54 பவுன் நகையை பறித்துக்கொண்டு பட்டினி போட்டு இளம்பெண் சித்ரவதை

54 பவுன் நகையை பறித்துக்கொண்டு பட்டினி போட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
54 பவுன் நகையை பறித்துக்கொண்டு பட்டினி போட்டு இளம்பெண் சித்ரவதை
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்க புரத்தை சேர்ந்தர் கிருத்திகா. இவருக்கும் தூத்துக்குடி கீழக்கரந்தை செங்கோட் டையை சேர்ந்த மணி கண்டன் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கிருத்திகா விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனவே திருமணத்தின் போது 54 பவுன் நகை, வைர மோதிரம், திருமண செலவு ரூ.5 லட்சம் ஆகி யவை கணவர் மணிகண்டன் வீட்டாருக்கு வரதட்சணை யாக கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின் சென்னையில் குடும்பம் நடத்தி வந்தோம். அங்கு கணவர் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

எனக்கு கொடுத்த 50 பவுன் நகையில் பாதியை அவரது சகோதரிக்கு கொடுத்து விட்டார். மேலும் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து பட்டினி போட்டு என்னை துன்புறுத்தினார். இதற்கு அவரது தாய் பொன்னுத்தாய், சகோதரி கோகிலா உடந்தையாக இருந்தனர்.

இந்த நிலையில் என்னை, எனது தாய் வீட்டில் விட்டு விட்டு இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என கூறி கணவர் சென்றுவிட்டார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் சம்பந்தப் பட்வர்களின் மீது நடவ டிக்கை எடுக்குமாறு போலீ சாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன், அவரது தாய், சகோதரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com