பிளாஸ்டிக் கவர் விழுங்கிய குழந்தை சாவு

சிவகாசி அருகே பிளாஸ்டிக் கவர் விழுங்கிய 7 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் கவர் விழுங்கிய குழந்தை சாவு
Published on

விருதுநகர்

சிவகாசி துரைசாமிபுரம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (வயது 26).இவருக்கு கலைக்கதிர் என்ற 7 மாத ஆண் குழந்தை இருந்தது.

சம்பவத்தன்று வீட்டில் விளையாடிகொண்டிருந்த கலைக்கதிர் கீழே கிடந்த பிளாஸ்டிக் கவர் துண்டு பேப்பரை எடுத்து விழுங்கி உள்ளான்.

சிறிது நேரத்தில் குழந்தை மயங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நிலைமை மோசமானதால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கும் சிகிச்சை பலனளிக்க வில்லை. இறுதியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கலைக்கதிர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com