search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
    X

    கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

    • நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
    • ஊர்வலம் காந்திசிலை ரவுண்டானா, பழைய பேருந்துநிலையம், ரெயில்வேபீடர்ரோடு வழியாக பள்ளியை சென்றடைந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ெரயில்வேபீடர் ரோட்டில் உள்ள ராஜபாளையம் கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன் விழாவிற்கு தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி தலைமை உரையாற்றினார்.நாடார் தொடக்க பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளின் செயலர் விஜயராஜன் பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். உறவின்முறை செயலாளர் வெற்றி செல்வன், நாடார் நர்சரி மற்றும் மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயலர் ஆத்தியப்பன், பொருளாளர் பெரியசாமி, தர்மகர்த்தா மதிபாலன், உதவி தலைவர் வடமலையான், உதவி செயலாளர் நாகரத்தினம், இணை தலைவர் மதிபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாள ர்களாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா, நாடார் மகாஜனசங்க விருதுநகர் மாவட்ட துணைதலைவர் ஆதிநாராயணகுமார் கலந்து கொண்டு பேசினார்கள்.

    பிளஸ்-2 மாணவி நிவேதாதேவி தன்னலமற்ற பெருந்தலைவர் காமராஜரின் வரலாற்று சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். உறவின் முறை நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இலக்கிய மன்றம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழா முடிவில் உதவி தலைமையாசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

    முன்னதாக பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்கள், தேசிய மாணவர்படை,நாட்டு நலபணிதிட்டம்,பாரத சாரண-சாரணியக்கம், இளஞ்செ ஞ்சிலுவை சங்க உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தின் போது பழைய பேருந்துநிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு உறவின்முறை நிர்வாகஸ்தர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் காந்திசிலை ரவுண்டானா, பழைய பேருந்துநிலையம், ெரயில்வேபீடர்ரோடு வழியாக பள்ளியை சென்றடைந்தது.

    Next Story
    ×