என் மலர்
விருதுநகர்
- மகனின் இறப்புக்கு நஷ்டஈடு கோரி பா.ஜ.க. நிர்வாகி மனு கொடுத்தார்.
- மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளியைச் சேர்ந்தவர் முனியாண்டி. பா.ஜ.க. கிளைச்செயலாளராக உள்ளார். இவரது மகன் தினேஷ்குமார் ஒரு கட்டிட ஒப்பந்ததாரர்.
அவர் மேல்நிலைத்தொட்டி கட்டுமான பணிக்காக கடந்த 2021-ம் ஆண்டு வெளியூர் சென்றார் . அப்போது அவர் பாம்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மகனின் இறப்புக்கு நிவாரணம் கோரி முனியாண்டி தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனிடம் மனு கொடுத்தார். அந்தமனு விசாரிக்கப்பட்டு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கும் படி பரிந்துரைக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் தற்போது வரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நிவாரணம் பெற்றுத்தருமாறு கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனில் முனியாண்டி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
- இறைச்சி, மீன் கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது.
- எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு வருகிற 22-ந் தேதி மேற்கொள்ளப்படும்.
விருதுநகர்
சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டு தலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது எடைய ளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரை யிடாமல் வியாபார உப யோகத்தில் வைத்திருந்த ஒரு வியாபாரி மீதும், எடைய ளவுகள் மறுமுத்திரை யிடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 19 மீதும், தராசின் எடையை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 2 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மறுமுத்திரையிடப்படாத 8 மின்னணு தராசுகள், 1 சி விட்ட தராசு, 2 மேசைத் தராசுகள் மற்றும் 20 இரும்பு எடைக்கற்கள் தெருவோர வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு சட்ட முறை எடையளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
இறைச்சி, மீன் கடைகளில் எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு மீண்டும் வருகிற 22-ந் தேதி மேற்கொள்ளப்படும். எனவே இறைச்சி மற்றும் மீன் கடை வணிகர்கள் எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவ டிக்கையை தவிர்க்க வேண்டும்.
நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்), 1/13சி ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.
விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேஸ்வரன், செல்வராஜ், பாத்திமா, துர்கா, முருகன், சிவசங்கரி ஆகியோர் இணைந்து இந்த கூட்டாய்வை மேற்கொண்டனர்.
இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்தார்.
- கூடுதல் வட்டிகேட்டு பெண் மீது தாக்குதல் நடத்தினர்.
- சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சேனைத்தலைவர் திருமண மண்டபம் தெருவை சேர்ந்தவர் சித்தாயி (வயது 45), இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதனை வட்டியுடன் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்தாயியிடம் இசக்கியம்மாள் மேலும் வட்டி கேட்டுள்ளார். ஆனால் சித்தாயி தரவில்லை. இந்த நிலையில் இசக்கியம்மாள் கூடுதல் வட்டி கேட்டு சித்தாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் சித்தாயி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விருதுநகரில் கம்யூட்டர் என்ஜினீயர்-வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகரை சேர்ந்தவர் அனந்த சிவராமன்(வயது27) கம்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி அபிநயா. அனந்த சிவராமன் கடந்த 5 நாட்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.
மன சோர்வுடன் இருந்த அவர் வீட்டின் மாடியில் தூங்கச் சென்றார். இந்தநிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுபற்றி அவரது சகோதரர் ஆனந்தராமன் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனந்த சிவராமன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேல ஆவாரம்பட்டி அழகத்தான் குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45).
இவர் கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது இடது கை செயலற்று போனது. இதனால் அவர் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தென்னைக்கு வைக்கும் குருணை மருந்தை சாப்பிட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
உறவினர்கள் அவரை உடனடியாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் முத்துக்குமாரின் மனைவி அழகம்மாள் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இணையவழி பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடக்கிறது.
- பணி நிரவல் கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடு களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்யவேண்டும்.
விருதுநகர்
அரசு மேல்நி லைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் இணையவழி கலந்தாய்வு நாளை(11-ந்தேதி) நடக்கும் என்று பள்ளி கல்வித்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது:-
தமிழகத்தில் 2022-23 கல்வி ஆண்டில் 1.8.2022 நிலவரப்படி ஆசிரியர், மாணவர் விகிதாச்சார அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் நிலை 2பணியிடங்கள் நிர்ணயம் செய்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து கடிதம் மூலமாக அறிக்கை பெறப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 3,123 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 407உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்கள் அனுமதிக் கப்பட்டுள்ளன.
அரசாணையின்படி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 400மாணவர்களுக்கு மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் நிலை -1 பதவியில் ஆசிரியர்கள் பணியமர்த்த ப்படுகின்றனர். இது தவிர 183பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.
ஆனால் 400-க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் உள்ள 163பள்ளி களில் உடற்கல்வி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே விதிகளின்படி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையான பள்ளிகளுக்கு பணி நிரவல்அடிப்படையில் பணியிட மாறுதல் செய்யப் படுவர்.
இதற்கான கலந்தாய்வு நாளை(செவ்வாய்க்கிழமை) இணைய வழியில் நடத்தப்படும். பணி நிரவல் கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடு களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்யவேண்டும். எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் கலந்தாய்வு நடத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- ஜெய்மகா காளீஸ்வரி கோவிலின் 30-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
- வருடாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சஞ்சீவி மலை கிழக்கு அடிவாரத்தில் உள்ள ஜெய்மகா காளீஸ்வரி கோவிலின் 30-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி பொன்னுசாமி தலைமை தாங்கினார். சேலம் உதவி ஆணையாளர் ராமசாமி, டாக்டர் கோதண்டராமன், தொழிலதிபர்கள் என்.ஆர். சுப்பிரமணியராஜா, பீமராஜா, கே.ஏ.சுப்பராஜா, ஹரிஹரன், தர்மகிருஷ்ண ராஜா ஆகியோரது குடும்ப வகையறாக்கள் முன்னிலை வகித்தனர். அம்மனுக்கு வருடாபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன. மேலும் ஓம் சக்தி வழி விடு விநாயகர், பாலசுப்பிரமணியசுவாமி, சந்தனகருப்புசாமி, பீம பைரவர், காரிய சித்தி விநாயகர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள், விசேஷ பூஜைகளும் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வருடாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. தர்மகர்த்தா டாக்டர் செந்திலாதிபன் அன்னதானத்தை ெதாடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் செந்திலாதிபன்,டாக்டர் மணிகண்ணன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த ரவுடிகளை தேடி வருகின்றனர்.
- கார்த்தீஸ்வரன் என்ற குட்டை கார்த்திக், சித்திர வேல், பல்லுமணி என தெரியவந்தது .
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பல்லப்பட்டி மீனாட்சி காலனியை சேர்ந்தவர் சுல்தான் பாட்ஷா (வயது45). சுமை தூக்கும் தொழிலா ளியான இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது முட்புதரில் மறைந்திருந்த 3 மர்ம நபர்கள் திடீரென சுல்தான் பாட்ஷாவை வழிமறித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1800-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுல்தான் பாட்ஷாவிடம் பணம் பறித்தது கார்த்தீஸ்வரன் என்ற குட்டை கார்த்திக், சித்திர வேல், பல்லுமணி என தெரியவந்தது.
இவர்கள் 3 பேர் மீதும் சிவகாசி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. பணம் பறிப்பில் தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீ சார் தேடி வருகின்றனர்.
- சாத்தூர் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
- போலீஸ் சூப்பிரண்டின் தொடர் அதிரடி ஆய்வு காரணமாக போலீசாரிடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாதாரண உடையில் விருதுநகரில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் உள்ள ஆமத்தூ ருக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டு நள்ளிரவு நேரத்தில் போலீஸ் நிலை யங்களில் ஆய்வு செய்தார்.
போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி ஆய்வை பொது மக்கள் வரவேற்றனர். இந்த நிலையில் 2-வது முறையாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேற்று நள்ளிரவு விருதுநகரில் இருந்து சாத்தூருக்கு தனியாக சைக்கிளில் பயணம் செய்தார். அப்போது அவர் வழியில் சட்டம் -ஒழுங்கு தொடர் பாக பொதுமக்களிடம் கேட்டறிந்ததாக தெரிகிறது.
நள்ளிரவில் சாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற சீனிவாச பெருமாள் அங்கு அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் குற்றங்கள் குறைய தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என போலீ சாருக்கு உத்தரவிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சீனிவாச பெரு மாளின் தொடர் அதிரடி ஆய்வு காரணமாக போலீ சாரிடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
- 1,314 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
- வேலை வாய்ப்புத்துறை பேராசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி குழுமங்களில் படித்த 1,314 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.
இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் வரவேற் றார். வேலை வாய்ப்பு துறை அதிகாரி காசிராமன் வேலை வாய்ப்பிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், கோவை சி.டி.எஸ். இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு 1,314 மாணவ-மாணவிகளுக்கு கிடைத்துள்ளது.
அதற்கான பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் பல லட்சம் மாணவ-மாணவிகள் பொறியியல் பட் டம் படித்து முடிக்கிறார்கள். இதில் 20 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே என்ஜினீயரிங் தொடர்பான வேலை கிடைக்கிறது. மற்ற 80 சதவீதம் பேர் பல்வேறு துறைகளில் வேலைகள் பெறுகிறார்கள். இதனை தவிர்த்து என்ஜினீயரிங் துறையில் வேலை வாய்ப்புகளை பெற மாணவர்கள் தங்களது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் டீன் மாரிசாமி, பி.எஸ்.ஆர்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரம ணியன், பி.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுந்தராஜன், பி.எஸ்.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பரங்கிரி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்புத்துறை பேரா சிரியர் சுதாகர் நன்றி கூறினார்.
- கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரேசுவரி கல்வியியல் கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலர் திலீபன்ராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கருணாகரபிரபு போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினார்.
சமூக நலத்துறை அலுவலர் ஜாஸ்மின், கண் மருத்துவர் அழகர்ராஜ், வட்டாட்சியர் ரங்கசாமி, கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பேசினர். உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அப்போது வெள்ளக்கோட்டை பகுதியில் 6 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார், சூதாடிய வெள்ளக்கோட்டையைச் சேர்ந்த அருண்குமார் (வயது 31), சோலையப்பன் (41), கீழத்தெரு ரமேஷ் (52), திருச்சுழி ரூபன் (41), அன்பு நகர் ஆறுமுகம் (40), முஸ்லிம் கிழக்கு தெரு பாதுஷா (35) ஆகியோரை கைது செய்தனர்.
- சமுதாயத்தை பேச்சு மூலம் ஒரு அங்குலமாவது முன்னேற்ற வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
- பேச்சுப் போட்டியில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகரில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:-
தலைசிறந்த பேச்சா ளர்கள்தான் எதிர்காலத்தில் தலைவர்களாக உருவாகியுள்ளனர். சிறந்த பேச்சு ஒருவரது வாழ்வையே மாற்றக் கூடிய சக்தி படைத்தது. உலகின் ராஜ தந்திரத்தின் மிக முக்கிய பங்கு வகிப்பது, தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வார்த்தைதான்.
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். ஒரே கருத்தை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சொல்லாம். சொல்லை தேர்ந்தெடுத்து பேசுவதுதான் தனிமனித வாழ்க்கையின் வெற்றி.பள்ளி பருவத்தில் நானும் பல பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளேன். மாநில அளவிலான போட்டி யில் முதல் பரிசும் வென்றேன். ஒரு முறை தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து பரிசுபெற சென்றபோது நானும் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதிந்தது.
இன்றைய பேச்சு எதிர்காலத்தில் நிச்சயமாக பெரிய மாற்றத்தத் தரும். படித்து முடிந்து நீங்கள் எந்த பொறுப்புக்கு சென்றாலும் உங்களுக்கென்று ஒரு சமுதாய பொறுப்பு இருக்கும். அதை சரியாக நிறை வேற்றுங்கள். நல்ல பேச்சாளராக தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். ஆழ்ந்த கருத்துக்களோடும், சிந்தனையோடும் பேச வேண்டும். இந்த சமுதாயத்தை உங்கள் பேச்சு மூலம் ஒரு அங்குலமாவது முன்னேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேச்சுப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் மாநில ஒருங்கி ணைப்பாளர் அழகிரிசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி, விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.






