search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    சாத்தூர் யூனியன் புதுசூரங்குடியில் கட்டப்பட்டுள்ள சமத்துவ மயான காத்திருப்போர் கூடத்தை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ18.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக்கோட்டை யூனியன்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சாத்தூர் யூனியன் சூரங்குடி ஊராட்சியில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ2.77லட்சம் மானியத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை யும், புது சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ40.5 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ5.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மிதிவண்டி நிறுத்தும் இடத்தையும், ரூ5.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமத்துவ மயான காத்திருப் போர் கூடத்தையும், மதிய உணவு திட்டத்தின் கீழ் ரூ5.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமைய லறைக் கூடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பந்துவார்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ22.65 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டி டத்தையும், மேலப்புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ18.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி களையும் கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், வெம்பக் கோட்டை யூனியன் கங்கரக்கோட்டை ஊராட்சி கீழசெல்லையாபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் மூலம் ரூ6.65 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் தளத்தையும், கீழசெல்லையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மதிய உணவுக்கூட கட்டடத்தையும், மேட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் ரூ1.29 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் 2 வகுப்பறை கட்டிட பராமரிப்பு பணி களையும், ரூ.44ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் சமையலறை பரா மரிப்பு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×