பிளஸ்-2 மாணவி கர்ப்பம்-வாலிபர் மீது போக்சோ வழக்கு

பிளஸ்-2 மாணவி கர்ப்பமானார். வாலிபர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது.
பிளஸ்-2 மாணவி கர்ப்பம்-வாலிபர் மீது போக்சோ வழக்கு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் மாணவியை சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு பரிசோதனை நடத்தியதில் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவியின் பெற்றோர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அங்கும் மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாணவியின் தாய் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

சிவகாசி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சுடலைமணி என்பவரும், மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுடலைமணி மாணவியிடம் நெருங்கி பழகி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுடலைமணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com