கூடுதல் வட்டிகேட்டு பெண் மீது தாக்குதல்

கூடுதல் வட்டிகேட்டு பெண் மீது தாக்குதல் நடத்தினர். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கூடுதல் வட்டிகேட்டு பெண் மீது தாக்குதல்
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சேனைத்தலைவர் திருமண மண்டபம் தெருவை சேர்ந்தவர் சித்தாயி (வயது 45), இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதனை வட்டியுடன் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சித்தாயியிடம் இசக்கியம்மாள் மேலும் வட்டி கேட்டுள்ளார். ஆனால் சித்தாயி தரவில்லை. இந்த நிலையில் இசக்கியம்மாள் கூடுதல் வட்டி கேட்டு சித்தாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் சித்தாயி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com