search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில்  காமராஜர் சிலைக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை
    X

    பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள காமராஜர் சிலைக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் மற்றும் பலர் உள்ளனர்

    சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் காமராஜர் சிலைக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை

    • சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் காமராஜர் சிலைக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    விருதுநகர்

    பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது.

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.

    சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சிவகாசி சிவன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி னார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ்.

    விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, விருதுநகர் நகர செயலாளர் நயினார் முகம்மது, சிவகாசி முன்னாள் நகர செயலாளர் அசன்பதுருதீன், சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×