மனைவி பிரிய காரணமாக இருந்த தம்பியை குத்திக்கொன்ற அண்ணன்

மனைவி பிரிய காரணமாக இருந்த தம்பியை குத்திக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். உடன்பிறந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கொலையுண்ட கந்தசாமி, கைதான சரவணக்குமார்
கொலையுண்ட கந்தசாமி, கைதான சரவணக்குமார்
Published on

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவில் வசித்து வருப வர் கணபதி. இவருக்கு கந்த சாமி என்ற சசிகுமார் (வயது 18), சரவணகுமார் (24), ராஜா (21) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

இதில் மூத்த மகனான சரவணகுமார் திருமணம் முடித்து தந்தையின் வீட்டு அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இளைய மகன் வேலைக்கு செல்லா மல் ஊர் சுற்றி வந்ததோடு, தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள் ளார்.

இந்நிலையில் நேற்று காலை கந்தசாமி வீட்டின் அறையில் கத்தியால் குத்தப் பட்டு குடல் சரிந்து இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து கந்தசாமியின் தந்தை கணபதி அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில அளித்த புகா ரின் பேரில் போலீசார் கொலையுண்ட கந்தசாமி உடலை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.

குடும்ப பிரச்சினை கார ணமாக உடன்பிறந்த சகோத ரரே இந்த கொலையை செய்தாரா என்ற கோணத் தில் விசாரணை நடத்தப் பட்டது. அதில் சரணக்குமார் தான், சகோதரர் கந்தசா மியை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தனது தம்பி கந்த சாமி அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறு செய்ததாக வும், அதனால் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றதா கவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த தான், நேற்று முன் தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கந்தசாமியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வும் கூறியுள்ளார்.

உடன்பிறந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com