என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூதன நகை திருட்டு"

    • ராஜபாளையத்தில் வங்கி பெண் அதிகாரியிடம் நூதன முறையில் நகை திருடப்பட்டது.
    • இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சிவசக்தி (வயது 43). இவர் அங்குள்ள அரசு வங்கியில் வணிக தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி கணக்கு தொடங்க துரைசாமிபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் மனைவி ராணி (35) என்பவர் வங்கிக்கு வந்தார். அப்போது தங்கள் பகுதியில் பலருக்கு வங்கி கணக்கு தொடங்க வேண் டும் என்று கூறியுள்ளார்.

    இதனால் சிவசக்திக்கும் ராணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஊர் ஊராக சென்று புதிதாக பலருக்கு வங்கி கணக்கை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று ராணியின் கணவர் சசிகுமார், வடக்கு மலையடி பட்டியைச் சேர்ந்த முரு கேஸ்வரி(32) ஆகியோர் சிவசக்தியை சந்தித்து ரெட்டியபட்டி கிராமத்தில் பலருக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    இதையடுத்து சிவசக்தி தனது காரில் 2 பேரையும் அழைத்துச் சென்றார்.

    ரெட்டியபட்டி அருகே சென்றபோது 2 பேரும் சிவசக்தியிடம் கழுத்தில் நகை அணிந்து இருந்தால் கிராம மக்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்க தயக்கம் காட்டுவார் கள் என கூறியுள்ளனர்.

    இதையடுத்து சிவசக்தி தான் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினை கழற்றி அவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது நகையுடன் சசிகுமார், முருகேஸ்வரி ஆகியோர் மாயமாகி இருந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

    ×