காரில் வந்து ஆடு திருடிய கும்பல்

காரில் வந்து ஆடு திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணம்மாள் தனது வீட்டில் வளர்த்து வரும் 5 ஆட்டுக்குட்டிகளை சாலை ஓரங்களில் மேயவிட்டுள்ளார்.
காரில் வந்து ஆடு திருடிய கும்பல்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டியை ேசர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 65). இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் 5 ஆட்டுக்குட்டிகளை சாலை ஓரங்களில் மேயவிட்டுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஒரு காரில் வந்து ஒரு ஆட்டுக்குட்டியை திருடி சென்றுள்ளனர்.

இதனை கண்ட அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள் என்பவர் சத்தம் போட்டதால் அங்கு நின்றிருந்த கிருஷ்ணம்மாள் தம்பி சீனிவாசன் மற்றும் சிலர் ஆடு திருடி சென்ற காரை பின் தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றுள்ளனர்.ஆனால் கார் வேமாக சென்று விட்டது.

இதுபற்றி கிருஷ்ணம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடிய கும்பலை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com