளார்.
உடன்பிறந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- டிரைவர்- வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள உளுத்திமடையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது36),டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரியா மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபாகரன் மது, போதை பழக்கத்திற்கு அடிமை யானார். இதனால் பிரியா, குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த பிரபாகரன் மன உளைச்ச லில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண் டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படிக்காசு வைத்தான் பட்டி குலாளர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(47). இவருக்கும். இவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவி, மூத்த மகனுடன் கோவில்பட்டி யில் வசித்து வருகிறார். இதனால் மன விரக்தியில் இருந்த சிவகுமார் மாடி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து(33). இவரது மனைவி லட்சுமிபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்து மது பழக்கத்திற்கு அடிமை யானதால் மனைவி கோபித்துக்கொண்டு கேரளா சென்றுவிட்டார். இதையடுத்து குழந்தைகளை பராமரிக்க மாரிமுத்து சிரமப்பட்டு வந்தார்.
இதனால் மன வேதனையில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






