என் மலர்
விருதுநகர்
- சென்னையில் நடைபெறும் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- அனைத்து வகை பொருட்களையும் காட்சிப் படுத்தி விற்பனை செய்யலாம்.
விருதுநகர்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு நிர்வாக பயிற்சி, நிதி மேலாண்மை பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம் பாட்டு பயிற்சிகள் (தொழில் முனைவோர் பயிற்சி) அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில் முனைவோர்களாகி சுய தொழில் செய்து வருகின்ற னர்.தற்போது சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைபடுத் தும் வகையில் பல்வேறு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை சென்னை தீவு திடலில் மண்டல அளவிலான சாராஸ் மேளா என்ற பெயரில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து வகை பொருட்களையும் காட்சிப் படுத்தி விற்பனை செய்ய அரிய வாய்ப்பு அளிக்கப்படு கிறது.
எனவே இந்த கண்காட்சி யில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் பெயர், முகவரி, உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரம் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 04562-252036, அலைபேசி எண்: 98654 59842 தொடர்பு கொள்ள லாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார்.
- வழிகாட்டி உதவியுடன் ஆண்டாள் கோவிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் ஏற்பாட்டை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலா வழிகாட்டி உதவியுடன் கூடிய சுற்றுலாவை கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்த சுற்றுலா வில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஆண்டாள் கோவில் ஸ்தல வரலாறு மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து சுற்றுலா வழிகாட்டி யின் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கங்கள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி என்ற நடைமுறையில் இது செயல்படுத்தப்படுகிறது. சுற்றுலாவிற்கான கட்டண தொகையாக ஒரு சுற்றுலா பயணிக்கு ரூ.100 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு மாவட் டங்கள் மற்றும் மாநிலங்க ளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயனடைவார் கள்.தொடக்க விழா நிகழ்ச்சி யில் சுற்றுலா அலுவலர் அன்பரசு மற்றும் செயல் அலுவலர் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
- வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கோவிலுக்கு சீல்வைக்கவில்லை என தெரிவித்தனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிலை பூட்டி சீல் வைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோடு, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பழமையான ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. ராஜபாளையம் சங்கரன் கோவில் ரோடு பகுதியைச் சேர்ந்த நண்டு பூசாரி (எ) ராக்கப்பன் இந்தக் கோவிலின் தர்ம கர்த்தாவாகவும், பரம்பரை பூசாரியாகவும் இருந்து வருகிறார்.
இவர் கடந்த 10-ந்தேதி கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு, நான்கு பக்கமும் உள்ள கதவுகளை பூட்டிவிட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை பூஜை செய்வதற்காக மீண்டும் கோவிலுக்குச் சென்றார். அப்போது கோவிலின் கதவில் இருந்த பூட்டில் வெள்ளைத் துணி சுற்றப்பட்டு சீல்வைக்கப்பட்டிருந்தது.
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மற்ற பக்கங்களில் உள்ள கதவுகளை சென்று பார்த்தார். அந்த கதவுகளிலும் பூட்டுகள் போட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கோவிலுக்கு சீல்வைக்கவில்லை என தெரிவித்தனர்.
யாரோ மர்மநபர்கள் கோவிலுக்கு சீல்வைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் ராக்கப்பன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிலை பூட்டி சீல் வைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மல்லாங்கிணர்-அருப்புக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
- அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பேரூராட்சி மற்றும் அருப்புக்கோட்டை வட்டாரப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மல்லாங்கிணர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.82.30 லட்சம் மதிப்பில் சின்னக் குளம் ஊரணி மேம்பாட்டு பணிகளையும், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.148 லட்சம் மதிப்பில் திம்மன் பட்டி சாலை பொது மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளையும், வளமீட்பு பூங்காவில் 15-வது நிதிக்குழு மான்யத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் உரம் தயாரிக்கும் உலர்களம் அமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வளமீட்பு பூங்கா வில் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் ரூ.23.30 லட்சம் மதிப்பில் உரம் தயாரிக்கும் உலர்களம் அமைக்கும் பணிகளையும், முடியனூர் காலனியில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பறை பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், மல்லாங் கிணரில் உள்ள சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து சீட்ஸ் நிறுவ னத்தினுடைய கொள்முதல் கிட்டங்கி விவசாயி களுடைய விளைபொருட்களை தரம் பிரித்தல், மதிப்பு கூட்டல், விற்பனை செய்தல் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
அருப்புக்கோட்டை வட்டம் கோபாலபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்பட்டு வரும் அரவை முகவை விஸ்வேஸ்வரா அரிசி அரவை ஆலையினை பார்வையிட்டு ஆய்வு செய்து உற்பத்தி முறைகள், தரம் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து கோபாலபுரம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவ முறைகள், மருந்து இருப்பு, நோயாளிகள் குறித் தும் அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் விஜயகுமார், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழ கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாய்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாச் சேரி தெரு திருவண்ணாமலை ஊராட்சியின் எல்லையில் உள்ளது. இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இங்கு பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட வில்லை என கூறப்படுகிறது.
இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தெருக் களில் கழிவுநீர் தேங்குகிறது. கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவு நீர் வடியாமால் குடியிருப்பு களை சுற்றி தேங்கி நிற்கிறது.
அங்கன்வாடி மையம், சமுதாய கூடம், சிறுவர் பூங்கா மற்றும் கோயில் அருகிலும் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தை கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே கழிவுநீர் கால் வாய்களை தூர்வார வேண் டும் என்றும், தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் திருவண்ணா மலை ஊராட்சி நிர்வாகத் திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
- இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புளிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது65). இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். அதனை பார்த்த அவரது மனைவி ராமு விரைந்து வந்து தடுக்க முயன்றார்.
ஆனால் அதற்குள் அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டார். உறவினர்கள் உடனடியாக அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன்(45). இவரது மனைவி, குழந்தைகள் மதுரையில் வசித்து வருகின்றனர். வெள்ளையன் தனது தாயாருடன் வசித்து வந்தார். வெளியூர் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் எறும்பு பொடி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வெள்ளையனின் சகோதரர்கள் பழனிசாமி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணின் காதல் விவகாரத்தில் மிரட்டல் விடுத்த மைத்துனர், மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஆனந்த் மிரட்டியதை குறித்து அவரது தந்தை ராமச்சந்திரனிடம், சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது53). இவரது மகளும், தங்கை மகன் ஆனந்த்தும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனந்த்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால் ஆனந்த்துடன் பழகுவதை சுப்பிரமணியனின் மகள் நிறுத்திவிட்டார்.
இந்தநிலையில் சுப்பிரமணியன், தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். இதையறிந்த ஆனந்த் ஆபாச போட்டோக்களை அனுப்பி தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த பெண்ணிடம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனந்த் மிரட்டியதை குறித்து அவரது தந்தை ராமச்சந்திரனிடம், சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார். ஆனால் அவரும் ஆனந்த்துக்குதான் சுப்பிரமணியனின் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினாராம்.
இதுகுறித்து சுப்பிரமணியன் தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் -புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- நிதி உதவி தேவாலயத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள்: 20.12.2016-ன்படி கீழ்க்கண்ட தகுதிகளின்படி கிறித்துவ தேவாலயம் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள கட்டி டத்தின் வயதிற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சம், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சம் 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சம். தற்போது இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற் கொள்ளவும், கட்டி டத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம் வருமாறு:-
தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal in Churches), கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities), குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities).
தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப் பட்டுள்ள மானிய தொகை விவரம் வருமாறு:-
10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.300 லட்சத்தில் இருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங் களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரி சீலித்து, கிறித்துவ தேவா லயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.
நிதி உதவி இரு தவணை களாக தேவாலயத்தின் வஙகிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்ல ஆன்மீக சுற்றுலா ரெயில் மே 4-ந் தேதி இயக்கப்படுகிறது.
- சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
விருதுநகர்
ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலப் பொது மேலா ளர் ரவிக்குமார், தெற்கு ரெயில்வே அதிகாரி வெங்கட சுப்பிரமணியன், தென் மண்டல சுற்றுலா பொது மேலாளர் சுப்பிர மணி ஆகியோர் விருது நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்தாண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பாரத் கவுரவ் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ரெயில்வே நிர்வாகம், ஐ.ஆர்.சி.டி.சி. இணைந்து இந்தச் சிறப்பு ரெயிலை இயக்குவதால், சுற்றுலா சென்று வருவதற்கான செலவு குறைகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஒரு நபருக்கு ரெயில் கட்டணம், தங்கும் அறை, கோவிலுக்குச் சென்று வருவதற்கான கட்டணம் என ரூ.20 ஆயிரத்து 367 செலுத்த வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வோருக்கு கட்டணம் ரூ.35 ஆயிரத்து 651 ஆகும். இவர்களுக்கு தங்கும் அறை, வாகனம் ஆகியவை குளிர்சாதனத்துடன் வழங்கப்படும். மேலும் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டணச் சலுகை உண்டு.
வருகிற மே 4-ந் தேதி கேரள மாநிலம் கொச்சு வேலியில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா சிறப்பு ரெயில் செங்கோட்டை, விருதுநகர் வழியாக தஞ்சை, சென்னை வழியாக, வட மாநிலத்தில் உள்ள பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாராணசி, திரிவேணி சங்கமம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று திரும்ப உள்ளது.
இந்த ரெயிலில் 4 குளிர்சாத னப் பெட்டிகள், 7 படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும். வட மாநில கோவில்களுக்கு 10 நாட்கள் சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ரூ18.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக்கோட்டை யூனியன்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாத்தூர் யூனியன் சூரங்குடி ஊராட்சியில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ2.77லட்சம் மானியத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை யும், புது சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ40.5 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ5.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மிதிவண்டி நிறுத்தும் இடத்தையும், ரூ5.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமத்துவ மயான காத்திருப் போர் கூடத்தையும், மதிய உணவு திட்டத்தின் கீழ் ரூ5.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமைய லறைக் கூடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பந்துவார்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ22.65 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டி டத்தையும், மேலப்புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ18.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி களையும் கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், வெம்பக் கோட்டை யூனியன் கங்கரக்கோட்டை ஊராட்சி கீழசெல்லையாபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் மூலம் ரூ6.65 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் தளத்தையும், கீழசெல்லையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மதிய உணவுக்கூட கட்டடத்தையும், மேட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் ரூ1.29 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் 2 வகுப்பறை கட்டிட பராமரிப்பு பணி களையும், ரூ.44ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் சமையலறை பரா மரிப்பு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா உள்பட பலர் உடனிருந்தனர்.
- வத்திராயிருப்பு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியது யார்?
- தோட்ட உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை மாவட்டம் பேரையூர், தேனி மாவட்டம் மேகமலை ஆகிய வனப்பகுதிகள் இணைக்கப் ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்- மேக மலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வனப் பகுதிக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை வனத் துறையினர் விதித்தனர். மேலும் வனப்பகுதியில் யாரும் நுழைக்கிறார்களா? என்பதை கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் வத்திரா யிருப்பு மலையடிவார பகுதிகளில் கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் கான்சாபுரம் அருகே ஓடை யில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து அத்திக்கோவில் பகுதியில் உள்ள தனியார் தென்னந் தோப்பில் 5 நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத் திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் அடுத் தடுத்து சிக்கிய சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அத்தி கோவில் பகுதியில் வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக சிலர் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிகளில் இருந்த தோட்டங்களில் சோதனை செய்தனர்.
அப்போது கான்சா புரத்தை சேர்ந்த சோலை யப்பன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் பதுக்கி வைத்தி ருந்த 4 நாட்டு வெடிகுண்டு களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக அதனை அங்கு யாரோ மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.
ஆனால் பதுக்கிவைத்தது யார்? என்பது தெரிய வில்லை. அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. மேலும் வனவிலங்குகள் வேட்டை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று தோட்ட உரிமையாளர் சோலை யப்பனிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- அருப்புக்கோட்டை வட்டக்கிளை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் காந்திராஜீ தலைமை தாங்கினார்.
செயலாளர் அந்தோணிராஜ் விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வைரவன், தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முனியாண்டி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகி சீராளன், அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் பேசினர்.
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மாரியப்பன் நிறைவுரை ஆற்றினார்.
அருப்புக்கோட்டை வட்டக்கிளை தலைவர் கார்த்திக் நன்றி கூறினார். செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளர் ஊழியர் விரோதப்போக்கை கடைபிடிப்பதாக கூறி அவரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.






