என் மலர்
விருதுநகர்
- முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்ல ங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளியில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராசா அருண்மொழி முன்னிலை வகித்தார். விழாவில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
முதல்-அமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் எடுத்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. அதிலும் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளை சேர்க்க பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
அதற்கு சாட்சியாக தற்போது வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன.
விருதுநகர் மாவட்டத்திற்கு விருதுகள் சேர்க்கும் வகையில், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் சேர்க்க காரணகர்த்தாவாக திகழும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டி மகிழ்கிறேன். விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வருவாய்த்துறை அமைச்சரும், தொழில் துறை அமைச்சரும், கலெக்டரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் எடுத்த முயற்சிக்கு எடுத்துக்காட்டாக பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
அதுபோல் ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த இதுவரை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3கோடி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் விருதுநகர் மாவட்டம் முதலிடம் வரவேண்டும்.
பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற உறுதுணை யாக இருந்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உதவி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவ செல்வங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் பிரபாகரன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரமசிவன், பாலா, கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து, கிளை செயலாளர்கள் பரமசிவம், நடராஜன், சிவா மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
- வாலிபர் மீது தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
- எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் இந்திரா காலனியை சேர்ந்தவர் கருத்தபாண்டி(வயது45). இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு அந்தப்பகுதியில் நடந்து வந்தார். அப்போது 2 நாய்களும் சண்டையிட்டு கடித்துக்குதறியது. இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கருத்தபாண்டியை, ராம்குமார், அவரது தந்தை கனகராஜ், உறவினர் மாரிமுத்து ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கருத்தபாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் நாகராஜ்(வயது50). இவரிடம் அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவர் ரூ. 90 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அதனை அவர் திருப்பித்தரவில்லை. சம்பவத்தன்று அருப்புக்கோட்டைக்கு வந்த நாகராஜ் கடனை திருப்பித்தருமாறு குருசாமியிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குருசாமி, நாகராஜை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்தனர்.
- பிளஸ்-2 தேர்வில் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
- செய்முறை பயிற்சிகளுடன் கூடிய புதியவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் கிளப் மூலமாக 1979-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் ஆண்டு +2 தேர்வில் தேர்வு எழுதிய 201 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் பொன் அஜித் குமார் 593 மதிப்பெண்களும், மாணவிகள் பூஜாஸ்ரீ 587 மதிப்பெண்களும், விஜயமதி 585 மதிப்பெண்களும், யுவஸ்ரீ 585 மதிப்பெண்களும் பெற்று முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெற்றனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 37 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 56 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 61 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
பல்வேறு பாடங்களில் மொத்தம் 53 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் 3 இடங்கள் பெற்றவர்களை பாராட்டும் வகையில் பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களும், பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதில் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் சுந்தரமகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அரிமா உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு பிரி கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் வகையில் மாறுபட்ட நடைமுறைகளில் செய்முறை பயிற்சிகளுடன் கூடிய புதியவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் காற்றுடன் மழை பெய்தது.
- இதில் முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் ரோட்டில் உள்ள பட்டு வளர்ச்சி துறை அலுவலக நுழைவு வாயிலில் யூகலிப்டஸ் மரம் காற்று, மழைக்கு விழுந்தது. இதில் அலுவலக போர்டு மற்றும் மின்கம்பிகள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடையூறாக இருந்த மரம் மற்றும் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகில் ரோட்டில் விழுந்த கருவேல மரத்தை உபகரணங்கள் மூலம் அறுத்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். அந்த நேரத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணியை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் செய்தனர்.
- மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
- சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை அடுத்துள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது68). விவசாயியான இவர் சம்பவத்தன்று வயலுக்கு சென்றார். அப்போது கீழே அறுந்து கிடந்த மின் வயரை பெரியசாமி மிதித்ததாக தெரிகிறது. இதில் அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது33). இவர் சில வருடங்களுக்கு முன்பு திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது நடந்த விபத்தில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய பாலமுருகன் மது பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவத்தன்று அவர் வீட்டின் வாசலில் மயங்கி விழுந்து படுகாயமடைந்தார். குடும்பத்தினர் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்தார். சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- அருப்புக் கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் செங்குன்றா புரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராகவன்(வயது 43). இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கிளையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
குடும்ப தேவைக்காக ராகவன் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் மன உளைச்சலில் இருந்த ராகவன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை.
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராகவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பாக்கி யராணி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை திருநகரத்தை சேர்ந்தவர் சரவணன் (33). கடந்த சில மாதங்களாக இவருக்கும், இவரது மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.இதில் விரக்தியடைந்த சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக் கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தாழையூத்துபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(25). மது பழக்கத்துக்கு அடிமை யான இவர் சம்பவத்தன்று மது குடிக்க பணம் தருமாறு தாயிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார். இதில் விரக்தியடைந்த மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
- தி.மு.க. நிர்வாகி மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசியில் அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகாசி பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. தி.மு.க. 6-வது பகுதி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி பிரிவு இணைச்செயலாளரும், திருமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சபையர் ஞானசேகரன், காளிராஜன், சேவுகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகி மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலை வாங்கித்தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்தனர்.
- வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவரது மகன் பொன் சங்கிலிபாபு. எம்.பி.ஏ. முடித்துள்ள இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்தநிலையில் ராஜபாளையத்தில் வேலைக்கு ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் பொன் சங்கிலிபாபுவுக்கு ரஷ்யாவில் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதனை நம்பி அவர்களது கணக்கில் தேன்மொழி ரூ.1 லட்சம் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பண மோசடி செய்ததாக பிள்ளையார்குளத்தை சேர்ந்த பொம்மன், அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோர் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்ட தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளை நியமித்துள்ளனர்.
- மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட தி.மு.க. மகரளிரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
வடக்கு மாவட்டம்
தலைவர்-லதா கண்ணன், துணைத்தலை வர்-யசோதா, அமைப்பா ளர்-சரஸ்வதி, துணை அமைப்பாளர்கள்-செல்வி, வகிதா ரகுமான், உமா, ராமலட்சுமி, ராதா, வலை தள பொறுப்பா ளர்கள்-சுப ரத்தினா, தேன்மொழி.
தெற்கு மாவட்டம்
தலைவர்-சுதர்சனா, துணைத்தலைவர்-ஜெயந்தி, அமைப்பாளர்-சுமதி ராமமூர்த்தி, துணை அமைப்பாளர்கள்-சுப்புலட்சுமி, கல்பனா, கற்பகம், ஸ்ரீமதி சந்தோஷ், கவிதா, புஷ்பம், வலைதள பொறுப்பா ளர்கள்-அனுஷியா, சோனியா.
மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் செல்லையா (வயது60). இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.ஊழியர். இந்த நிலையில் இவர் மது பழக்கத்திற்கு அடிமை யானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் ரத்த காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார்.
உறவினர்கள் அதுகுறித்து விசாரித்த போது தடுமாறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செல்லையாவின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் சுப்பையா (75). இவரது மகன் வளர்ந்த பெருமான். இருவரும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தங்கியிருந்து பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
சம்பவத்தன்று அங்குள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் இருவரும் வேறு வேறு இடங்களுக்கு பலூன் விற்க சென்றனர். அப்போது கோவில் அருகே வளர்ந்த பெருமாள் மயங்கி கிடப்பதாக செல்லையாவுக்கு தகவல் வந்தது. அவர் உடனடியாக மகனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வளர்ந்த பெருமாள் பரிதாபமாக இறந்தார்.
- அரசு கால்நடை மருந்தகத்தில் ரூ.1 கோடியில் புதிய மருந்தக கட்டிடம் கட்டப்படுகிறது.
- கட்டுமான பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அரசு கால்நடை மருந்தகத்தில் ரூ.1 கோடியில் புதிய மருந்தக கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜபாளையம் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் சேத்தூரை தலைமை இடமாக கொண்டு கால்நடைகளுக்கு ஆண்டாண்டு காலமாக மருத்துவம் பார்த்து கால்நடைகளின் பெருக்கத்திற்கு பெரிதும் உதவியது சேத்தூர் கால்நடை மருத்துவமனை ஆகும்.
இந்த மருத்துவமனை குறித்து கால்நடைத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவமனை வளாகம் முழுவதும் பேவர் பிளாக் தளம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநர் ராஜராஜேசுவரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப் பொறியாளர் பால சுப்பிரமணியன், பேரூர் சேர்மன் பால சுப்பிர மணியன், பேரூர் செய லாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச் செல்வம் மற்றும் பேரூர் கவுன்சி லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பிளஸ்-2 மாணவி மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது39). இவரது 17வயது மகள் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதினார். நேற்று தேர்வு முடிவு வெளியானது. அதில் அந்த மாணவி 419 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து உறவினரின் வீட்டிற்கு தங்கையுடன் சென்று வருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால் உறவினர் வீட்டில் தங்கையை மட்டும் இறக்கி விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு அய்யனார் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.






