search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
    X

    விழாவில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி பேசியபோது எடுத்த படம். அருகில் நகர்மன்ற தலைவி பவித்ரா உள்பட பலர் உள்ளனர்.

    மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

    • ராஜபாளையம் நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • ஓவியம் மற்றும் வினாடி-வினா மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சியின் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் மூலம், ராஜபாளையம் வட்டார அனைத்துவகைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் வினாடி-வினா மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    விழாவில் மேல்நிலை ப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார். உதவித் தலைமையாசிரியர் மாரியப்பன் நகரின் தூய்மைக்கான உறுதி மொழியைக் கூற அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    விழாவில், தலைமை வகித்த நகர்மன்றத்தலைவி பவித்ரா ஷியாம்ராஜா சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, என்ன தான் சட்ட திட்டங்கள் போட்டாலும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே எந்தவொரு திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றார்.

    விழாவில் நகராட்சி ஆணையாளர் பார்த்சாரதி பேசும்போது, பூமித்தோஷம், கங்கா தோஷம், விருட்ச தோஷம் என்பவற்றை விளக்கி அவற்றில் இருந்து விடுபட மக்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்கினார்.

    விழாவில் ராஜபாளையம் நகர்மன்றத் துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேல், நகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.எஸ்.ஷியாம்ராஜா, இயக்குநர் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் பேசினார்கள்.

    விழாவில் 225-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எ.கா.த.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் பொன் மாரிமுத்து நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×