search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ACUPUNCTURE"

    • ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பாகவே ஷமீரா பீவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • சம்பவத்தில் மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பூந்துறை நேமம் கரக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஷமீரா பீவி(வயது36). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 19-ந்தேதி அவரது கணவரின் குடும்பத்தினர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதில் அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷமீரா பீவியை அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பாகவே ஷமீரா பீவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில் ஷமீரா பீவிக்கு வீட்டில் பிரசவம் பார்க்க அவரது கணவரான நயாஸ்(47) மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

    அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஷமீரா பீவிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தது ஷிஹாபுதீன் என்ற அக்குபஞ்சர் மருத்துவர் என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

    • விருதுநகர் அருகே அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடந்தது.
    • பெண்கள் பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் துரைச்சாமிபுரம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க வளாகத்தில் இலவச அக்குபஞ்சர் மற்றும் டெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சுமதி ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நாட்டாண்மைகள் குருசுப்ரமணியன், குருபாக்கியம், ராமசுப்பிர மணியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மாடசாமி வரவேற்றார். காளிமுத்து, பசுபதி ராமநாதன் வாழ்த்தி பேசினார்கள். உலக தமிழ்ச் சங்க தலைவர் நிலவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கமிட்டி உறுப்பினர்கள் ஆனந்தராஜ், சுந்தர்ராஜ், லட்சுமணகுமார், கதிர்வேல், சித்தா மருத்துவ உதவியாளர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மதுரை இயற்கை அக்குபஞ்சர் மருத்துவர் ஜெயக்குமார் ஜெயலட்சுமி, லிங்கா, தோல் நோய் மருத்துவர் முத்துலட்சுமி, சர்க்கரை நோய் மூட்டு வலி பெண்கள் பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவர் கனகதுர்க்கா லட்சுமி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    • கிங்-ஐ.சி.ஏ.வின் அக்குபஞ்சர் இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி யது.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையத்தில் கிங்-ஐ.சி.ஏ. சார்பில் அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பு இன்று (24-ந் தேதி) அதன் நிறுவனர் மும்தாஜ் பேகம் தலைமையில் நடந்தது.

    அங்குள்ள ஆனந்த் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் காலை 10.30 மணி பயிற்சி வகுப்பு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி யது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பயிற்சியில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆண்மைக்குறைவு, பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய், சிறுநீரக நோய், தைராய்டு, குழந்தையின்மை, முதுகு வலி, மலசிக்கல், சைனஸ், தூக்கமின்மை, அஜீரன கோளாறுகள் போன்ற கோளாறுகளை குணப்படுத்திக் கொள்ள அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரசர் முறை கற்றுத்தரப்பட்டது.

    இந்த பயிற்சியை டாக்டர்கள் டேனியல் சதீஷ், சிவகாமி, பரிமளக்கண், ஷேக் இப்ராகிம், பானு பிரியா ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடு களை கிங்-ஐ.சி.ஏ. செயலாளர் ராஜா முகமது, இயக்குநர்கள் கோபிநாத், ஜான்ஜேம்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • உலக அக்குபஞ்சர் தின விழா நடைபெற்றது
    • டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் பங்கேற்பு

    திருச்சி:

    திருச்சி கே. கே .நகரில் இயங்கி வரும் கேர் அண்ட் கியூர் அக்குபஞ்சர் மையம் சார்பில் உலக அக்குபஞ்சர் தின விழா நடைபெற்றது.

    திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கேர் அண்ட் கியூர் அக்குபஞ்சர் மைய முதல்வர் மகேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர் கே .எஸ் .சுப்பையா பாண்டியன், இந்திரா கணேசன் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் விவேகானந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் டாக்டர்கள் விஜய் கார்த்திக், குமார் முகமதுஷா, தமிழ்ச்செல்வி, சரவணகுமார், லீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு டி.சி.எம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது. விழாவில் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் அக்குபஞ்சர் மருத்துவர்கள் சார்பாக அக்குபஞ்சர் கவுன்சில் தனியாக அமைக்க வேண்டும், தகுதியான அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×