என் மலர்
விருதுநகர்
- பிளஸ்-2 மாணவி கர்ப்பமானார்.
- வாலிபர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் மாணவியை சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு பரிசோதனை நடத்தியதில் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவியின் பெற்றோர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அங்கும் மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மாணவியின் தாய் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
சிவகாசி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சுடலைமணி என்பவரும், மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுடலைமணி மாணவியிடம் நெருங்கி பழகி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுடலைமணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாரம்பரியமிக்க கந்தூரி விழாவில் 100 கிடாய்கள் வெட்டி கறி விருந்து நடந்தது.
- வீடுகளுக்கு எடுத்து சென்று குடும்பத் துடன் பசியாறியும் மகிழ்ந்த னர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தில் முகம்மது நபி யின் பிறந்த நாளான மீலாது நபி நிகழ்ச்சியின் நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை யொட்டி மாபெரும் பாரம் பரிய கந்தூரி விழாவான கறிவிருந்து படைக்கும் நிகழ்ச்சி வீரசோழன் பெரிய பள்ளி வாசலில் வெகு விம ரிசையாக நடைபெற்றது.
சுமார் 100-க்கும் மேற் பட்ட கிடாய்கள் வெட்டி படைக்கப்பட்டு கிட்டத்தட்ட 100 சிப்பம் அரிசி மூட்டை களை சாதமாக தயாரித்து நடைபெற்ற இந்த மாபெரும் கந்தூரி விழா கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் ஆர்வமுடன் திரளாக கலந்து கொண்டு பசியாறி மகிழ்ந்தனர்.
மேலும் இந்த கறி விருந் திற்காக படைக்கப்பட்ட கிடாய்களின் தலைகள், குடல்கள், ஈரல்கள், தோல் கள் மற்றும் கால்கள் ஆகி யவை பாரம்பரிய கந்தூரி விழா நிகழ்ச்சி முறைப்படி ஏலம் விடப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கந்தூரி விழா கறிவிருந்து நிகழ்ச்சிக் காக அனைத்து சமுதாயத்தி னருக்கும் முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் மீலாது நபி நிறைவு நாளை முன்னிட்டு சுமார் 200 ஆண்டு கால பாரம்பரியமாக சிறந்து விளங்கி வரும் இந்த கந்தூரி விழா கறிவிருந்து நிகழ்ச்சி யானது முஸ்லீம் பெருமக்க ளின் பள்ளிவாசல் சிறப்பு தொழுகைக்கு பின்னர் அதிகாலை 5.30 மணிக்கே தொடங்கியது.
இந்த கந்தூரி விழா கறிவிருந்து நிகழ்ச்சியில் ஜாதி, மத, பேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் என சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கிடாய் கறிவிருந்தில் கலந்து கொண்டு உணவை உண்டு பசியாறினர். மேலும் டோக் கன் முறையில் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப் பட்ட இந்த உணவை பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று குடும்பத் துடன் பசியாறியும் மகிழ்ந்தனர்.
- 158 கல்குவாரிகள் வேலை நிறுத்தம்; 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோரை திரட்டி சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 158 கல், கிராவல் மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்ற னர். இந்த நிலையில் குவாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில் மாவட்ட கனிம வளத்துறை இயக்குநர் தங்கமுனியசாமி தாமதம் செய்வதாக கூறி கடந்த 4-ந் தேதி முதல் 158 கல்குவாரி கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தொடர் வேலை நிறுத் தத்தால் தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மண், கற்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளதால் மாவட்டத்தில் கட்டுமான பணிகளும் பாதி யிலேயே நிறுத்தப் பட்டு உள்ளது. இதுகுறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் நாராயண பெருமாள் கூறுகையில், குவாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவது தொடர்பாக கடந்த 10 நாட்களாக பிரச்சினை உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளோம்.
மாவட்ட நிர்வாகம் தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் லாரி உரிமை யாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகி யோரை திரட்டி சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்றார்.
- சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
- பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை மாண வர்களுக்கு எடுத்துரைத்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது.
சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி வரவேற்றார். கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர் கணேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனிநபர் தரவுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை மாண வர்களுக்கு எடுத்து ரைத்தார்.
முடிவில் சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த்குமார் நன்றி கூறினார்.
- தொலை தொடர்பு சிக்னல் கிடைக்காததால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக ஆற்றின் அக்கரையில் காத்திருந்தனர்.
- தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அனைவரும் பத்திரமாக கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால் மலைப்பகுதிகளில் ஓடும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த தண்ணீர் தாழ்வான பகுதியை நோக்கி பாய்ந்து வந்தது.
இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளம் உருவானது. பாறைகளும், மரங்களும் கரை புரண்டு வந்தன. இதையடுத்து ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்ற பலர் இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அத்தி கோவில் ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற தர்கா ஒன்று உள்ளது. இந்த தர்காவுக்கு மதுரை, வருச நாடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டு செல்வார்கள்.
குறிப்பாக மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியை சேர்ந்த சாஜூக் (வயது 48) என்பவர் தனது பேரனுக்கு மொட்டை எடுப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 70 பேருடன் நேற்று காலையிலேயே வந்தனர். தர்காவில் வழி பாட்டை முடித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பியபோது திடீரென மலைப்பகுதியில் பெய்த கன மழையால் அத்தி கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். அப்பகுதியில் தொலை தொடர்பு சிக்னல் கிடைக்காததால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக ஆற்றின் அக்கரையில் காத்திருந்தனர்.
மழையின் வேகம் குறைந் ததையடுத்து ஆற்றிலும் நீர்வரத்து சற்று குறைந்தது. பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கயிற்றின் மூலம் ஆற்றை கடந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அனைவரும் பத்திரமாக கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர்.
அவர்களிடம் வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தினார். யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்ததும், அனைவரும் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் ராஜபாளை யம் மேற்கில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றிலும் நேற்று மாலை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். ஆனால் இந்த திடீர் காட்டாற்று வெள்ளத்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- ஸ்ரீவில்லி. திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
- இதிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே ஆண்டாள் கோவி லின் உப கோவிலான பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இந்த கோவிலில் கோவிலில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
இதற்காக அதிகாலை நான்கு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அலங்கார ஆராதனைகள் நடை பெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வந்து பெருமாளை தரிசனம் செய்தனர் முன்னதாக கோவில் அடிவாரத்தில் உள்ள கோனேரி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடியும், கால்களை அனைத்தும் அங்குள்ள ஆதி விநாயகர் மற்றும் நாகர் சிலைகளை வழிபட்டு ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்ய சென்றனர்.
அங்கு பக்தர்களுக்கு துளசி கற்கண்டு மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது இதை அடுத்து அலர்மேல் மங்கை தாயார் சன்னதி மற்றும் வேணுகோபால சன்னதி ஆகிய இடங்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழ மையை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட ஊர்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதே போல் பக்தர்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை வசதி களும் செய்து தரப்பட்டு இருந்தன. மேலும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப் படுத்தவும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளிலும், திரு வண்ணாமலை கோவிலி லும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்க மன்னருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும்.
- மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராம னுக்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணி களை ஆய்வு செய்ததோடு பணியாளர்களுடன் கலந்து ரையாடி அவர்களது குறைக ளையும் கேட்ட றிந்தேன். பல்வேறு பகுதி களில் 100 நாட்க ளுக்கு குறைவாகவே வேலை அளிப்பதாகவும் கடந்த ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் 9 வாரங்களாக ஊதிய பட்டு வாடா வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் நோக் கமே கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்பாட்டு அடைய வேண்டும் என்பதற்காக தான்.
இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.83 ஆயிரம் கோடி நிதி தேவைப் படும் நிலையில் தற்போது ரூ.69 ஆயி ரம்கோடி நிதி மட்டுமே ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நிதி ஆண் டில் ரூ. 17 ஆயிரம் கோடி நிலுவை உள்ள நிலையில் திட்ட பயனாளிகளுக்கு முழுமையாக ஊதிய பட்டுவாடா செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இதனால் அவர்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணி யாளர்களுக்கு கடந்த 9 வாரங்களாக நிலுவையில் உள்ள ஊதி யத்தை உடனடி யாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
திட்டத்தின் கீழ் தாமதம் இல்லாமல் ஊதிய பட்டு வாடா செய்ய வேண்டியது சட்டபூர்வ கடமை மட்டுமல் லாது பயனாளிகளின் வாழ் வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய தார்மீக கடமையு மாகும்.
எனவே பயனாளிகளுக்கு ஊதிய பட்டுவாடா செய்வ தற்கான நடவடிக்கையை துரி தப்படுத்த வேண்டு கிறேன். இந்த பிரச்சினையில் தங்கள் உடனடி கவனம் செலுத்துவது இந்த ஏழை குடும்பங்களில் நிதிச் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல் பண் டிகை காலத்தில் அவர்களுக்கு நிவாரணமாக இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்தவர் செல்வலட்சுமி. இவரது 32 வயது மகள் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். செல்வலட்சுமி அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். வருகிற 27-ந் தேதி கோவையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தார். செல்வலட்சுமி அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது மகள் வீட்டில் இல்லை.
எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த் தும் பலனில்லை. இதற்கி டையே சகோதரியின் கணவரிடம் செல்போனில் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என கூறிவிட்டு போனை அணைத்து வைத்து விட்ட தாக கூறப்படுகிறது.
இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்வலட்சுமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மற்றொரு சம்பவம்
நரிக்குடி அருகே உள்ள புரையறைவாசித்தான் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மணி. இவரது மனைவி லாவண்யா(25). குடும்ப பிரச்சினையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் லாவண்யா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை யடுத்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் பிச்சை மணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை தேடி வருகின்றனர்.
- மூதாட்டி-இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்தவர் கற்பகம்(வயது36). இவர் 15 வருடமாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார். மூத்த மகன் திருமணம் செய்து கொண்டு நெல்லையில் வசிக்கிறார். தனிமையில் இருந்த அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் சாணி பவுடரை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது. இதுகுறித்து அவரது மகன் ராஜா ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தேவர் தெருவை சேர்ந்தவர் வீராயி(69). இவர் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது சாணி பவுடரை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அவரது மகன் ஜெயபாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
- வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பஞ்ச பூதலிங்கத் தலம் என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி மகாளய அமாவாசை தினமான இன்று காலை 7 மணிக்கு பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
அதனை தொடர்ந்து சிறுவர்-சிறுமிகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் சதுரகிரி மலையேறி சுந்தர-சந்தன மகாலிங்கத்தை சாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதைகளில் உள்ள சங்கிலி பாறை, வழுக்குப் பாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குறுகலான மலை பகுதியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மதுரை, திருமங்கலம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
- ராஜபாளையம் அருகே செட்டியர்பட்டியில் ரூ.8.70 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.
- 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:-
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எனது முயற்சியால் அசையா மணி விலக்கு மேற்குப்பகுதி யில் புதியதாக போர்வெல் அமைக்கப்பட்டதையும் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் சாஸ்தா கோவில் அணை பகுதிக்கு வந்து கொண்டி ருக்கும் குறைந்த அளவு நீர்வரத்தை முறையாக செட்டியார்பட்டி பேரூ ராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சேறுவராயன் கண்மாய்க்கு கொண்டு செல்லும் பணிகளை முடுக்கி விட்டுள்ளேன்.
நீர் செல்லும் வழிப் பாதையை சீரமைக்கப்பட்டு வருவதை அணையின் உள் பகுதிக்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆலோ சனைகள் வழங்கி உள்ளேன்.ஒரு வாரத்திற்குள் கண்மாய் நிரம்பியவுடன் தற்போது 2 வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் குடிநீரை 3 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
சேத்தூர் மற்றும் செட்டி யார்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்க முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.
செட்டியார்பட்டி பேரூ ராட்சியில் 2006-ம் ஆண்டு நான் துணை சேர்மனாக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி யால் செட்டியார்பட்டி பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 2000 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 3 மடங்காக குடிநீர் இணைப்பு உயர்ந்து 7000 குடிநீர் இணைப்பு உள்ளது. அதனால் தான் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.
இதனையும் சரி செய்யும் விதமாக செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு முறையாக குடிநீர் வழங்க 8.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக சிறப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். இப்பணியை ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டம் செயல் பாட்டிற்கு வரும்போது செட்டியார்பட்டி பேரூராட்சியில் தினந்தோறும் குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- ராஜபாளையத்தில் 2 மணி நேரம் கண் இமைக்காமல் 10 வயது மாணவி சாதனை படைத்தார்.
- விழிகளில் கண்ணீர் வந்தாலும் விழிகளை இமைக்காமல் உலக பார்வை தினத்தில் சாதனையை படைத்தார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம். இவரது மகள் அனிஷ்கா (வயது 10). உலக சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 3 மாதங்களாக அய்யப்பன் என்ற பயிற்சியாளர் உதவி யுடன் கண் இமைக்காமல் ஒரு மணி நேரம் 30 வினாடி சாதனைக்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டார் .அதைத்தொடர்ந்து நேற்று இரவு ராஜபாளையம் பெரிய சாவடியில் ஆசியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அவர்களி டம் அனுமதி பெற்று அவர் கள் அறிவுறுத்தலின்படி 2 மணி நேரம் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் கண்காணிப்பில் விழிகளை இமைக்காமல் இருந்து மாணவி அனிஷ்கா சாதனை படைத்தார்.
ஒரு மணி நேரம் 30 வினாடிகள் சாதனை புரிய வேண்டும் என நினைத்த சிறுமி 2 மணி நேரம் விழிகளை இமைக்காமல் விழிகளில் கண்ணீர் வந்தாலும் விழிகளை இமைக்காமல் உலக பார்வை தினத்தில் சாதனையை படைத்தார்.
சாதனை படைத்த சிறுமி அனிஷ்காவை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், நண்பர்களும் பாராட்டினர். நகர தந்தை என்று போற்றப்படும் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நகர்மன்ற முன்னாள் தலை வருமான ஏ.ஏ.சுப்பராஜாவின் மகன் (ஷியாம்ராஜா) வழி பேத்தி அனிஷ்கா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






