மாற்று திறனாளிகளுக்கு சீருடைகள் வழங்கும் விழா

ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரனார் பிறந்தநாளையொட்டி மாற்று திறனாளிகளுக்கு சீருடைகள் வழங்கும் விழா நடந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
மாற்று திறனாளிகளுக்கு சீருடைகள் வழங்கும் விழா
Published on

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் தியாகி இமானுவேல் சேகரனார் 100-வது பிறந்தநாளையொட்டி, மாவீரன் சுந்தரலிங்கம் அமைப்புசாரா கட்டுமான மற்றும் ஆட்டோ தொழிலாளர் கள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு சீருடை வழங்கும் விழா இருளப்ப சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க செயலாளரும், புதிய தமிழகம் நகர துணை செயலாளருமான விங்கம் தலைமை தாங்கினார். மாற்றுதிறனாளிகள் நல ஆர்வலர் முத்துகிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் ராதாகிருஷ்ணராஜா வரவேற்றார்.

புதியதமிழகம் மாநில பொதுசெயலாளர் வி.கே.ஐயர் சிறப்புரையாற்றினார். தேவேந்திரர் குல வேளாளர் மகாசபை தலைவர் முத்துக்காளை, மாற்றுத்திற னாளிகளுக்கு சீருடைகளை வழங்கினார். செந்தட்டியாபு ரம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. முடிவில் வனராஜ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com