அக்குபஞ்சர் மருத்துவ முகாம்

விருதுநகர் அருகே அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடந்தது. பெண்கள் பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.
அக்குபஞ்சர் மருத்துவ முகாம்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் துரைச்சாமிபுரம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க வளாகத்தில் இலவச அக்குபஞ்சர் மற்றும் டெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சுமதி ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நாட்டாண்மைகள் குருசுப்ரமணியன், குருபாக்கியம், ராமசுப்பிர மணியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மாடசாமி வரவேற்றார். காளிமுத்து, பசுபதி ராமநாதன் வாழ்த்தி பேசினார்கள். உலக தமிழ்ச் சங்க தலைவர் நிலவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கமிட்டி உறுப்பினர்கள் ஆனந்தராஜ், சுந்தர்ராஜ், லட்சுமணகுமார், கதிர்வேல், சித்தா மருத்துவ உதவியாளர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மதுரை இயற்கை அக்குபஞ்சர் மருத்துவர் ஜெயக்குமார் ஜெயலட்சுமி, லிங்கா, தோல் நோய் மருத்துவர் முத்துலட்சுமி, சர்க்கரை நோய் மூட்டு வலி பெண்கள் பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவர் கனகதுர்க்கா லட்சுமி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com