திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்
Published on

விருதுநகர்

விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்தவர் செல்வலட்சுமி. இவரது 32 வயது மகள் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். செல்வலட்சுமி அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். வருகிற 27-ந் தேதி கோவையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தார். செல்வலட்சுமி அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது மகள் வீட்டில் இல்லை.

எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த் தும் பலனில்லை. இதற்கி டையே சகோதரியின் கணவரிடம் செல்போனில் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என கூறிவிட்டு போனை அணைத்து வைத்து விட்ட தாக கூறப்படுகிறது.

இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்வலட்சுமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மற்றொரு சம்பவம்

நரிக்குடி அருகே உள்ள புரையறைவாசித்தான் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மணி. இவரது மனைவி லாவண்யா(25). குடும்ப பிரச்சினையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் லாவண்யா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை யடுத்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் பிச்சை மணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com