search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Educational"

    • மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்கம் நடந்தது.
    • மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மற்றும் தொண்டி அஹ்லுஸ் ஸுன்னா மகளிர் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய விடுதலைப் போரில் மறைக்கப்பட்ட முகங்கள் என்ற தலைப்பில் பேசினார். சச்சார் கமிட்டி அறிக்கை குறித்து பேராசிரியர் அருணன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உமரி, த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இணையதள முகவரியில் இருந்தும்் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொ கையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரையோ அணுகலாம்.

    மேலும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்தும்் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    2022-23-ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தை மாண வர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ''ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண். 044-29515942, மின்னஞ்சல் முகவரி:tngovtiitscholarship@gmail.com'' என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • புதுவையில் உள்ள முக்கிய சாலைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சூட்ட வேண்டும்.

    புதுச்சேரி:

    பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மன்னர் மன்னனின் மகனான கவிஞர் கோ.பாரதி தலைமையில் தமிழறிஞர்கள் படைப்பாளி பைரவி, சரஸ்வதி வைத்தியநாதன், நெடுமாறன், தென்றல், இசை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், பிரித்திவிராஜ், செயலாளர் வள்ளி, கீர்த்திகா, லட்சுமி ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் புரட்சிகவிஞர் பாரதிதாசனின் மைந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர் மன்னர் மன்னன் பெயரை புதுவையில் உள்ள முக்கிய சாலைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சூட்ட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு பங்கேற்றார்.
    • மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ''எதிர்காலம்? மேற்படிப்பிற்கான பயணம்...'' என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார். டீன் மாரிசாமி உள்பட பலர் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக சினிமா நடிகரும், பலகுரல் கலைஞர் மற்றும் அப்துல்கலாமின் சீடருமான தாமு கலந்து கொண்டார். இவர் 2021-ம் ஆண்டிற்கான சிறந்த கல்வி சேவைக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் நடிகர் தாமு பேசியதாவது:-

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசிய இதே கல்லூரி மேடையில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை விதைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதற்கான அறிவை தேட ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.

    ஆசிரியர்கள் 2-வது பெற்றோர்கள். அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். ஆன்லைன் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் போன்றவைகளில் கவனம் செலுத்தக்கூடாது.

    உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்கும் அதீத சக்தி இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. ''கனவு காணுங்கள்'' என்ற அப்துல்கலாமின் வார்த்தைகளை நனவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பி.எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியில் கல்லூரி முதல்வர் சுந்தரராஜ், கல்வி இயக்குநர் கோபால்சாமி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திருப்பரங்கிரிராஜன், பி.எஸ்.ஆர். கல்வியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், அனைத்து கல்லூரிகளின் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சயின்ஸ் மற்றும் ஹூமானிட்டிஸ் துறைத்தலைவர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.

    • லயன்ஸ் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
    • காமராஜர் குறித்த விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தாளாளர் வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வர் முருகன், நிர்வாக உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரங்கராஜா, குணசேகரன், லயன்ஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த், ரஞ்சித் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் காமராஜர் குறித்த விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் எலிசபெத், ரோஸ்லின்மேரி, ராமகிருஷ்ணன், மாரீஸ்வ ரன், காளிமுத்து, மயில்ராணி, மாரீஸ்வரி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற 70 மாணவர்களுக்கு கல்வி வளா்ச்சி விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • வாசகர் வட்டத்தலைவா் பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு பொதுநூலக கட்டிடத்தில் செங்கோட்டை, தென்காசி வட்டாரத்தில் உள்ள 35 பள்ளிகளிலிருந்து 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற 70 மாணவர்களுக்கு கல்வி வளா்ச்சி விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தலைவா் பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட இணைச்செயலாளா் செண்பக குற்றாலம் முன்னிலை வகித்தார். வாசகர் வட்டச்செயலாளா் நல்நூலகா் ராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நெல்லை ஆலடி அருணா கல்வி குழும செயலாளா் ஆலடிஎழில்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி வளர்ச்சி விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா, ஐன்ஸ்டின் கல்லுாரி முதல்வா் முருகேசன், விழுதுகள் அறக்கட்டளை நிறுவனா் சேகர், எஸ்.எஸ்.ஏ. திட்ட மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லுாரி நுாலகா் ஏஞ்சலின், நுாலக ஓவிய ஆசிரியா் முருகையா, ஆசிரியைஅமுதா, தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் செங்கோட்டை, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

    • எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் சதிஷ் மற்றும் தலைமை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சவுகட்ட சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    இதில் எக்ஸல் கல்வி நிறுவன தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மதன் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    எக்ஸல் பொறி யியல் கல்லூரி முதல்வர் பொம்ம ண்ண ராஜா, எக்ஸல் காலேஜ் ஆப் ஆர்கி டெக்சர் ரூபிளானிங் முதல்வர் பாலமுருகன், எக்ஸல் கல்வியியல் கல்லூரி முதல்வர் சைமன் அருண் பாரத்குமார் மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் கலை மகள் ஆகியோர் ஆண்ட றிக்கை வாசித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் சதிஷ் மற்றும் தலைமை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சவுகட்ட சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சவுகட்டசென் பேசும் போது, மாணவர்கள் கல்லூரி படிப்பினை வெற்றி கரமாக முடித்து வேலை வாய்ப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனைகள வழங்கினார்.

    தெடர்ந்து நடிகர் சதிஷ் பேசும் போது சகஜமாகவும், யதார்த்தமாகவும் மாணவர்களுக்கு நற்பண்புகள், நற்கருத்துக்களையும், வாழ்வில் வெற்றி பெற சிறந்த அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து அவர் விடா முயற்சி நேர்மறையாக சிந்திக்க வும் கட்டாயம் பழகிக்கொள்ளவேண்டும் என்று பேசினார்.

    தொடர்ந்து 2022-ம் ஆண்டில் பல்வேறு பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள், விளையாட்டு துறையில் வெற்றி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் வரிசையில் முன்னிலை வகித்தவர்களுக்கான சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு வழங்கி னர்.

    அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் எக்ஸல் பொறியியல் கல்லூரி அட்மினிஸ்ட ரேஷன் இயக்குனர் (பொறுப்பு) அன்பு கருப்புசாமி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், கல்வியியல் கல்லூரி, கந்தசாமி கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் எக்ஸல் கல்வி குழும அலுவலர்கள் செய்தி ருந்தனர்.

    ×