என் மலர்
விருதுநகர்
- விருதுநகர் அருகே 2 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, புகையிலை மற்றும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தீவிர ரோந்து சுற்றியும் வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜ பாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்ப தாக சேத்தூர் ஊரக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டர் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் கொண்டு வந்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் கஞ்சா கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி கஞ்சா கடத்தி வந்ததாக அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் கனிய ராஜன் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் கஞ்சா கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் கனியராஜன், குருவேந்திரன் மகன் மனோஜ் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரிடமும் மொத்தம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- விருதுநகர் அருகே பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டது.
- பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம் பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் பில்டர்காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங்மென் பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
இத்தொழிலை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோ சனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவி டர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும், பழங்குடி யினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் கலை மாலை விழா நடந்தது.
- கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் கலை மாலை விழா நடந்தது. இதில் கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் நித்தி யானந்தம் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்த் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீவில்லி புத்தூர் நகர்மன்ற துணை தலைவர் செல்வமணி, அரசு வழக்கறிஞரும், எழுத்தாளருமான கவிஞர் அன்னக்கொடி பங்கேற்ற னர்.
இவ்விழாவில் மனிதநேய மருத்துவ சேவைக்கான விருதுகள் மருத்துவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அறுவை சிகிச்சை மருத்துவர் லட்சுமணனுக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காளிராஜிற்கும் வழங்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்து வரும் பிள்ளையார் நத்தம் கிரா மத்தை சேர்ந்த அய்யக்காள் சிறந்த ஊர்க்காவல்படை காவலர் திலகவதி, சிறந்த சிறு கதை எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர் முனியாண்டி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
- ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கண்மாய், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
விருதுநகர்
வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழைபொழிவு குறைந்ததால் வறட்சி நிலவியது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவில்லி புத்தூர், ராஜ பாளையம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையை நம்பி விவசாயிகள் மா, பலா, வாழை மற்றும் ஊடு பயிர் களை நூற்றுக் கணக்கான ஏக்கரில் பயிரிட்ட னர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யவுடன் விருதுநகரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப் பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் மாலை நேரங்களில் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அய்யனார் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, செண்பகத்தோப்பு மீன் வெட்டிப்பாறை நீர்வீழ்ச்சி, பேயனாறு, கான்சாபுரம் அத்திக்கோவில் ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
நேற்றும், இன்று அதி காலையும் மலைப்பகுதி களில் அதிக மழை பொழிவு இருந்தது. இதன் காரணமாக மேற்கண்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இதனால் அங்குள்ள கண்மாய், குளங் களில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.இதேபோல் வத்திரா யிருப்பு, சதுரகிரி மலை பகுதி யிலும் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீராதாரமாக விளங்கும் பிளவக்கல் அணையில் தண்ணீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 47.56 அடி உயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் 28 அடியாகும்.
திடீரென பெய்து வரும் மழையால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விவசாய பணிகள் தொய்வுடன் நடந்த வந்த நிலையில் மழை காரணமாக விறுவிறுப்படைந்துள்ளது.
- திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
- வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு சியாம் கணேசை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலபாலையத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது21). இவர் வத்திரா யிருப்பு போலீசில் புகார் அளித்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கார்மெண்டில் வேலை பார்த்து வந்தேன். அப் ேபாது தெற்கு தெருவை சேர்ந்த சியாம் கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. தன்னை திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி சியாம்கணேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார்.
தற்போது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினால் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்ப டையில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் செய்வ தாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த சியாம் கணேசை தேடி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே திருச்சுழி ஓடையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சுழி
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தென் மாவட் டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது.
சில இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்தது. இதன் காரணமாக மறவர் பெருங்குடி ஓடை யில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்க முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் நகர், காரியாபட்டி, சிவகாசி, சாத்தூர், வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்து.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருச்சுழி-81, காரியா பட்டி-13.2, ஸ்ரீவில்லி புத்தூர்-3.3, விருதுநகர்-91, சாத்தூர்-15.2, சிவகாசி-28.4, பிளவக்கல் அணை-22.6, வத்திராயிருப்பு-31.2, கோவிலாங்குளம்-58.3, வெம்பக்கோட்டை-14.2, அருப்புக்கோட்டை-40.
மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 398.4 மில்லி மீட்டர் ஆகும்.
- விருதுநகர் அருகே தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- அத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவகாசி, தி ஸ்டாண்டர்டு பயர்ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகமும் இணைந்து அத்திகுளம் கிராமப்புற மக்களுக்கு தொழில் முனைவோருக்கான ஒருநாள் விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
முகாமை அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி மன்றத் தலைவர் செண்பகமூர்த்தி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர்சுதா பெரியத்தாய் வரவேற்றார். யு.பி.ஏ. ஒருங்கிணைப்பாளர் உமாசங்கரி தொடக்க உரையாற்றினார். விருதுநகரின் டி.ஐ.சி.யின் பொது மேலாளர் ராமசுப்ரமணியன், கிராமப்புற தொடக்கத் தொழில்முனைவோருக்கான டி.ஐ.சி. திட்டத்தை பற்றி பேசினார். அதனைத் தொடர்ந்து வழக்குறைஞர் ராஜகோபால், விருதுநகர் மார்க்கெட்டிங்கில் சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மார்க்கெட்டிங் மேம்படுத்தும் வழி பற்றி பேசினார்.
விரிவுரையாளர் பீட்டர் நிர்மல்ராஜ், பி.ராஜசுரேஷ்வரன் தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினர். மதுரை மாவட்ட உதவி இயக்குநர் செந்தில்குமார், காந்திகிராம கிராமப்புற நிறுவனம் ஒருங் கிணைப்பாளர் ரவிச்சந்திரன் பேசினர். இதில் மாணவர்கள் மற்றும் அத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பேராசிரி யைகள் அன்னபாக்கியம், பத்மப்ரியா, கலைவாணி மற்றும் மெர்லின்ராணி ஆகியோர் செய்திருந்தனர்.
- கல்லூரி மாணவி உள்பட 6 பேர் மாயமானார்கள்
- இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தம்பிபட்டி பசும்பொன்நகரை சேர்ந்தவர் முருகேசுவரி. இவரது மகள் காளீஸ்வரி (வயது25). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற காளீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானம் பி.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் கந்த கிருஷ்ணன். இவரது மகள் சுபலட்சுமி(23). இவர் ராஜபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். சம்பவத் தன்று கல்லூரிக்கு செல்வ தாக கூறிவிட்டு சென்ற சுபலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த வர் அழகர்சாமி. இவரது மகள் மீனா(27). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது 7 வயது மகள் ஜனஸ்ரீயுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று முத்தால் நகரில் உள்ள சகோதரி வீட்டுக்கு குழந்தையுடன் சென்ற மீனா திடீரென மாயமானார். பாண்டியன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மீனா மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்த 17 வயதுடைய பெண் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். அருப்புகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர் வெங்கடாசல புரத்தை சேர்ந்தவர் வெள் ளைச்சாமி. இவரது மகள் திவ்யா(20). பட்டதாரியான இவர் சம்பவத்தன்று கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பெண்கள் பெற்ற கடனை இவர் வாங்கி கொண்டு தவணையை தான் செலுத்துவதாக கூறியதாக தெரிகிறது.
- பாண்டிசெல்வி பல பெண்களிடம் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் கம்மா பட்டியை சேர்ந்த வர் பாண்டிசெல்வி(வயது35). இவர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அதே பகுதியை சேர்ந்த பல பெண்கள் பெற்ற கடனை இவர் வாங்கி கொண்டு தவணையை தான் செலுத்துவதாக கூறியதாக தெரிகிறது.
ஆனால் அந்த தொகையை சரியாக செலுத்தாததால் அந்த பெண்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் விருதுநகர் கிழக்கு போலீசிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து நேற்று பாண்டி செல்வியை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இதையறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் 70-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாதிக்கப் பட்ட பார்வதி என்ற பெண் தான் அணிந்திருந்த வளை யலால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படு கிறது. உடனே அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். பாண்டிசெல்வி பல பெண்களிடம் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்லுயிர் காப்பக திட்டத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- தொண்டு நிறுவனங்கள் இதனை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-
தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வள்ளலார் பல்லுயிர் காப்பகம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் விலங்குகளுக்கு உணவு வழங்குவது, மருத்துவச் செலவுகள் மேற்கொள்வது, கூடுதல் பட்டிகள் அமைப்பது, கருத்தடை அறுவை சிகிச்சை பணி மேற் கொள்வது, அறுவை சிகிச்சை கூடங்கள் கட்டுவது, தடுப்பூசி பணி மேற் கொள்வது மற்றும் அவசர சிகிச்சை ஊர்தி வாங்குவது போன்ற சேவைகளுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது.
இத்திட்டத்தில், பயனாளியாக சேர விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் இருந்து விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், 571, அண்ணா சாலை, கால்நடை மருத்துவ மனை வளாகம், நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகள், உள்கட்ட மைப்பு வசதிகள், பராம ரிப்பு செலவின பதிவேடுகள், பராமரிக்கப்படும் விலங்கினங்கள் விபரம் குறித்த ஆவணங்களை இணைத்து முறையான படிவத்தில் விடுபாடின்றி பூர்த்தி செய்து விண்ணப்பபிக்க வேண்டும்.
பின்னர் சென்னையில் இருந்து கண்காணிப்பு அலுவலர் காப்பகத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி அதன் பின் நிதி விடுவிப்பு செய்யப்படும். எனவே விலங்கின காப்பகங்கள் நடத்தி வருபவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதனை கரு த்தில் கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவபெருமானுக்கு 2 டன் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தது.
- பொருளாளர் கண்ணன் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் கி.பி 10-ம் நூற்றாண்டை சேர்ந்த, மிகவும் பழமை வாய்ந்த, திருநாகேஸ்வர முடையார் சமேத திருநா கேஸ்வரி தாயார் கோவில் உள்ளது. இங்கு 23-ஆம் ஆண்டு புரட்டாசி மகாளய அமாவசை திருவிழா விமரி சையாக நடைபெற்றது.
இதில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளான சிவப்பெருமான் மற்றும் அம்பாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சுவாமி-அம்பாளுக்கு வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக் கொழுந்து, முல்லை, மல்லி கை பூ உள்ளிட்ட சுமார் 2 டன் எடையுள்ள 11 வகை யான மலர்களால் அபி ஷேகம் செய்து அலங்கரிக்கப் பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
மேளதாளங்கள் மற்றும் வான வேடிக்கை முழங்க உற்சவர் பூ பல்லாக்கில், முளைப்பாரியுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது வீடுதோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமியை வரவேற்றனர்ல் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட் டங்களில் இருந்து ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.கோயில் திருப்பணிக்குழு தலைவர் பாவா மோகன், துணைத் தலைவர் முத்தையா, செயலாளர் தங்கச்சாமி, பொருளாளர் கண்ணன் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
- நரிக்குடியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- பிரவீன் சுந்தர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் சாலை இலுப்பைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 93-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திலகவதி, உதவி ஆசிரியை செல்வி மேரி தலைமை தாங்கினர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார்.
நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பிரவீன் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள், எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் நம்பிராஜன், பிரவீன் சுந்தர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.






