என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நடைபெறும் பணிகளை நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.
    • குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, திருப்பாற்கடலில் நடைபாதை அமைக்கும் பணி, உரக்கிடங்கில் மக்கும் குப்பைகள் உரமாக்கும் பணி, சக்கரை குளம் தெருவில் புதிதாக மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.

    அப்போது நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி, நிர்வாகப்பொறியாளர் சேர்மக்கனி, ஆணையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் தங்கபாண்டியன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்பு நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பணிகள் சம்பந்தமான ஆய்வுகளை ஆைணயர் மேற்கொண்டார். இதில் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாத்தூரில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் திருடினார்.
    • இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள வெங்கடாஜலபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (வயது 49). இவர் சம்பவத்தன்று அருகிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார்.

    அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணத்தை எடுத்துத் தருமாறு கூறியுள்ளார். இதற்காக பாலசுப்ரமணியம் தனது ரகசிய எண்ணையும் அந்த வாலிபரிடம் தெரிவித்துள்ளார்.அந்த வாலிபர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பது போல் பாசாங்கு செய்து உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி பாலசுப்பிரமணியத்திடம் வேறோரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

    சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியம் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் எடுத்திருப்பதாக குறுந் தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னிடம் இந்த ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது அவருடைய ஏ.டி.எம். கார்டு இல்லை என தெரியவந்தது.

    இதுகுறித்து பாலசுப்ர மணியம் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை வரை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே 2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயமானார்கள்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகாலட்சுமி (24). இவர் அதிக இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகி றது‌. இதனை கணவர் கண்டித்துள்ளார்‌.

    இந்த நிலையில் மகாலட்சுமி சம்பவத்தன்று தனது 3 வயது மகனுடன் மாயமானார். இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் கே.கே. நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி அதே பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று கருப்பசாமியின் மனைவி தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பி பட்டியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரன் (வயது 38) இவரது மனைவி சாரதா. கடந்த சில மாதங்களாக தங்கேஸ்வரன் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனால் கணவன், மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டது.

    குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு மனைவி கண்டித்துள்ளார். இதில் விரக்தியடைந்த தங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி பாரதிநகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி, பட்டாசு தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதில் விரக்தி அடைந்த பால்பாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது மனைவி கருப்பம்மாள் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. நகர, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர செயலாளர் துரைமுருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம். குருசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் யோக சேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் குருசாமி, கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் பெருமாள் கோவில் ஆனி தேரோட்டம் நடைபெற்றது.
    • ஆனி பிரமோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் 108 திவ்ய தலங்களில் பிரசித்தி பெற்ற நின்ற நாரயண பெருமாள் கோவில் உள்ளது.

    இங்கு ஆனி பிரமோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி பெருமாள்- செங்கமல தாயார் கோவில் மாட வீதிகளில் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    ஆனி திருவிழாவில் முக்கிய விழாவான திருத்தேரோட்டம் விமரிசையாக நடந்தது. மேளதாளத்துடன் வேத மந்திரங்கள் முழங்க கோவிந்தா, கோவிந்தா, கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்தது.

    தேரோட்டத்தில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, காளி ராஜன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் காமராஜர் சிலைக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    விருதுநகர்

    பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது.

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.

    சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சிவகாசி சிவன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி னார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ்.

    விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, விருதுநகர் நகர செயலாளர் நயினார் முகம்மது, சிவகாசி முன்னாள் நகர செயலாளர் அசன்பதுருதீன், சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • படிப்பை போல விளையாட்டும் வாழ்க்கைக்கு முக்கியமானது என கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
    • மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர் மற்றும் மாணவிகளை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

    இதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 152 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே சதுரங்க போட்டி நடந்தது. அதனை கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதா வது:-விருதுநகர் மாவட்டத்தில், சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவி லான சதுரங்க போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

    இப்போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர் மற்றும் மாணவிகளை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும், அனைத்து பெற்றோர்களும் ஊக்கப்ப டுத்தக்கூடிய ஒரே விளையாட்டு சதுரங்க விளையாட்டு. ஏனென்றால் இந்த விளையாட்டு விளை யாடுவதால் மூளை திறன் அதிகரிக்கும், மூளை நல்ல வளர்ச்சி அடையும், மாணவர்கள் கணித பாடத்தில் நன்றாக சாதிக்க முடியும், மற்ற பாடத்தில் நல்ல கவனம் செலுத்த முடியும். இந்தியாவில் நிறைய பேர் இந்த விளையாட்டில் சாதித்து உள்ளனர். மாணவர்கள் படிப்பிற்கு இணையாக இது போன்ற விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இது போன்ற விளையாட்டு மூலம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நல்ல வாழ்க்கைக்கு தேவை யான விஷயங்களை கற்றுக்கொண்டு மாணவர்கள் எளிதில் சாதிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார், உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயக்குமார் உள்பட மாணவ, மாணவி கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படுவதாக விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இதற்கான விண்ணப்பத்தினை WWW.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருக்க கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருக்க கூடாது. தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை தொடங்கி இருக்க வேண்டும்.

    பொது பதிவுதாரர்களுக்கு கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தோல்வியுற்றோர் ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ரூ.300, பிளஸ்-2 மற்றும் பட்டயப்படிப்பு ரூ.400, பட்டப்படிப்பு ரூ.600 என்ற அளவில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும்.

    இதற்கான விண்ணப்பத்தினை பொது பதிவு தாரர்கள் நேரிலோ, இந்த அலுவலகத்தில் பெற்றோ அல்லது WWW.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

    அனைத்துப் பிரிவு மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.

    மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையம் நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • ஓவியம் மற்றும் வினாடி-வினா மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சியின் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் மூலம், ராஜபாளையம் வட்டார அனைத்துவகைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் வினாடி-வினா மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    விழாவில் மேல்நிலை ப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார். உதவித் தலைமையாசிரியர் மாரியப்பன் நகரின் தூய்மைக்கான உறுதி மொழியைக் கூற அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    விழாவில், தலைமை வகித்த நகர்மன்றத்தலைவி பவித்ரா ஷியாம்ராஜா சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, என்ன தான் சட்ட திட்டங்கள் போட்டாலும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே எந்தவொரு திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றார்.

    விழாவில் நகராட்சி ஆணையாளர் பார்த்சாரதி பேசும்போது, பூமித்தோஷம், கங்கா தோஷம், விருட்ச தோஷம் என்பவற்றை விளக்கி அவற்றில் இருந்து விடுபட மக்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்கினார்.

    விழாவில் ராஜபாளையம் நகர்மன்றத் துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேல், நகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.எஸ்.ஷியாம்ராஜா, இயக்குநர் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் பேசினார்கள்.

    விழாவில் 225-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எ.கா.த.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் பொன் மாரிமுத்து நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • இன்று காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அவரது சிலைக்கு கலெக்டர்மா, அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விருதுநகர்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், கல்வி கண் திறந்த கர்மவீரருமான பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த விருதுநகரில் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விருதுநகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற அவர் அங்குள்ள சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

    பிறந்தநாளையொட்டி நினைவு இல்லத்தில் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் நூற்புவேள்வி நடந்தது.

    விருதுநகரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகிே்யார் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நினைவு இல்லத்தில் நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் காமராஜர் சிலை முன்பு நோட்டு, புத்தகங்கள் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    விருதுநகரில் 4000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் காமராஜர் வேடமணிந்து பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    விருதுநகர் நகராட்சியில் நகரசபை தலைவர் மாதவன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • விருதுநகரில் சரக்கு வேனில் 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்தப்பட்டது.
    • காந்திநகரை சேர்ந்த செல்வன்(45) என்பவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    விருதுநகர் வடமலை குறிச்சி ரோட்டில் இன்று காலை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து சோதனை செய்த போது அதில் 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த விருதுநகர் காந்திநகரை சேர்ந்த செல்வன்(45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பொதுமக்களிடம் ரேசன் அரிசியை வாங்கி ஆலைகளுக்கு விற்பது தெரியவந்தது.

    ×