பெற்றோருக்கு தெரியாமல் 15 வயது சிறுமிக்கு திருமணம்

பெற்றோருக்கு தெரியாமல் 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சந்தேகமடைந்த அவரது தாயார் விசாரித்த போது திருமணமானது தெரியவந்தது.
பெற்றோருக்கு தெரியாமல் 15 வயது சிறுமிக்கு திருமணம்
Published on

விருதுநகர்

சாத்தூர் அருகே படந் தால் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 2பேரும் பெற்றோ ருக்கு தெரியாமல் அங் குள்ள வீரசின்னம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சிறுமி வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் விசாரித்த போது திருமணமானது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் மகளிர் ஊர் நல அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஊர் நல அலுவலர் மாரியம்மாள் விசாரணை நடத்தியதில் 15 வயது பெண்ணுக்கு திரு மணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் கருப்பசாமி மீது குழந்தைகள் திருமணச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com