என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
- பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சம்மந்தபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30),பால் வியாபாரி. இவரது மனைவி சந்தானேஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் மகன், ஒரு வயதில் மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று லட்சுமணன் வழக்கம்போல் வியாபாரத்திற்கு ெசன்று விட்டார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது சந்தானேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளை காண வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் மனைவி, குழந்தைகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து லட்சுமணன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எனது மனைவி மற்றும் குழந்தைகளை பக்கத்து வீட்டை சேர்ந்த காளிராஜ் என்பவர் கடத்தி சென்றி ருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பி உள்ளார்.
அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சிவகாசி அருகே பிளாஸ்டிக் கவர் விழுங்கிய 7 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
- இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி துரைசாமிபுரம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (வயது 26).இவருக்கு கலைக்கதிர் என்ற 7 மாத ஆண் குழந்தை இருந்தது.
சம்பவத்தன்று வீட்டில் விளையாடிகொண்டிருந்த கலைக்கதிர் கீழே கிடந்த பிளாஸ்டிக் கவர் துண்டு பேப்பரை எடுத்து விழுங்கி உள்ளான்.
சிறிது நேரத்தில் குழந்தை மயங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நிலைமை மோசமானதால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கும் சிகிச்சை பலனளிக்க வில்லை. இறுதியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கலைக்கதிர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கணவன்-மனைவி கொலையில் கள்ளக்காதலிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- ரூ.500 கோடி நகை, பணத்துடன் கேரளாவுக்கு தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). இவரது மனைவி குருபாக்கியம்(68). ராஜகோபால் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராஜகோபால் பணம் வட்டிக்கு கொடுத்து வந்தார். இந்த நிலையில் ராஜகோபாலும், அவரது மனைவியும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. அவர்களது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
வீட்டின் படுக்கை அறையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். இந்த கொலைகள் குறித்து தகவல் கிடைத்ததும் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ராஜபாளையம் (பொறுப்பு) டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த இரட்டை கொலையில் துப்புதுலக்க டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் பயிற்சி டி.எஸ்.பி.க்கள் சுதீர், வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா (ராஜபாளையம் வடக்கு), கவுதம்(சிவகாசி கிழக்கு), நம்பிராஜன் (வெம்பகோட்டை), ராமராஜ் (விருதுநகர் சூலக்கரை) ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொலை செய்யப்பட்ட ராஜகோபால் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் நூற்பாலைகள், மருத்துவ மனைகள், வணிக நிறுவ னங்கள், சத்திரப்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடங்கள், மருத்துவ துணி உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய வற்றிக்கு பல கோடி ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ராஜபாளையம் முனியம்மன்கோவில் தெருவில் வசித்து வரும் ஒரு இளம்பெண்ணுடன் ராஜகோபாலுக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண் இரவு நேரங்களிலும் ராஜகோபாலின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது ராஜகோபால் வீட்டில் உள்ள ரகசிய அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் வைத்திருப்பதை அந்த இளம்பெண் தெரிந்து கொண்டார். அவர் ராஜகோபால் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை அபகரிக்க திட்டமிட்டிருக்கிறார்.
அவர் கூலிப்படையை வைத்து ராஜகோபாலையும், அவரது மனைவியையும் ெகால்ல திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று ராஜகோபால் மற்றும் அவரது மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.
பின்னர் ராஜகோபால் வீட்டு ரகசிய அறையை திறந்து அங்கிருந்த சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள், கொடுக்கல்-வாங்கல் தொடர்பான ஆவணங்களை திருடி சென்றுள்ளார். மேற்கண்டவை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூலிப்படையை ஏவி கணவன்-மனைவியை கொலை செய்த அந்த இளம்பெண் யார்? என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் கேரளாவுக்கு தப்பி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
- சிவகாசி கல்லூரி மாணவருக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.
- “அறம் விருதுகள் 2022” என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
சிவகாசி
"அறம் செய்ய விரும்பு" அறக்கட்டளை ஆக்ஸ்பா யுனிவர்சிட்டி மற்றும் நீதியின் குரல் இணைந்து "அறம் விருதுகள் 2022" என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிவகாசி பி.எஸ்.ஆர். ெபாறியியல் கல்லூரி 3-ம் ஆண்டு எந்திரவியல் துறை மாணவர் மாரிமுத்து, சிறந்த சமூக சேவகருக்கான விருதை பெற்றார்.
விருது பெற்ற மாணவருக்கு கல்லூரி தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, எந்திரவியல் துறைத்தலைவர் கனகசபாபதி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் துர்க்கை ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- லயன்ஸ் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
- காமராஜர் குறித்த விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தாளாளர் வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வர் முருகன், நிர்வாக உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரங்கராஜா, குணசேகரன், லயன்ஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த், ரஞ்சித் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் காமராஜர் குறித்த விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் எலிசபெத், ரோஸ்லின்மேரி, ராமகிருஷ்ணன், மாரீஸ்வ ரன், காளிமுத்து, மயில்ராணி, மாரீஸ்வரி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
- ஊர்வலம் காந்திசிலை ரவுண்டானா, பழைய பேருந்துநிலையம், ரெயில்வேபீடர்ரோடு வழியாக பள்ளியை சென்றடைந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ெரயில்வேபீடர் ரோட்டில் உள்ள ராஜபாளையம் கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன் விழாவிற்கு தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி தலைமை உரையாற்றினார்.நாடார் தொடக்க பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளின் செயலர் விஜயராஜன் பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். உறவின்முறை செயலாளர் வெற்றி செல்வன், நாடார் நர்சரி மற்றும் மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயலர் ஆத்தியப்பன், பொருளாளர் பெரியசாமி, தர்மகர்த்தா மதிபாலன், உதவி தலைவர் வடமலையான், உதவி செயலாளர் நாகரத்தினம், இணை தலைவர் மதிபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாள ர்களாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா, நாடார் மகாஜனசங்க விருதுநகர் மாவட்ட துணைதலைவர் ஆதிநாராயணகுமார் கலந்து கொண்டு பேசினார்கள்.
பிளஸ்-2 மாணவி நிவேதாதேவி தன்னலமற்ற பெருந்தலைவர் காமராஜரின் வரலாற்று சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். உறவின் முறை நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இலக்கிய மன்றம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழா முடிவில் உதவி தலைமையாசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
முன்னதாக பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்கள், தேசிய மாணவர்படை,நாட்டு நலபணிதிட்டம்,பாரத சாரண-சாரணியக்கம், இளஞ்செ ஞ்சிலுவை சங்க உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தின் போது பழைய பேருந்துநிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு உறவின்முறை நிர்வாகஸ்தர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் காந்திசிலை ரவுண்டானா, பழைய பேருந்துநிலையம், ெரயில்வேபீடர்ரோடு வழியாக பள்ளியை சென்றடைந்தது.
- கலசலிங்கம் பல்கலைக்கழகம் 35-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
- என்.ஐ.ஆர்.எப். தர வரிசைகளை வழங்கி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் கற்பித்தல், கற்றல் வளம், ஆராய்ச்சி ெதாழில்முறை பயிற்சி, பொதுமக்களின் கருத்து ஆகியவற்றை கொண்டு என்.ஐ.ஆர்.எப். தர வரிசைகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையில் தேசிய அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 35-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
இதேபோல் இந்தியாவின் பொறியியல் பிரிவில் 35-வது இடத்தையும், அனைத்து பிரிவுகளில் 50-வது இடத்தையும் பிடித்துள்ளது. பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களை பாராட்டினர்.
- நாட்டு வெடிகுண்டு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
- 4 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் மலையரசி. நேற்று இரவு இவருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல்படப்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடம் வந்து பார்த்தபோது வைக்கோல்படப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் புறக்காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இதில் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 19), காளிராஜ் (21), லிங்கராஜா (21), மதன்ராஜ் (24) ஆகிய 4 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வைக்கோல் படப்பில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. 4 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.
- சாலையை சீரமைக்க பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சிவகாசி
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள பிள்ளைக்குழி (மயானம்) பகுதியில் உள்ள மண்சாலை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது.இந்தசாலை 3 கிலோமீட்டர் தூரம் சென்று மெயின் ரோட்டை அடையும். இந்தப்பகுதி முழுவதும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி ஆகும்.
எனவே இந்த சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் உரிய முறையில் பராமரிக்காததால் இந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள்அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின்விளக்குகள் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளில் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.
- நள்ளிரவு நேரத்தில் இந்த கொலை நடந்துள்ளதால் அருகில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை.
- கொள்ளையர்கள் கொலையில் துப்புதுலங்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடிகளை தூவி உள்ளனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 75). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி குருபாக்கியம்(68). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் கோவை மற்றும் சென்னையில் உள்ளனர்.
இந்த நிலையில் ராஜகோபால் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் லட்சக்கணக்கில் பலருக்கு கடன் கொடுத்து வட்டி வாங்கி வந்துள்ளார். இது தொடர்பாக சிலரிடம் அவருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
ராஜகோபாலும் அவரது மனைவியும் நேற்று வீட்டிலிருந்து வெளியில் வரவில்லை. அவர்களின் வீட்டு கதவு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் ராஜகோபாலும், குருபாக்கியமும் பிணமாக கிடந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கணவன்-மனைவி இருவரது கழுத்திலும் காயம் உள்ளது. எனவே அவர்களை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். நள்ளிரவு நேரத்தில் இந்த கொலை நடந்துள்ளதால் அருகில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை. மேலும் கொள்ளையர்கள் கொலையில் துப்புதுலங்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடிகளை தூவி உள்ளனர்.
இந்த கொலை பற்றி தகவல் கிடைத்ததும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சபரிநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கண்ணகாணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொலையாளிகள் உருவம் பதிவாகி இருந்தால் அதன் மூலம் குற்றவாளிகளை பிடித்து விடலாம் என்று போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
பணப் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கணவன்-மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது ராஜகோபால் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அவரிடம் நகை-பணம் அதிகமாக இருக்கும் அதை கொள்ளையடிக்கலாம் என்ற நோக்கத்தால் இந்த கொலைகள் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நேற்று நள்ளிரவு பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டும் பணி நடந்தது.
- சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடைக்காக குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.
அதன்படி சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நேற்று நள்ளிரவு பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டும் பணி நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
சக்திவேல் (வயது 40), கிருஷ்ணமூர்த்தி (50) ஆகிய 2 பேர் குழியில் இறங்கி மண் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பக்கவாட்டு மண் சரிந்து விழுந்தது. இதில் குழியில் இருந்த 2 தொழிலாளர்களும் மண்ணில் புதையுண்டனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனே சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மண்ணில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர். ஜே.சி.பி. எந்திரமும் வரவழைக்கப்பட்டு குழியில் சரிந்த மண்ணை அள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுநகரில் முன்னறிவிப்பில்லாத மின்தடை ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் மின் பாதை பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. ஆனால் அன்றைய நாளில் பல நேரங்களில் மாலை 5 மணிக்கு தான் மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக முறையான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மின்தடை அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடியால் திடீர் திடீரென மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், குடும்ப பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
விருதுநகர் நகர் பகுதியில் இன்று குறிப்பிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் விருதுநகர் நகர் முழுவதும் இன்று மின்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். சிறு தொழில் செய்வோர், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.
எனவே இனிமேலாவது மின்வாரிய அதிகாரிகள் மின்தடை குறித்த பகுதிகள் தொடர்பான முறையான அறிவிப்பு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






