என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • நரிக்குடி அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நரிக்குடி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள எழுவணி - ரெட்டைகுளம் கிராமத்திற்கு இடையே 3 கி.மீ., தொலைவிற்கு சாலை புதுப்பிக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் விரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை எழுவணி அழகு நாச்சியம்மன் கோவில் அருகே நடைபெ றும் சாலைப்பணிக்காக டிப் பர் லாரியில் கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கற்களை ரோட்டில் விரிப்பதற்காக டிப்பர் லாரியின் டிரைவ ரான அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம் பகுதி யை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் அங்கிருந்த டிரான் ஸ்பார்மரின் மேலே சென்ற உயர் அழுத்த மின் வயரை கவனிக்காமல் டிப்பர் லாரி யின் ஜாக்கியை தூக்கியவா றே லாரியை இயக்கியதாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக டிரான்ஸ் பார் மரின் மேலே சென்று கொண்டிருந்த மின் வயரில் டிப்பர் லாரி உரசியதில் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து முன்பக்க டயர்கள் இரண்டும் பயங்கர சத்தத்து டன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் சரவணக்குமார் பலத்த காயமடைந்தார்.இதனையடுத்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் அங்கு நிறுத்தி வைக் கப்பட்டிருந்த காண்ட்ராக்ட ருக்கு சொந்தமான டூவீல ரும் இந்த சம்பவத்தில் திடீ ரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடந்தது.
    • பெண்கள் பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் துரைச்சாமிபுரம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க வளாகத்தில் இலவச அக்குபஞ்சர் மற்றும் டெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சுமதி ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நாட்டாண்மைகள் குருசுப்ரமணியன், குருபாக்கியம், ராமசுப்பிர மணியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மாடசாமி வரவேற்றார். காளிமுத்து, பசுபதி ராமநாதன் வாழ்த்தி பேசினார்கள். உலக தமிழ்ச் சங்க தலைவர் நிலவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கமிட்டி உறுப்பினர்கள் ஆனந்தராஜ், சுந்தர்ராஜ், லட்சுமணகுமார், கதிர்வேல், சித்தா மருத்துவ உதவியாளர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மதுரை இயற்கை அக்குபஞ்சர் மருத்துவர் ஜெயக்குமார் ஜெயலட்சுமி, லிங்கா, தோல் நோய் மருத்துவர் முத்துலட்சுமி, சர்க்கரை நோய் மூட்டு வலி பெண்கள் பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவர் கனகதுர்க்கா லட்சுமி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    • நரிக்குடி- திருச்சுழி பகுதிகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
    • மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள பட்ட மங்கலம் பகுதியை சேர்ந்த வர் ராஜேந்திரன். இவரது மகன் மாயாண்டி (வயது 30). இவர்கள் தற்போது குடும்பத்துடன் மானா மதுரையில் வசித்து வருகிறார். இவர் மாயாண்டி பார்த்திபனூரில் உள்ள ஹோட்டலில் பணி புரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை வீரசோழன் அருகேயுள்ள பாதனக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற கோவில் திரு விழாவிற்கு மாயாண்டி தனது டூவீலரில் சென்றார். அப்போது மானாச்சாலை அருகேயுள்ள சீனிக்கார னேந்தல் பஸ் நிறுத்தம் அருகேயுள்ள வளைவில் வந்த போது அடையாளம் தெரியாத டிப்பர் லாரி மாயாண்டி மீது மோதியதில் கால் முறிந்து படுகாயமடைந் தார்.

    இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த மாயாண் டியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மாணிக்கனேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராசு என்பவரது மகன் பாண்டி முருகன் (வயது 24). இவர் காரியாபட்டி அருகேயுள்ள எஸ். தோப்பூர் பகுதியிலுள்ள தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் தனது சொந்த ஊரான மாணிக்கனேந்தல் கிராமத்திற்கு திரும்பிய நிலையில் திருச்சுழி- காரியாபட்டி சாலையில் தனது டூவீலரில் வந்து கொண்டி ருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது புலிக்குறிச்சி அருகே மூலக்கரைப்பட்டி சந்திப்பு பகுதியில் வந்த போது அடையாளம் தெரி யாத வாகனம் மோதியதில் பாண்டிமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த பாண்டிமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி பட்டாசு கடையில் நடந்த விபத்தில் 12 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
    • பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையம் மற்றும் கிச்சநாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துகளில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியும், வெடிவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    சிவகாசியில் ரெங்கபாளையம் பட்டாசு கடையில் நேற்று நடந்த விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்

    இந்நிலையில், சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் சுந்தர மூர்த்தி, மேற்பார்வையாளர் கனகராஜ், மேலாளர் ராம்குமார் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையிலும் வெடி விபத்து.
    • வெடி தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து என தகவல்.

    விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விபத்து நடந்த அறைக்குள் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என சோதனை செய்து வருகி்ன்றனர்.

    மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரும் விரைந்துள்ளனர்.

    இதேபோல், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையிலும் இன்று நன்பகல் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வெடி தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத்திறனாளி கள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மூலம் 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளையும் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரத்து 200 மதிப்பி லான உபகர ணங்களை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பை அகற்றி விபத்தை தடுக்க வலியுறுத்த வேண்டும்.
    • தடுப்பு சுவர் தேவையா என்பதை பரிசீலிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகு திக்குள் நுழையும் வழியில் பிரசித்தி பெற்ற மடவார் வளாகம் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையான மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை எல். ஐ.சி. அலுவலக திருப்பத்தில் மிகக் குறுகிய தேசிய நெடுஞ்சாலையாகவும், அதில் சென்டர் மீடியன் தடுப்புச் சுவரும் அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த தடுப்பு சுவர் அமைக்கப்படுவதற்கு முன் னால் பல ஆண்டுகளாக பெரும்பாலும் விபத்துக்கள் நடைபெற்றது இல்லை. ஆனால் இந்த தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதுக்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களில் 10-க்கும் மேற்கட்ட கனரக லாரிகள் தடுப்புச் சுவரில் மோதி திருப்ப முடியாமல் விபத்துக்களில் சிக்கியுள் ளன.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பாக அந்த திருப்பத்தில் தடுப்புச் சுவர் இருப்பது தெரியாமல் வெளி மாநி லத்திலிருந்து வந்திருந்த லாரி மோதி பலத்த சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த தடுப்பு சுவர் தேவையா என்பதை பரிசீலிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகி றது.

    அவ்வாறு தேவை எனில் ஒளிரும் விளக்குகளும், முக் கியமான திருப்பத்தில் தடுப்புச் சுவர் உள்ளது என்ற தெளிவான விளம்பர பலகையும் தேசிய நெடுஞ் சாலை நிர்வாகத்தால் கன ரக ஓட்டுநர்களின் பார்வை யில் படும்படி விளம்பரப்ப டுத்த வேண்டும். காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கடந்த இரண்டு ஆண்டுகளில் பரிசீலித்தால் இதன் விபத் துக்கள் குறித்த விவரம் தெரிய வரும்.

    தேசிய நெடுஞ்சாலையின் பராமரிப்பில் இருந்த இந்த சாலை ஆணையத்தால் தற் போது பராமரிக்கப்படு கிறது. ஆனால் சாலைகளில் குண்டும் குழியும் ஏற்படும் போது உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. கடும் நிர்ப்பந்தத்தால் ஒரு சில நேரங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் சாலை தற்காலிகமாக சரி செய்யப் படுகிறது. இந்த தொடர் விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அக்கறை செலுத்துவது இல்லை என்று குற்றச்சாட் டும் நிலவுகிறது.

    போதிய நிதி இல்லை, சாலை பணியாளர்கள் இல்லை என்ற காரணங்கள் கூறப்படுகிறது. மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலை யில் பெரியகுளம் கண்மாய் தடுப்புச் சுவர் உள்ளது. இந்த கண்மாய் கரை மூல மாக மழை காலங்களில் வடியும் மழை நீர் செல்வ தற்கு தேசிய நெடுஞ்சாலை யில் வடிகால் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை.

    கலெக்டர் பரிசீலனை

    இதனால் செங்கோட்டை பகுதியில் இருந்து மதுரை நோக்கி வரும் சாலையில் இருசக்கர பயணிகள் ஒதுங் குவதற்கு இடம் இல்லாமல் மழைநீர் தேங்கி கடந்த காலங்களில் விலைமதிப் பற்ற உயிர்கள் பறிபோகி யுள்ளது. எனவே விருதுநகர் மாவட்ட கலெக்டர் இப்பகு தியில் அமைக்கப்பட் டுள்ள தடுப்புச் சுவர் தேவைதானா என்பதை பரிசீலிக்கவும், தொடர் விபத்து நடக்காமல் நிரந்தர தீர்வு காணவும் உடனடி நடவடிக்கை எடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் சேவை மைய அமைப்பு சார் பில் அதன் செயல் தலை வர் பாலகிருஷ்ணன் கேட் டுக்கொண்டுள்ளார்.

    • பெற்றோருக்கு தெரியாமல் 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • சந்தேகமடைந்த அவரது தாயார் விசாரித்த போது திருமணமானது தெரியவந்தது.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே படந் தால் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 2பேரும் பெற்றோ ருக்கு தெரியாமல் அங் குள்ள வீரசின்னம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சிறுமி வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் விசாரித்த போது திருமணமானது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் மகளிர் ஊர் நல அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஊர் நல அலுவலர் மாரியம்மாள் விசாரணை நடத்தியதில் 15 வயது பெண்ணுக்கு திரு மணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் கருப்பசாமி மீது குழந்தைகள் திருமணச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நரிக்குடி அருகே இளம்பெண் கற்பழிப்பு சம்பவத்தில் உறவினர் கைதானார்.
    • தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இசலி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பெண் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இவருக்கும் அக்காள் கணவரின் சகோதரர் சோனை(எ) சிவசக்தி(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.

    இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை சிவசக்தி பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவசக்தி யிடம் அந்த பெண் கூறினார்.

    ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிவசக்தி கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசக்தியை கைது செய்தனர்.

    • 54 பவுன் நகையை பறித்துக்கொண்டு பட்டினி போட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    • கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்க புரத்தை சேர்ந்தர் கிருத்திகா. இவருக்கும் தூத்துக்குடி கீழக்கரந்தை செங்கோட் டையை சேர்ந்த மணி கண்டன் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கிருத்திகா விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனவே திருமணத்தின் போது 54 பவுன் நகை, வைர மோதிரம், திருமண செலவு ரூ.5 லட்சம் ஆகி யவை கணவர் மணிகண்டன் வீட்டாருக்கு வரதட்சணை யாக கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின் சென்னையில் குடும்பம் நடத்தி வந்தோம். அங்கு கணவர் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    எனக்கு கொடுத்த 50 பவுன் நகையில் பாதியை அவரது சகோதரிக்கு கொடுத்து விட்டார். மேலும் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து பட்டினி போட்டு என்னை துன்புறுத்தினார். இதற்கு அவரது தாய் பொன்னுத்தாய், சகோதரி கோகிலா உடந்தையாக இருந்தனர்.

    இந்த நிலையில் என்னை, எனது தாய் வீட்டில் விட்டு விட்டு இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என கூறி கணவர் சென்றுவிட்டார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் சம்பந்தப் பட்வர்களின் மீது நடவ டிக்கை எடுக்குமாறு போலீ சாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன், அவரது தாய், சகோதரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • நரிக்குடி அருகே மோசமான அரசு பள்ளி கட்டிடத்தை மாற்றக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள அகத்தாகுளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதம டைந்த நிலையில் மாண வர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது.

    மேலும் மழைக்காலங்க ளில் தண்ணீர் வகுப்பறைக் குள் புகுந்து மழையில் நனைந்தபடி படித்து வந்த னர். இதனால் பிள்ளை க ளின் உயிருக்கு பயந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப நெடுங்காலமாக தயங்கி வந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டி பொதுமக்களும், பெற்றோர் களும் பல முறை கோரிக்கை விடுத்தும் அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படு கிறது. இதனால் ஆவேச மடைந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்த நரிக்குடி- திருச்சுழி நெடுஞ்சாலையான விடத்தக்குளம் பேருந்து நிறுத்தம் முன்பு இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் வாகனங்கள் வரிசையாக அணி வகுத்து நின்ற நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. தகவல றிந்து அங்கு விரைந்து வந்த நரிக்குடி போலீசார் மற்றும் கல்வித் துறை, வருவாய்த்துறை அதி காரிகள் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர்.

    மேலும் அகத்தாகுளம் தொடக்க பள்ளிக்கு புதிய பள்ளிக்கட்டிடம் கட்டுவது தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • ராஜபாளையத்தில் வங்கி பெண் அதிகாரியிடம் நூதன முறையில் நகை திருடப்பட்டது.
    • இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சிவசக்தி (வயது 43). இவர் அங்குள்ள அரசு வங்கியில் வணிக தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி கணக்கு தொடங்க துரைசாமிபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் மனைவி ராணி (35) என்பவர் வங்கிக்கு வந்தார். அப்போது தங்கள் பகுதியில் பலருக்கு வங்கி கணக்கு தொடங்க வேண் டும் என்று கூறியுள்ளார்.

    இதனால் சிவசக்திக்கும் ராணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஊர் ஊராக சென்று புதிதாக பலருக்கு வங்கி கணக்கை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று ராணியின் கணவர் சசிகுமார், வடக்கு மலையடி பட்டியைச் சேர்ந்த முரு கேஸ்வரி(32) ஆகியோர் சிவசக்தியை சந்தித்து ரெட்டியபட்டி கிராமத்தில் பலருக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    இதையடுத்து சிவசக்தி தனது காரில் 2 பேரையும் அழைத்துச் சென்றார்.

    ரெட்டியபட்டி அருகே சென்றபோது 2 பேரும் சிவசக்தியிடம் கழுத்தில் நகை அணிந்து இருந்தால் கிராம மக்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்க தயக்கம் காட்டுவார் கள் என கூறியுள்ளனர்.

    இதையடுத்து சிவசக்தி தான் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினை கழற்றி அவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது நகையுடன் சசிகுமார், முருகேஸ்வரி ஆகியோர் மாயமாகி இருந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

    ×