search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teacher couple"

    • ஆசிரியர் தம்பதி கொலையில் தனிப்படை தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

    அருப்புக்கோட்ைட

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 72). இவரது மனைவி ஜோதிமணி (62). இவர்கள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர்.

    மகன் சதீஷ் சென்னையில் வசித்து வருவதால் ஆசிரியர் தம்பதி இருவரும் அருப்புக்கோட்டையில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

    தனியாக வசித்து வந்த தம்பதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    ஜோதிமணி அணிந்திருந்த தங்க நகைகளை காணாமல் ேபாயிருந்ததால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.தம்பதியை கொலை செய்த கொலையாளிகள் திட்டமிட்டு தங்களது சதியை அரங்கேற்றி உள்ளனர்.

    மேலும் தடயங்கள் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் சம்பவ இடத்தில் போலீசாருக்கு எந்த தடயங்களும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த இரட்டை கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் மேற்பார்வையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் ஒரு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு, 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 10 தனிப்டைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் கொலையாளிகளை அடையாளம் காண பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடப்பதற்கு முந்தைய நாட்களில் சந்தேகப்படும் வகையில் யாரேனும் திரிந்தார்களா? என்று அந்த பகுதியை சேர்்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் சங்கர பாண்டியன் வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் கொலையாளிகள் குறித்த துப்பு கிடைத்து விடும் என்று போலீசார் கூறினர்.

    ×