கிங்-ஐ.சி.ஏ.வின் அக்குபஞ்சர் இலவச பயிற்சி வகுப்பு

கிங்-ஐ.சி.ஏ.வின் அக்குபஞ்சர் இலவச பயிற்சி வகுப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி யது.
கிங்-ஐ.சி.ஏ. சார்பில் மதுரையில் அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பு நடந்தது.  
கிங்-ஐ.சி.ஏ. சார்பில் மதுரையில் அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பு நடந்தது.  
Published on

மதுரை

மதுரை ஆரப்பாளையத்தில் கிங்-ஐ.சி.ஏ. சார்பில் அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பு இன்று (24-ந் தேதி) அதன் நிறுவனர் மும்தாஜ் பேகம் தலைமையில் நடந்தது.

அங்குள்ள ஆனந்த் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் காலை 10.30 மணி பயிற்சி வகுப்பு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி யது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆண்மைக்குறைவு, பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய், சிறுநீரக நோய், தைராய்டு, குழந்தையின்மை, முதுகு வலி, மலசிக்கல், சைனஸ், தூக்கமின்மை, அஜீரன கோளாறுகள் போன்ற கோளாறுகளை குணப்படுத்திக் கொள்ள அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரசர் முறை கற்றுத்தரப்பட்டது.

இந்த பயிற்சியை டாக்டர்கள் டேனியல் சதீஷ், சிவகாமி, பரிமளக்கண், ஷேக் இப்ராகிம், பானு பிரியா ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடு களை கிங்-ஐ.சி.ஏ. செயலாளர் ராஜா முகமது, இயக்குநர்கள் கோபிநாத், ஜான்ஜேம்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com