என் மலர்
விருதுநகர்
- குரூப்-4 தேர்வு அறையில் கண்காணிப்பாளர்களும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கலெக்டர் வலியுறுத்துகிறார்.
- விருதுநகர் மாவட்டத்தில் 81 ஆயிரத்து 44 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான, முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெ ட்டி தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 24-ந் தேதி குரூப்-4 தேர்வு, அதாவது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 237 தேர்வு மையங்களில் 81 ஆயிரத்து 44 விண்ணப்பதாரர்கள்தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 309 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 52 மொபைல் பார்ட்டியும் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 13 பறக்கும் படை அலுவலர்களும், 237 தேர்வு மையங்களுக்கும் 317 வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 81 ஆயிரத்து 44 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் பெரிதாகவும், தெளிவாகவும் வைக்கப்பட வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் அறைக்கு வந்த பின்னர் விடைத்தாள்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அந்த விடைத்தாள் சேதமடைந்தாலோ அல்லது எழுத்து பிழை இருந்தாலோ மட்டுமே வேறு விடைத்தாள் கொடுக்கப்பட வேண்டும்.
நுழைவுச் சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்களை அனுமதிக்கப்பட கூடாது. தேர்வர்கள் தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்கள் (கால்குலேட்டர், மொபைல் போன்) ஆகியவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர அனுமதிக்கக்கூடாது.
தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் அலைபேசியை தேர்வறைக்குள் பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான செஸ் போட்டிகள் 2நாட்கள் நடக்கிறது.
- மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சதுரங்க ஒலிம்பியாட் என்பது மனிதகுலத்தின் புத்தி கூர்மை வாய்ந்த சிறந்த படைப்புத் திறனை உடைய சிந்தனைகளின் சங்கமிக்கும் போட்டியாகும். மேலும் சதுரங்க வீரர்களும், சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வமுடையவர்களும் முக்கியமாக எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முதல் அதிகாரப்பூர்வ சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு லண்டனில் நடந்தது. சதுரங்க ஒலிம்பியாட்ஸ் போட்டிகள் ஆண்டுதோறும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பியாட்டில் அதிகளவு பங்கேற்பான 176 நாடுகளின் பங்கேற்பை மிஞ்சும் வகையில் தற்போது 187 நாடுகளின் சாதனைப் பங்கேற்பை எதிர் நோக்கியுள்ளது. இந்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள், இந்திய சதுரங்க போட்டிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனித்தன்மை உடையதாக நடைபெற உள்ளது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத்துறைகள் ஒருங்கிணைந்து பல்வேறு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், அனைத்துத் தரப்பு சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலக கூட்டரங்கில் நாளை (21-ந் தேதி) 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், நாளை மறுநாள் (22-ந்தேதி) மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த சதுரங்கப்போட்டியில் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆசிரியர் தம்பதி கொலையில் தனிப்படை தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில் சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.
அருப்புக்கோட்ைட
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 72). இவரது மனைவி ஜோதிமணி (62). இவர்கள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர்.
மகன் சதீஷ் சென்னையில் வசித்து வருவதால் ஆசிரியர் தம்பதி இருவரும் அருப்புக்கோட்டையில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.
தனியாக வசித்து வந்த தம்பதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஜோதிமணி அணிந்திருந்த தங்க நகைகளை காணாமல் ேபாயிருந்ததால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.தம்பதியை கொலை செய்த கொலையாளிகள் திட்டமிட்டு தங்களது சதியை அரங்கேற்றி உள்ளனர்.
மேலும் தடயங்கள் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் சம்பவ இடத்தில் போலீசாருக்கு எந்த தடயங்களும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த இரட்டை கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் மேற்பார்வையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் ஒரு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு, 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 10 தனிப்டைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் கொலையாளிகளை அடையாளம் காண பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடப்பதற்கு முந்தைய நாட்களில் சந்தேகப்படும் வகையில் யாரேனும் திரிந்தார்களா? என்று அந்த பகுதியை சேர்்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் சங்கர பாண்டியன் வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் கொலையாளிகள் குறித்த துப்பு கிடைத்து விடும் என்று போலீசார் கூறினர்.
- போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மணல் குவியல்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை ஓரம் உள்ள மணல்களை அகற்றாமல் உள்ளதால் விபத்து ஏற்பட்டு விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் பலியாக கூடிய நிலை ஏற்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மதுரை - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு புறங்களிலும் மணல் திட்டுகள் நிறைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் மணல் திட்டில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாக கூடிய நிலைமை ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாக உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் நகரின் ஆரம்பப்பகுதியான ராமகிருஷ்ணாபுரம் முதல் நகர் எல்லை முடியும் பகுதி மடவார் வளாகம் வரை உள்ள 2 புறங்களிலும் சாலை ஓரத்தில் உள்ள மணல் குவியல்களை அகற்றி வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மணல் குவியல்களால் பல நேரங்களில் அதிவேகமாக எதிரே வரும் வாகனத்தை கவனித்து ரோட்டை கடக்க வாகன ஓட்டிகள் சாலையில் ஓரப்பகுதிக்கு செல்லும் போது சாலையில் மணலால் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைகின்றனர்.
இதுகுறித்து பல்வேறு வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓரம் உள்ள மணல்களை அகற்றாமல் உள்ளதால் விபத்து ஏற்பட்டு விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் பலியாக கூடிய நிலை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் வாகன விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.
- காரில் வந்து ஆடு திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- கிருஷ்ணம்மாள் தனது வீட்டில் வளர்த்து வரும் 5 ஆட்டுக்குட்டிகளை சாலை ஓரங்களில் மேயவிட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டியை ேசர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 65). இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் 5 ஆட்டுக்குட்டிகளை சாலை ஓரங்களில் மேயவிட்டுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஒரு காரில் வந்து ஒரு ஆட்டுக்குட்டியை திருடி சென்றுள்ளனர்.
இதனை கண்ட அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள் என்பவர் சத்தம் போட்டதால் அங்கு நின்றிருந்த கிருஷ்ணம்மாள் தம்பி சீனிவாசன் மற்றும் சிலர் ஆடு திருடி சென்ற காரை பின் தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றுள்ளனர்.ஆனால் கார் வேமாக சென்று விட்டது.
இதுபற்றி கிருஷ்ணம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடிய கும்பலை தேடி வருகின்றனர்.
- குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி நிறைவு விழா நடந்தது.
- இதன் நிறைவு விழாவுக்கு அமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் சேவை அமைப்பின் சார்பில் குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது. இதன் நிறைவு விழாவுக்கு அமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவீந்திரன் வரவேற்றார். இணை செயலாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.
விழாவில் தலைமை பயிற்றுனர் குருசாமி மற்றும் பயிற்சி அளித்தவர்களை பென்னிங்டன் நூலக கமிட்டி செயலாளர் சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள் கவுர வித்தனர். பயிற்சிக்கு உறு துணையாக இருந்த அனை வருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.பயிற்சியாளர்கள், மக்கள் சேவை மைய உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் திருமூர்த்தி நன்றி கூறினார்.
- நூற்பு ஆலையில் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தனியார் நூற்பு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் பகுதியில் உள்ள தனியார் நூற்பு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக அவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். தொழிலாளர்கள் ஜித்தேத்தி ரகுமார், நீரஜ்குமார் ஆகியோரிடம், சின்ன பேராளியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஹெட்போனை பறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் பாலமுருகன் உள்பட 6 பேர் சம்பவத்தன்று நூற்பு ஆலையில் புகுந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த நீரஜ்குமார், பூசன், சஞ்சய், கோல்குமார், அனில்குமார், ராகுல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மில் மேலாளர் முருகேசன், பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.
- வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). சம்பவத்தன்று இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விஜயகுமார் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன், 4 கிராம் நகை, ரூ,1000 ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை, பணத்தை கொள்ளை யடிப்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகஅளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் ஸ்ரீவில்லி புத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சு பூ தெரு சந்திப்பில் கொத்தங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 28), ஸ்ரீவில்லிபுத்தூர் முடுக்கு தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (41) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 28 கிலோ 584 கிராம் இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 856 ஆகும்.
இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- கூலிப்படையை ஏவி கணவன்-மனைவியை கொலை செய்த இளம்பெண் யார்? என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
- இளம்பெண் கேரளாவுக்கு தப்பி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). இவரது மனைவி குருபாக்கியம்(68). ராஜகோபால் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராஜகோபால் பணம் வட்டிக்கு கொடுத்து வந்தார். இந்த நிலையில் ராஜகோபாலும், அவரது மனைவியும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. அவர்களது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
வீட்டின் படுக்கை அறையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். இந்த கொலைகள் குறித்து தகவல் கிடைத்ததும் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ராஜபாளையம் (பொறுப்பு) டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த இரட்டை கொலையில் துப்புதுலக்க டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் பயிற்சி டி.எஸ்.பி.க்கள் சுதீர், வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா (ராஜபாளையம் வடக்கு), கவுதம்(சிவகாசி கிழக்கு), நம்பிராஜன் (வெம்பகோட்டை), ராமராஜ் (விருதுநகர் சூலக்கரை) ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொலை செய்யப்பட்ட ராஜகோபால் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் நூற்பாலைகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், சத்திரப்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடங்கள், மருத்துவ துணி உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிக்கு பல கோடி ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ராஜபாளையம் முனியம்மன்கோவில் தெருவில் வசித்து வரும் ஒரு இளம்பெண்ணுடன் ராஜகோபாலுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண் இரவு நேரங்களிலும் ராஜகோபாலின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது ராஜகோபால் வீட்டில் உள்ள ரகசிய அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் வைத்திருப்பதை அந்த இளம்பெண் தெரிந்து கொண்டார். அவர் ராஜகோபால் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை அபகரிக்க திட்டமிட்டிருக்கிறார்.
அவர் கூலிப்படையை வைத்து ராஜகோபாலையும், அவரது மனைவியையும் கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ராஜகோபால் மற்றும் அவரது மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.
பின்னர் ராஜகோபால் வீட்டு ரகசிய அறையை திறந்து அங்கிருந்த சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள், கொடுக்கல்-வாங்கல் தொடர்பான ஆவணங்களை திருடி சென்றுள்ளார். மேற்கண்டவை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூலிப்படையை ஏவி கணவன்-மனைவியை கொலை செய்த அந்த இளம்பெண் யார்? என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் கேரளாவுக்கு தப்பி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
- ராஜபாளையத்தில் ஏ,டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
- அந்தப்பகுதி மக்கள் ராஜபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சத்திரப்பட்டி சாலையில் கனரா வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று நள்ளிரவு ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கடப்பாரை, கம்பி, போன்றவற்றை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தின் பொறுத்தப்பட்டிருந்த அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை பாதியிலேயே கைவிட்டு,விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராஜபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளையர்கள் விட்டு சென்ற கம்பி, கடப்பாறை உள்ளிட் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சி நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
உடைக்கப்பட்ட ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
- குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:-
மாவட்டத்தில் செயல்படும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தக்கூடாது. மாறாக சட்டத்திற்கு முரணாக குழந்தைகளை பணியமர்த்தினால் சம்பந்த ப்பட்ட நிறுவனங்களின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கோ, 21 வயதிற்குட்பட்ட ஆணிற்கோ குழந்தை திருமணம் செய்து வைக்கக்கூடாது. அதனையும் மீறி செய்து வைப்பவர்கள் மீது குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் 2006-ன்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏற்கனவே படித்த பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயில விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அக்குழந்தைகளை அதே பள்ளியில் தொடர்ந்து கல்வி பயில அனுமதிக்க வேண்டும்.
அந்த குழந்தைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கை செய்ய மறுக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியில் அங்கீகாரத்தினை ரத்து செய்யவும், பள்ளி நிர்வாகத்தின்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர்மனோகர், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், இளைஞர் நீதிக்குழுமம் முதன்மை நடுவர் கவிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்மீனாட்சி, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, குழந்தைகள் நலக்குழு தலைவர் கெங்கா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






