5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

விருதுநகர்

விருதுநகர் பஜார் பகுதியில் கடந்த ஜூலை 25-ந் தேதி தொழிலதிபர் குமரன் (எ) குமரவேல் அவரது அலுவலகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டவர்களில் 7 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் இவர்களது நடவடிக்கை இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், மேலும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும் குமரவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் (27), விக்னேஷ் (26), நவ்பல் (22), ஞானசேகர் (58), விக்ரமன் (56) ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் ஜெயசீலன் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி விருதுநகர் மேற்கு போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com