இளம்பெண் கற்பழிப்பு

நரிக்குடி அருகே இளம்பெண் கற்பழிப்பு சம்பவத்தில் உறவினர் கைதானார்.தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறினார்.
இளம்பெண் கற்பழிப்பு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இசலி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பெண் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இவருக்கும் அக்காள் கணவரின் சகோதரர் சோனை(எ) சிவசக்தி(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை சிவசக்தி பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவசக்தி யிடம் அந்த பெண் கூறினார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிவசக்தி கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசக்தியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com